வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 16
கலைமகள் வாழ்த்து
வெள்ளைக் கமலத்திலே -- அவள்
வீற்றிருப் பாள், புக ழேற்றிருப் பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -- நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப் பாள்
-- பாரதி
படத்தைப் பற்றிய குறிப்பு:
1987 இல் வரைந்த கோட்டோவியம் இது. மாசு படிந்து, களையிழந்து இருந்த படத்தை ஒளிவருடி, எண்ணிம வடிவில் கணினியின் உள்ளிழுத்து, பிரகாசத்தை அதிகரித்து, குறைகளை வெளிறச் செய்து, பிரதி எடுத்து, வரிகளை மீண்டும் செப்பனிட்ட படம். பெரும்பாலும் மாதிரி பார்த்து வரையும் என் பழக்கத்தைத் தவிர்த்து, மாதிரியின்றி, மனதில் பதித்திருந்த பல படங்களில் கண்ட சரஸ்வதியின் படத்தை மனக்கண் முன் கொண்டுவந்து வரைந்த ஓவியம் என்பதால் என் மனதிற்கு நிறைவு தந்த ஓவியங்களில் ஒன்று.
நன்றி: வல்லமை - அக்டோபர் 14, 2013
#ஓவியம், #வல்லமை, Themozhi
