Showing posts with label வல்லமை. Show all posts
Showing posts with label வல்லமை. Show all posts

Tuesday, January 26, 2016

விழித்தெழட்டும் என் நாடு!

விழித்தெழட்டும் என் நாடு!

கவிதை மூலம் – இரவீந்திரநாத் தாகூர்
மொழிபெயர்ப்பு – தேமொழி

எங்கே அச்சமற்ற மனம்
தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு கட்டுப்பாட்டுக்குள்
அடங்காமல் இருக்கிறதோ
எங்கே உலகம் குறுகிய
மனப்பான்மையால் சிதறாமல் இருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின்
ஆழத்தில் இருந்து உருவாகிறதோ
எங்கே சோர்வற்ற கரங்கள்
முழுமைப்படுத்துவதில் முனைகிறதோ
எங்கே தெளிந்த நீரோட்டமான சிந்தனை பாழான
பழக்கம் என்ற பாலை மணலில் மறையவில்லையோ
எங்கே உன்மனம் என்றும் பரந்த மனப்பான்மை
கொண்ட செயல்களை முன்னெடுக்கிறதோ
அந்த விடுதலை என்னும் சொர்க்கத்தில்
என் தந்தையே, என் நாடு விழித்தெழட்டும்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

 

இரவீந்திரநாத் தாகூர்

Where The Mind Is Without Fear

– Rabindranath Tagore

“Where the mind is without fear
and the head is held high,
where knowledge is free.
Where the world has not been broken up
into fragments by narrow domestic walls.
Where words come out from the depth of truth,
where tireless striving stretches its arms toward perfection.
Where the clear stream of reason has not lost it’s way
into the dreary desert sand of dead habit.
Where the mind is led forward by thee
into ever widening thought and action.
In to that heaven of freedom, my father,
LET MY COUNTRY AWAKE!

 

Friday, December 11, 2015

வானத்தைவிடப் பரந்து விரிந்தது

 வானத்தைவிடப் பரந்து விரிந்தது


கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
மொழிபெயர்ப்பு – தேமொழி


எல்லையற்ற கற்பனைத் திறனில்
நீலவானைவிடப் பரந்து விரிந்தது
அருகருகே வைத்து ஒப்பிட்டால்
மூளையின் ஆற்றலுக்கு உட்பட்டு
அதனுள் அடங்கிவிடும் பரந்தவானமும்
அளவற்ற கற்கும் ஆற்றலில்
நீலக்கடலை விடவும் ஆழமானது
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டால்
மூளை ஒரு கடற்பஞ்சென உறிஞ்சிட
வாளிக்குள் ஒடுங்கிவிடும் ஆழ்கடலும்
நிகரற்ற படைப்பாற்றல் தகுதியில்
ஒப்பற்ற கடவுளின் சக்திக்குச் சமம்
எடைக்கு எடை ஒப்பிடுகையில்
மூளை கடவுளைவிட மாறுபடுமெனில் அது
இசையின் சந்தங்களென வேறுபடுவதே

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


The Brain—is wider than the Sky—
– Emily Dickinson


The Brain—is wider than the Sky—
For—put them side by side—
The one the other will contain
With ease—and You—beside—
The Brain is deeper than the sea—
For—hold them—Blue to Blue—
The one the other will absorb—
As Sponges—Buckets—do—
The Brain is just the weight of God—
For—Heft them—Pound for Pound—
And they will differ—if they do—
As Syllable from Sound—



நன்றி: வல்லமை
டிசம்பர்  11, 2015


#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 


Wednesday, December 9, 2015

இறுதிப் பயணம் …

இறுதிப் பயணம் …


கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
மொழிபெயர்ப்பு – தேமொழி


சாவை நான் எதிர்நோக்காததால்
காலனே கனிவுடன் எனைத்தேடி வந்தான்
மறுவுலகம் செல்லும் மரணத்தேரிலே
காலனுடன் என் இறுதிப்பயணம்
மெதுவாக ஊர்ந்தே நாங்கள் சென்றோம்
காலனுக்கு எந்த ஓர் அவசரமுமில்லை
அவன் கருணையை மதித்தே நானும் எனது
உழைப்பிற்கும் ஓய்விற்கும் விடைகொடுத்தேன்
இடைவேளை மணியொலிக்க
பள்ளித் திடலில் விளையாடும்
குழந்தைகளைக் கடந்தோம்
வெறித்து நோக்கும்
வயல்வெளிக் கதிர்களையும்
மறையப் போகும்
மாலைக் கதிரவனையும் கடந்தோம்
இல்லை, கதிரவன்
எங்களைக் கடந்தே சென்றான்
மாலைப்பனியின் நடுக்கும் குளிரைத்
தடுக்கும் திறனற்றுப் போனதென்
மெல்லிய ஆடையும் சால்வையும்
மணல் திட்டின் மீதிருந்த
மாளிகையின் முன்னே
மரணத்தேரைச் சற்றே நிறுத்தினோம்
மண்ணில் புதைந்து புலப்படவில்லை
மாளிகையின் கூரையும் அதன் முகடும்
நூற்றாண்டுகள் பல கடந்தாலும்
அன்று நடந்தவை யாவுமே
நேற்று நிகழ்ந்தவையாக நெஞ்சில்
நிலைத்துப்போன நினைவுகள்
நான் எண்ணியவாறே அழிவற்ற
நிரந்தர வாழ்வை நோக்கிப்
பயணித்தன மரணத்தேரின் குதிரைகள்


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


Because I could not stop for Death
- Emily Dickinson

Because I could not stop for Death –
He kindly stopped for me –
The Carriage held but just Ourselves –
And Immortality.
We slowly drove – He knew no haste
And I had put away
My labor and my leisure too,
For His Civility –
We passed the School, where Children strove
At Recess – in the Ring –
We passed the Fields of Gazing Grain –
We passed the Setting Sun –
Or rather – He passed us –
The Dews drew quivering and chill –
For only Gossamer, my Gown –
My Tippet – only Tulle –
We paused before a House that seemed
A Swelling of the Ground –
The Roof was scarcely visible –
The Cornice – in the Ground –
Since then – ’tis Centuries – and yet
Feels shorter than the Day
I first surmised the Horses’ Heads
Were toward Eternity –
 


நன்றி: வல்லமை
டிசம்பர்  9, 2015



#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 


Friday, November 27, 2015

நடைபாதையின் முடிவில் …

 நடைபாதையின் முடிவில் …


கவிதை மூலம் – ஷெல் சில்வர்ஸ்டீன்
மொழிபெயர்ப்பு – தேமொழி


நடைபாதையின் முடிவிலோர் இடமுண்டு
அங்கே சாலை துவங்கும் முன்
அங்கே வெண்மையாய் மென்மையாய் வளரும் புல்லுண்டு
அங்கே ஒளிவீசும் செங்கதிரவனுண்டு
அங்கே பறந்து ஓய்ந்த நிலாப்பறவை
இளைப்பாறத் துளசியின் குளிர்க்காற்றுமுண்டு

கரும்புகை வீசுமிடத்தை விட்டு நாம் சென்றுவிடுவோம்
வளைந்து நெளிந்து செல்லும் இருண்ட சாலைகளை விட்டு
தார்ச்சாலையின் குழிகளில் பூத்திருக்கும் மலர்களைவிட்டு
காலால் நிலமளப்பதுபோல் மெதுவே மிகமெதுவே நடந்து
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறிகளைத் தொடர்ந்து
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்

ஆம் நிலமளப்பதுபோல் மெதுவே மிக மெதுவே நடப்போம்
வெள்ளைச் சுண்ணாம்பு அம்புக்குறி காட்டுமிடம் போவோம்
குழந்தைகளுக்காகக் குறிக்கப்பட்ட, குழந்தைகள் நன்கறியும்
நடைபாதை முடியுமிடம் நோக்கி நாம் செல்வோம்


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


Where The Sidewalk Ends
– by Shel Silverstein


There is a place where the sidewalk ends
and before the street begins,
and there the grass grows soft and white,
and there the sun burns crimson bright,
and there the moon-bird rests from his flight
to cool in the peppermint wind.

Let us leave this place where the smoke blows black
and the dark street winds and bends.
Past the pits where the asphalt flowers grow
we shall walk with a walk that is measured and slow
and watch where the chalk-white arrows go
to the place where the sidewalk ends.

Yes we’ll walk with a walk that is measured and slow,
and we’ll go where the chalk-white arrows go,
for the children, they mark, and the children, they know,
the place where the sidewalk ends.


நன்றி:  வல்லமை
நவம்பர்  27, 2015


#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 



Wednesday, November 25, 2015

நான் யார்?

நான் யார்?


கவிதை மூலம் – கார்ல் சாண்ட்பர்க்
மொழிபெயர்ப்பு – தேமொழி


விண்மீன்களை என்தலை மோதிடும்
மலையுச்சியில் என் பாதங்கள் பதிந்திடும்
பள்ளத்தாக்கிலும், எங்கெங்கும் நிறைந்திருக்கும்
வாழ்வின் கரையிலும் என் விரல்நுனிகள் திளைத்திருக்கும்

ஓசையுடன் நுரை பொங்கும் ஆதி அலைகளின்
ஆழத்தில் விதியெனும் கூழாங்கற்களை
என் கரங்களால் துழாவி நான் விளையாடுவேன்

நான் பலமுறை நரகத்திற்குச் சென்று வந்திருக்கிறேன்
நான் கடவுளுடன் பேசியுள்ளேன், சொர்க்கம் பற்றியும் நன்கறிவேன்
நான் கொடியவரின் குருதியிலும் துணிவிலும் மூழ்கியிருக்கிறேன்
ஆசையாய் கவர்ந்திழுக்கும் அழகினை நான் அறிவேன்
தவிர்த்திடு என அறிவித்தால், அதனை எதிர்த்திடும்
மனிதரின் அதிசயக் குணத்தையும் நான் அறிவேன்

எனது பெயர் உண்மை, உலகில் யார் கட்டுப்பாட்டிலும்
கட்டுண்டிருப்பதில்லை நான்

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
 

 Who Am I?
– Carl Sandburg


My head knocks against the stars.
My feet are on the hilltops.
My finger-tips are in the valleys and shores of
universal life.
Down in the sounding foam of primal things I
reach my hands and play with pebbles of
destiny.
I have been to hell and back many times.
I know all about heaven, for I have talked with God.
I dabble in the blood and guts of the terrible.
I know the passionate seizure of beauty
And the marvelous rebellion of man at all signs
reading “Keep Off.”

My name is Truth and I am the most elusive captive
in the universe.



நன்றி:  வல்லமை
நவம்பர் 25, 2015




#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 



Friday, November 20, 2015

கனவிலோர் கனவு

 கனவிலோர் கனவு


கவிதை மூலம் – எட்கர் ஆலன் போ
மொழிபெயர்ப்பு – தேமொழி


நெற்றியிலிடும் முத்தத்தை ஏற்றுக்கொள்
உன்னைப் பிரியும் இவ்வேளையில்
நானும் ஒப்புக்கொள்கிறேன்
நீ சொன்னதில் தவறில்லையென
எனது வாழ்வே ஒரு கனவுதான்
என் நம்பிக்கையும் பறந்தோடிவிட்டால்
ஓரிரவிலோ, ஒரு நாளிலோ
பார்வையொன்றிலோ, அது இல்லாமலோ
அதனால் ஏதேனும் குறைவா?
நாம் பார்த்ததும், பார்ப்பதெல்லாம்
வெறும் கனவில் ஓர் கனவல்லவா?

ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகள்
மோதும் கரையில் நான் நிற்கையில்
என் கைப்பிடியில் இருக்கும்
பொன் மணல் துகள்களின்
அளவோ மிகவும் கொஞ்சம்,
அதுவும் நான் அழ அழ என்
விரலிடுக்கின் வழி நழுவுகிறதே
கடவுளே! என்னால் அவற்றை
இறுகப் பிடிக்க முடியாதா?
கடவுளே! இரக்கமற்ற அலையிடமிருந்து
ஒன்றையேனும் என்னால் காப்பாற்ற இயலாதா?
நாம் பார்த்ததும் பார்ப்பதெல்லாம்
வெறும் கனவில் ஓர் கனவுதானா?

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
 

A Dream Within a Dream
– Edgar Allan Poe


Take this kiss upon the brow!
And, in parting from you now,
Thus much let me avow—
You are not wrong, who deem
That my days have been a dream;
Yet if hope has flown away
In a night, or in a day,
In a vision, or in none,
Is it therefore the less gone?
All that we see or seem
Is but a dream within a dream.

I stand amid the roar
Of a surf-tormented shore,
And I hold within my hand
Grains of the golden sand—
How few! yet how they creep
Through my fingers to the deep,
While I weep- while I weep!
O God! can I not grasp
Them with a tighter clasp?
O God! can I not save
One from the pitiless wave?
Is all that we see or seem
But a dream within a dream?


நன்றி: வல்லமை
நவம்பர் 20, 2015


#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 



Wednesday, November 18, 2015

அவள் அழும்பொழுது …

 அவள் அழும்பொழுது …


கவிதை மூலம் – ஷெல் சில்வர்ஸ்டீன்
மொழிபெயர்ப்பு – தேமொழி


யாருமே அறிவதில்லை என்னவளின் தனிமையை
யாருக்கும் புரிவதில்லை என்னவளின் ஆழ்மனதில்
உறையும் அச்சங்களும் கனவுகளும் என்னவென்று
அவளது அன்பிலும் சிரிப்பிலும் பங்கு கொண்டோருண்டு
ஆனால் அவளது கண்ணீரை அறிந்தவரில்லை… என்னைத்தவிர
யாரும் அவளது துயரத்தைப் புரிந்தவரில்லை

அவள் அழும்பொழுது வானில் பறந்து
ஒளி வீசும் சூரியனைக் கொணர்ந்து
அவளின் மனத் துயரைக் களைந்து
அவளது வாழ்வில் ஒளியேற்ற ஆசைவரும்
அவளின் துயர் நீக்கும் எண்ணம் வரும்

அதிகாலையின் இளம் பனிச்சாரலில்
வெறும் பாதத்துடன் உலவிடும் நேரம்
அவளது விழிகளில் சென்ற நாட்களின்
பொன்னான கனவுகள் மின்னிடும்
அந்திமாலை நேரமோ சோகமது கவிந்திட
அச்சம் கொண்டே அழுவாள் … எனக்காக
அச்சம் கொண்டே அவள் அழுவாள்

உன்னறையில் உனதருகே உன்விளக்கொளியில்
அவளுடன் நீ கிசுகிசுத்துப் பேசியிருந்தாலும் சரி
ரகசியப் புன்னகையைப் பகிர்ந்திருந்தாலும் சரி
ஆனால் அவளது சோகத்தில் என்னிடம் அனுப்பிவிடு
அவள் அழும்பொழுது நான் அவளுக்குத் தேவை

அவள் அழும்பொழுது வானில் பறந்து
ஒளி வீசும் சூரியனைக் கொணர்வேன்
ஆகையால் அழும்பொழுது என்னிடம் அழைத்துவா
என்னவள் அழும்பொழுது நான் அவளுக்குத் தேவை

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆



When She Cries
– Shel Silverstein


No one knows my lady when she’s lonely
No one sees the fantasies and fears my lady hides
There are those who’ve shared her love and laughter
But no one hears my lady when she cries…but me
No one hears my lady when she cries

And when she cries she makes you wanna run
And chase the sun and bring it back
To brighten up a corner of her dark and troubled skies
When she cries

She walks barefoot through the misty mornin’
Dreams of golden yesterdays reflectin’ in her eyes
But soon the evenin’ shadows crowd around her
Frightening my lady till she cries…for me
Frightening my lady, till she cries

You may have seen her lyin’ in your lamplight
And if you’ve heard her whispered words, it comes as no surprise
So be the one she shares her secret smiles with
But send me back my lady when she cries…for me
My lady’s gonna need me when she cries

And when she cries she makes you wanna run
And chase the sun and bring it back
So bring me back my lady when she cries… For me
‘Cause my lady’s gonna need me when she cries


நன்றி:  வல்லமை
நவம்பர்  18, 2015


#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 




Friday, November 13, 2015

தனிமையிலே …

 தனிமையிலே …

கவிதை மூலம் – எட்கர் ஆலன் போ
மொழிபெயர்ப்பு – தேமொழி


நினைவு தெரிந்த நாள்முதலாக
நான் வாழவில்லை பிறரைப் போல
எனக்கு வாழ்க்கையுமில்லை பலரைப் போல
என் ஆசைகளின் நீரோட்டம்
தோன்றிய நீரோடையும் வேறுபட்டது
என்னை வருத்தும் துயரங்களின்
தோற்றமும் முற்றிலும் வேறுபட்டது
எனது இதயத்தை மீட்டிடும் இன்ப
இசையின் ராகமும் வேறுபட்டது
அனைத்தையுமே நான் நேசித்தேன்
நேசித்தேன் நான் தன்னந்தனியாகவே!
என் சிறுவயதிலிருந்தே, புயல்வீசும்
என் வாழ்வின் அந்த விடியல் முதலே
என் வாழ்வின் ஏற்றத்திலும் தாழ்விலும்
என்னைக் குழப்புமிந்தப் புரியாத புதிர்
காட்டாற்று வெள்ளமானாலும்
கவின் மிகு நீரூற்றானாலும்
செந்நிற மலைமுகட்டிலும்
பொன்னிற ஒளிவீசும்
கூதிர்காலக் கதிரவனிலும்
என்னைக் கடந்து செல்லும் புயலிலும்
அதன் மின்னலிலும் இடியோசையிலும்
தெளிந்த நீலவானில் திரண்டிடும்
உருமாறிடும் மழைமேகத்திலும்
நான் காண்பதென்னவோ
அச்சமூட்டும் பேயுரு மட்டுமே!


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆ 


Alone
– Edgar Allan Poe

From childhood’s hour I have not been
As others were; I have not seen
As others saw; I could not bring
My passions from a common spring.
From the same source I have not taken
My sorrow; I could not awaken
My heart to joy at the same tone;
And all I loved, I loved alone.
Then- in my childhood, in the dawn
Of a most stormy life- was drawn
From every depth of good and ill
The mystery which binds me still:
From the torrent, or the fountain,
From the red cliff of the mountain,
From the sun that round me rolled
In its autumn tint of gold,
From the lightning in the sky
As it passed me flying by,
From the thunder and the storm,
And the cloud that took the form
(When the rest of Heaven was blue)
Of a demon in my view.


நன்றி: வல்லமை
நவம்பர்  13, 2015




#கவிதை, #மொழிபெயர்ப்பு, #வல்லமை #Themozhi 




Wednesday, November 11, 2015

தனிமையிலே …

 தனிமையிலே …



கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி

வாழ்வின் உண்மையை உணர்ந்திராத
எனது உறக்கமற்ற நேற்றிரவில்
என்னில் எழுந்தது ஓர் சிந்தனை …
எங்கே தேடுவேன்?
என் ஆன்மாவிற்கான புகலிடத்தை,
எங்கே தண்ணீரே தாகத்துடன் நீர் தேடாத,
ரொட்டியும் கல்லாகிப் போகாத இடத்தை
எங்கே நான் காண்பேன்?
எனக்கு விடையொன்று கிடைத்தது,
அதுவும் சரியென்று தெரிந்தது,
அது… யாரும், எவரும் இங்குத்
தனிமையில் வாழ முடியாது.

தனியே தன்னந்தனியே
யாரும், எவரும் இங்குத்
தனித்து வாழ்ந்திட இயலாது.

செல்வந்தரும் சிலர் இங்குள்ளனர்
மகிழ்ச்சியைச் சிறிதும் வாங்கமுடியாத
பயனற்ற பணக்குவியலுடன்,
ஊளையிட்டே எங்கும் அலையும்
மோகினிப் பேய்களான மனைவியருடன்,
உள்ளத்தின் சோகமதைக் கீதமாக இசைக்கும்
துயரத்தில் வாடும் பிள்ளைகளுடன்,
திறமையான அவர்களது
மருத்துவர்களாலும் குணப்படுத்த முடியாத
கல்லாகிப்போன மனதுடன்
ஆனால் … யாரும், எவரும் இங்குத்
தனிமையில் வாழ முடியாது.

தனியே தன்னந்தனியே
யாரும், எவரும் இங்குத்
தனித்து வாழ்ந்திட இயலாது.

சொல்வதைக் கவனமாகக்
கேட்பீர்கள் என்றால்
சொல்லிவிடுவேன் அறிந்து கொண்டதை
நானும் உங்களுக்கு.
புயல் மேகங்கள் சூழ்கின்றன
பெருங்காற்றும் வீசத் துவங்கும்
மனிதயினம் துயரத்தில்
வாடுகிறது
அவர்தம் புலம்பலும்
கேட்கிறது
ஏனெனில் … யாரும், எவரும் இங்குத்
தனிமையில் வாழ முடியாது.

தனியே தன்னந்தனியே
யாரும், எவரும் இங்குத்
தனித்து வாழ்ந்திட இயலாது.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


Alone
- Maya Angelo

Lying, thinking
Last night
How to find my soul a home
Where water is not thirsty
And bread loaf is not stone
I came up with one thing
And I don’t believe I’m wrong
That nobody,
But nobody
Can make it out here alone.

Alone, all alone
Nobody, but nobody
Can make it out here alone.

There are some millionaires
With money they can’t use
Their wives run round like banshees
Their children sing the blues
They’ve got expensive doctors
To cure their hearts of stone.
But nobody
No, nobody
Can make it out here alone.

Alone, all alone
Nobody, but nobody
Can make it out here alone.

Now if you listen closely
I’ll tell you what I know
Storm clouds are gathering
The wind is gonna blow
The race of man is suffering
And I can hear the moan,
‘Cause nobody,
But nobody
Can make it out here alone.

Alone, all alone
Nobody, but nobody
Can make it out here alone.




நன்றி:  வல்லமை
நவம்பர்  11, 2015

#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 

 

Friday, September 18, 2015

புலியே! புலியே!

புலியே! புலியே!


கவிதை மூலம் – வில்லியம் ப்ளேக்
மொழிபெயர்ப்பு – தேமொழி

புலியே! புலியே! கவின்மிகு கானக
இருளில் சுடரென ஒளிரும் புலியே
தெய்வீக கரமோ விழியோ கொண்டு உன்
அச்சமூட்டும் வடிவைச் செதுக்கியவர்தான் யாரோ?

அகிலத்தின் ஆழ் தொலைவிலுள்ள எந்த ஆற்றல்
கனல் உமிழும் கங்காக்கியது உன் கண்களை?
உன் கண்களின் கனலைக் கண்டும் விரும்பி
துணிவுடன் உன்னைப் படைத்ததும்தான் ஏனோ?

எத்தகைய உறுதியான தோள்களும், வித்தையும்
துடிக்குமுன் இதயத்தை இயங்கவைத்திருக்கும் ?
உயிர்த்தெழுந்த உன்னைக் கண்டு அஞ்சி ஓடிடாது
தொடர்ந்துன்னைப் படைத்துவிட்ட துணிவுதான் என்ன?

சுத்தியலா, சம்மட்டியா? கனல்கக்கும் கொதிக்கும்
உலைக்கலன்தானா? எதுவழங்கியது ஆற்றலுனக்கு?
கொல்லன்பட்டறையின் எந்தத் திறமை துணிந்தது
உன்போன்றதொரு ஆபத்தினை உருவாக்கிட?

அச்சமூட்டும் ஆபத்தான உன் ஆற்றலினால்
அகண்டமும் அகிலமும் கலங்கியதைக் கண்டு
படைத்தவர் உன்னைப் படைத்ததற்கு மகிழ்ந்தாரா?
ஆட்டையும் படைத்து உன்னையும் படைத்ததேனோ?

புலியே! புலியே! கவின்மிகு கானக
இருளில் சுடரென ஒளிரும் புலியே
தெய்வீக கரமோ விழியோ கொண்டு உன் போன்ற
அபாயத்தைத் தோற்றுவித்தவர் துணிவுதான் என்னே!


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆



The Tyger
–William Blake

Tyger Tyger, burning bright,
In the forests of the night;
What immortal hand or eye,
Could frame thy fearful symmetry?

In what distant deeps or skies.
Burnt the fire of thine eyes?
On what wings dare he aspire?
What the hand, dare seize the fire?

And what shoulder, & what art,
Could twist the sinews of thy heart?
And when thy heart began to beat,
What dread hand? & what dread feet?

What the hammer? what the chain,
In what furnace was thy brain?
What the anvil? what dread grasp,
Dare its deadly terrors clasp!

When the stars threw down their spears
And water’d heaven with their tears:
Did he smile his work to see?
Did he who made the Lamb make thee?

Tyger Tyger burning bright,
In the forests of the night:
What immortal hand or eye,
Dare frame thy fearful symmetry?



நன்றி: வல்லமை
செப்டெம்பர் 18, 2015

 
#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, Themozhi 





Wednesday, August 26, 2015

லேஸ்லோ க்ரேசேஹார்க்கை

லேஸ்லோ க்ரேசேஹார்க்கை




‘லேஸ்லோ க்ரேசேஹார்க்கை’ (László Krasznahorkai) என்ற ‘ஹங்கேரிய மொழி’ (Hungarian) எழுத்தாளர் சிறந்த இலக்கியப் படைப்பாளருக்கான 2015 ஆண்டின் ‘மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு’ (Man Booker International Prize) பரிசினைப் பெற்றுள்ளார்.

ஹங்கேரியைச் சேர்ந்த 61 வயதாகும் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, சமூகத்தின் இருண்ட பகுதியை, ஆழ்ந்த தீவிரமான முறையில் விவரிக்கும் புனைகதைகளின் மூலமும், மாறுபட்ட எழுத்து நடையின் மூலமும் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர். இவருடைய படைப்புகள் ‘பின் நவீனத்துவம்’ பிரிவில் அடங்குவன. இவரது புகழ்பெற்ற கதைகள் சில ஹங்கேரிய மொழியில் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.

‘ஷத்தன்டங்கோ’ (Satantango), ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ்’ (The Melancholy of Resistance) ஆகிய இரு நூல்களும் அவ்வகையில் திரைப்படங்களாக வெளிவந்தவற்றில் குறிப்பிடத்தக்கன. இவரது நூல்களில் சில ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கியப் பங்களிப்பிற்காக இருபதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றவர் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை. அவற்றில் ‘காசத் பரிசு’ (Kossuth Prize), ‘வெலேனிக்கா பரிசு’ (Vilenica Prize) ஆகியவையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் புதினமான ஷத்தன்டங்கோ மூலமே இவர் முன்னணி எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பிடித்தவர்.

மான் புக்கர் இண்டர்நேஷனல் பரிசு என்பது உலகளாவிய முறையில், ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் ஆசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரது கற்பனையில் உருவான சொந்தப் படைப்புகள், உலக புத்திலக்கியத்தில் ஆற்றிய பங்கினைப் பாராட்டி வழங்கப்படுகிறது. வாழும் எழுத்தாளர் ஒருவரின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் இப்பரிசு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

எழுத்தாளரின் பரிசுக்குரிய தகுதி பற்றி ஆராய பரிசுக் குழுவின் நடுவர்களே படைப்பாளிகளைத் தேர்ந்தெடுப்பார்கள், பிறருடைய பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது இப்பரிசுக்காக நடத்தப்படும் போட்டியின் விதி. எழுத்தாளரின் இலக்கியத்திற்கான தொடர் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் பரிசு என்பதால் இதைக் குறிப்பிட்ட ஒருநூலுக்கான பரிசு என்பதைவிட எழுத்தாளரின் தொடர்ந்த இலக்கியப் பணி பாராட்டப்படுகிறது என்ற வகையில் இப்பரிசு அமைகிறது.

மான் புக்கர் இண்டர்நேஷனல் பரிசு 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் பரிசு பெற்றவர் அல்பேனியா எழுத்தாளர் ‘இஸ்மாயில் கடரே’ (Ismail Kadare), இவரது அல்பேனிய மொழி இலக்கியங்களுக்காகப் பாராட்டப்பட்டார். இப்பொழுது ஆறாவது விருதாளராக லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, ஹங்கேரி மொழியில் படைத்த இலக்கியங்களுக்காக இப்பரிசைப் பெற்றுள்ளார். பரிசுபெற்ற ஏனைய எழுத்தாளர்கள் கனடா, அமெரிக்கா, நைஜீரியா என்ற பலநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அவர்கள் படைத்த ஆங்கில இலக்கியங்களுக்காகப் பரிசு பெற்றனர்.

இப்பரிசுத் தொகையின் மதிப்பு 60,000 பிரித்தானிய வெள்ளிகள், எழுத்தாளர் வாழ்நாளில் ஒருமுறைதான் தேர்ந்தெடுக்கப்படுவார். நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருக்கும் 15,000 பிரித்தானிய வெள்ளிகள் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் பரிசுக்காகக் கருதப்பட்ட எழுத்தாளர்களில் ‘அமிதவ் கோஷ்’ (Amitav Ghosh) என்ற இந்திய எழுத்தாளரும் அடங்குவார்.
[குறிப்பு: ‘மான் புக்கர் புனைகதை விருது’ (Man Booker Prize for Fiction) என்னும் வேறோர் விருதை, இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி ராய் (The God of Small Things), கிரண் தேசாய் (The Inheritance of Loss), அரவிந்த் அடிகா (The White Tiger) ஆகியோர் வென்றுள்ளனர்.]

ஷத்தன்டங்கோ (Satantango), தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ் (The Melancholy of Resistance), வார் அண்ட் வார் (War & War), செய்போ தெர பெல்லோ (Seiobo There Below), அனிமல் இன்சைட் (Animal inside), எசர்கோர்ல் ஹேக் தெரல் தொ, நியூகத்ரோல் உத்தக், கெலத்ரோல் ஃபால்யோ (Északról hegy, Délről tó, Nyugatról utak, Keletről folyó), தி பில ஃபார் பால்மா வெச்சியோ அட் வெனிஸ் (The Bill: For Palma Vecchio, at Venice), அஸ் உட்ல்லுசோ ஃபார்க்கஸ் (Az utolsó farkas), மியுசிக் அண்ட் லிட்டரேச்சர், இஷ்யு (Music & Literature: Issue 2), அஸ் உர்கை ஃபோகொலி (Az urgai fogoly) ஆகிய நூல்களை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை எழுதியுள்ளார்.

இவரது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியவர்கள் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) மற்றும் ‘ஒத்திலியே மொசாட்’ (Ottilie Mulzet) ஆகியோர். மான் புக்கர் இண்டர்நேஷனல் வழங்கிய மொழிபெயர்ப்பாளருக்கான பரிசுத் தொகையை இவரது இந்த இரு மொழி பெயர்ப்பாளர்களும் பகிர்ந்து கொண்டனர்.

‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ்’ அல்லது ‘எதிர்ப்பினால் விளையும் துயரம்’ என்ற பொருள்படும் புதினம் பற்றி சற்றே விரிவான முறையில் இக்கட்டுரையில் காணலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கை அவர்கள் ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ்’ (The Melancholy of Resistance) என்ற புனைகதைப் புதினத்தை , 1989 ஆம் ஆண்டு ‘ஏஸி எல்லானலாஸ் மெலன்காலியஹா’ (Az ellenállás melankóliája) என்ற தலைப்பில் ஹங்கேரிய மொழியில் வெளியிட்டார். இந்நூல் ஆங்கிலத்தில் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும், இந்தப் புதினம் ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனியாக்’ (Werckmeister harmóniák) என்று ஹங்கேரிய மொழியிலும், ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ்’ (Werckmeister Harmonies) என்ற ஆங்கிலத் தலைப்பில், புகழ் பெற்ற இயக்குநர் ‘பெலா டார்’ (Béla Tarr) இயக்கத்திலும் தயாரிப்பிலும் 2001ஆம் ஆண்டு ஹங்கேரிய மொழித் திரைப்படமாக வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்றது.

அப்படத்தின் திரைக்கதையை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, இயக்குநர் பெலா டார் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ் என்பது தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ் புதினத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பு. அது இசை மேதை ‘ஆண்ட்ரியஸ் வெர்க்மெய்ஸ்ட்டர்’ (Andreas Werckmeister) அவர்களின் இசைக் கோட்பாடானது, சுருதிபேதங்கள் என்பவை இசையின் ஒரு பகுதி என்று வரையறுப்பது போல, மக்களிலும் குறையற்றவர்கள் இருப்பது கிடையாது என்ற தத்துவ நோக்கை அடிப்படைக் கருத்தாகக் கொண்டது. வாழ்வில் இடர்கள் வந்து செல்வதை, “இது கடந்து சென்றது, ஆனால் முற்றிலும் மறையவில்லை” (“It passes, but it does not pass away”) என்று; இடர் நமக்கு வந்தது முடிந்துவிட்டது, ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் வாழ்க்கை அமைந்துள்ளது என்ற தத்துவத்தை நூலின் முதலில் வரும் சொற்றொடர் நூலைப் பற்றிக் குறிப்பால் உணர்த்துகிறது.

இந்த நூல் பொழுது போக்காகப் படித்துவிட்டுச் செல்லக்கூடிய ஒரு நூலல்ல; ஆழ்ந்து படிக்கும் வகையில் அமைந்த தத்துவக் கருத்துகள் கொண்ட ஒரு கற்பனைப் புதினம். கதைக்களம் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் பிடியில் அகப்பட்ட ஹங்கேரியின் நிலையை மறைமுகமாக உணர்த்தும் உருவக நோக்கில் அமைக்கப்பட்டது எனவும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் கதை நடைபெறுவதாக நகரத்தின் இடக்குறிப்புகள் கூறுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும், கதையின் காலம் தொலைக்காட்சி, தொலைபேசி, இரயில் பயணம் என இக்கால வசதிகள் யாவும் பரவலாகிவிட்ட பிற்கால நிகழ்வுகளைக் கொண்டுள்ளதுடன், கதை நிகழும் இடம் ஹங்கேரியின் சிறிய நகரொன்று என்றுதான் காட்டப்படுகிறது. ஆனால் கதையின் எந்த ஓர் இடத்திலும் நகரின் பெயர் கொடுக்கப்படவில்லை. கிழக்கு ஐரோப்பாவின் அரசியலையும், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் இந்த நூல் தருகிறது என்பது இதன் சிறப்பு.

இந்த நூலில் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள ஒன்று எழுத்தாளரின் எழுத்தின் நடையாகும். முக்கியமாக இவரது எழுத்து நடை அனைவரும் படிக்க ஆர்வமூட்டும் வகையில் அமைந்திருக்கவில்லை. எழுத்து வழியாக ஒரு கருத்து வாசிப்பவரை எளிதில் சென்றடையத் தேவையானால் அதற்கென சில வரைமுறைகள் உண்டு. இந்த வரைமுறைகள் கட்டாயம் அல்ல என்றாலும் அது வாசிப்பவரை எழுத்தை நோக்கி ஈர்க்கும் வகையில், புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க விரும்பும் வகையில் அமைந்திருப்பது எழுத்தாளரின் எழுத்துப் பரவலுக்கு உதவும். எழுத்து நடை சுஜாதா போலவும் இருக்கலாம் அல்லது சாண்டில்யன் போலவும் இருக்கலாம், அது எழுத்தாளரின் தனித்தன்மையைக் காட்டும். அவர்கள் கூறும் கருத்தும் வரலாறாகவும் இருக்கலாம் அல்லது மர்மக் கதையாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கியங்கள் மிகவும் எளிமையாக, சிறு சிறு வரிகளாக, ஒவ்வொரு கருத்தும் தனித் தனியே பத்தி பிரிக்கப்பட்டு அமைப்பது வாசகரைக் கவரும் எழுத்தின் அடிப்படைப் பண்பு. இந்த அடிப்படை எதிர்பார்ப்பை முற்றிலும் தகர்த்து எறிகிறது லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடை.

இக்கதையில் ஒரு பக்கத்தில் தொடங்கும் வரி அடுத்த பக்கத்திலும் முடியலாம், அல்லது அதற்கும் அடுத்த பக்கத்திலும் கூட முடியலாம். குறைந்தது 300 வார்த்தைகளுக்குப் பின்னரே ஒரு வாக்கியம் முடிவடைகிறது. வரிகளில் பல காற்புள்ளிகளைக் கொண்டே பல வாக்கியங்களாக எழுதக் கூடிய செய்தியை ஒரே வாக்கியமாக எழுதும் உத்தியைக் கடைப் பிடித்துள்ளார் ஆசிரியர். அதற்கேற்பக் காற்புள்ளிகளை முற்றுப் புள்ளிகளாக மதித்துப் படிக்கும் வகையில் நம்மை மாற்றிக் கொண்டால் படிப்பது எளிதாகிவிடுகிறது. பத்தி என்பதே இல்லாத நூல் இருக்கலாம் என்பதையும் எழுத்தாளரின் எழுத்துமுறை காட்டுகிறது. இதை அப்படியே அவர் நடையிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரின் திறமைதான் மிகவும் பாராட்டிற்குரியது.

எழுத்தாளரின் வார்த்தைகளின் தேர்வு பாத்திரங்களின் மனநிலையையும், குணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைவதுடன், சூழ்நிலையைக் கண்முன் நிறுத்தும் சரியான வகையில் அமைவதால் நாமும் கதைக் களத்தில் ஒருவராக மாறிவிடும் தோற்றத்தை உருவாக்குகிறது. இவரது வார்த்தைகளைத் தொடர்ந்து வாசிப்பது ஓர் இசை போலக் கூட அமைந்திருக்கிறது, இதனை உரத்து வாசிக்கும் பொழுதோ அல்லது பிறரை வாசிக்கச் சொல்லிக் கேட்கும் பொழுதோ உணரலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடையில் கருத்தைக் கவரும் மற்றொன்று, அவர் பல இடங்களில் வாக்கியங்களைத் தமிழில் நாம் ‘அந்தாதி’ என்று கூறும் வகை போல அமைத்திருக்கும் முறை. ஒரு வாக்கியத்தின் முடிவு அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக அமையுமாறு பல இடங்களில் எழுதியுள்ளார்.
காட்டாக, கீழ்வரும் வரிகளைக் கருத்தில் கொள்ளலாம்…
“at which point he took a tight grip of Valuska’s arm and continued on his way. He continued on his way, having decided that Valuska …”
மற்றும்,
“he had nevertheless to acknowledge that Mrs Harrer’s chattering had not been entirely beside the point. Not entirely beside the point, that was true …”
தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்ட்டன்ஸ் கதை ஒரு நவம்பர் 30 ஆம் தேதி மாலை, அதிகக் குளிர் நிறைந்த நாளொன்றில் தொடங்கி, அடுத்த இரண்டு நாட்களில் ஒரு சிறுநகரையும், அங்கு மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்ட சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பயன்படுத்தி ஊருக்குள் நுழையும் நூற்றுக்கணக்கான முரடர்களையும், அவர்களில் முப்பதுக்கும் சொச்சமான கேடிகளின் கைகளில் நகரம் சின்னாபின்னம் அடைவதையும் சித்தரிக்கிறது. சர்க்கஸ் நிகழ்த்துவோர் பாடம் செய்யப்பட்ட மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்றை மிகப் பெரிய ட்ரக் ஒன்றில் காட்சிப் பொருளாக வைத்துக் கட்டணம் வசூலித்து மக்களைப் பார்க்க அனுமதிக்கிறார்கள். அதைத் தவிர்த்து வேறு வித்தைகள் எதுவும் நடத்தவில்லை, அல்லது வித்தைக் காட்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும் முன்னர் நிலைமை மாறிவிட்டதா என ஆசிரியர் குறிப்பிடவும் இல்லை. திமிங்கிலத்தை மட்டுமே டிசம்பர் முதல்நாள் அன்று சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைக்கிறது.

இதற்கிடையில் நகருக்கு வரப்போகும் ஆபத்தை மக்களில் சிலர் உணர்ந்துவிடுவதால் அச்செய்தி வதந்தி போல நகரத்திலும் பரவத் தொடங்குகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு அந்தச் சிறிய நகர், முரடர் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி நகர மக்களில் பலரும் உயிரையும் உடமைகளையும் இழக்கிறார்கள். அழிவுக்குக் காரணமான போக்கிரிகள் சிலரும் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதன் பிறகு, இரண்டு வாரம் கடந்த பின்னர் நகரின் நிலையில் ஏற்பட்ட மாற்றம், கதையின் இறுதியில் மிகச் சுருக்கமாகப் பின்னுரை பகுதியில் சொல்லப்படுகிறது. கலவரத்திற்கு முன்னர் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்ட முன்னுரையாக வரும் முதல் அத்தியாயப் பகுதி ஒரு சிறு கதை போலவும், கலவரத்தின் பின்விளைவுகள் ஒரு சிறு தனிக்கதை போலவும் தோற்றம் அளிக்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது.

நவம்பர் மாதத்தின் இறுதி நாளிலும், டிசம்பரின் முதல் இரண்டு நாட்களில் நகரில் நடைபெறும் கலவரத்தினால் ஏற்படும் மாற்றங்கள் நகர மக்களில் யார் யாரை எவ்விதம் பாதிக்கிறது, பிறகு அவர்கள் நிலை என்னவாகிறது என்பதையே கதை சித்தரிக்கிறது. கதையில் பல நகர மாந்தர்கள் குறிப்பிடப்பட்டாலும் கதையின் முக்கியமான பாத்திரம் என்பது, பதவியையும் அதிகாரத்தையும் அடைவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் “மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர்” (Mrs. Tünde Eszter) என்ற 52 வயதுப் பெண்மணியா; அல்லது நகரில் நடக்கும் அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டும், முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கும், வயதிற்கேற்ற மனமுதிர்ச்சியற்று, தன்னுடைய கனவுலகில் காலத்தைத் தள்ளிவரும், நல்ல மனதுடைய அப்பாவி 35 வயது இளைஞன் “யானோஸ் வலஸ்க்கா ஜூனியர்” (János Valuska, Jr.) என்பவனா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவில் இருவரைச் சுற்றியுமே கதை அமைக்கப்பட்டுள்ளது.

கதையின் முக்கியமான கதாபாத்திரங்கள்:
மிஸ்ஸஸ் யோஃசெப் பிலஃப் (Mrs. József Plauff) – மிஸ்ஸஸ் பிலஃப் என்று அழைக்கப்படும் இவர் கதாநாயகன் யானோஸ் வலஸ்க்காவின் தாயார். வலஸ்க்காவின் தந்தையான யானோஸ் வலஸ்க்கா சீனியர் என்பவரை மணந்து, அவர் இறந்த பிறகு மற்றொருவரை மணந்து அவரும் இதயநோயால் இறந்த பிறகு, மகன் வலஸ்க்காவை 27 வயது வரை பராமரித்தவர் இத்தாய். அவன் பொறுப்பற்றவனாகத் தனக்கு அவமானம் தரும் வகையில் நடப்பதாலும், குடிகாரனாக இருப்பதாலும் அவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டுத் தனிமையில் வாழ்கிறார். தனது துயரை மறக்கத் தோட்டம், வீட்டு அலங்காரம் என எதை எதையோ செய்து பார்த்தும் அவை எதுவுமே உதவாமல், மகன் தந்த ஏமாற்றத்தால் நிம்மதி இழந்து வாழ்க்கையைக் கடத்தும் 58 வயதுப் பெண்மணி இவர்.

யானோஸ் வலஸ்க்கா ஜூனியர் (János Valuska, Jr.) – இவனது வாழ்க்கை நிலை இவனது தாய் மிஸ்ஸஸ் பிலஃப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இவன் தன்னைப் பொறுத்தவரை அதைப்பற்றிய கவலையற்றவன். சூரிய மண்டலம், நிலா, வானம், சூரியன், சூரியகிரகணம் போன்றவற்றில் அதிகப்படியான ஆர்வம் கொண்டவன். தான் இரவில் மது அருந்தச் செல்லும் மதுபான விடுதியில் தனக்கென இருக்கும் நண்பர்களான ஓட்டுநர், நாவிதர், சமையல்காரர் போன்ற உழைப்பாளர் கூட்டத்திற்காக அவர்களையே நடிக்க வைத்து தினம் தினம் சூரியகிரகணத்தைச் செயல்முறையில் விளக்குபவன். பகல் பொழுதில் அஞ்சல் அலுவலக ஊழியனாகப் பணியாற்றி, தனது தோளில் என்றும் நிரந்தரமாகத் தொங்கும் பையில் நாளிதழ்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி செய்பவன். எதைப் பற்றியும் கவலையற்றவன், யாரையும் நம்புபவன், எவருடைய உள்நோக்கத்தையும் அறியும் திறனற்றவன்.

விவாகரத்து இன்றி பிரிந்து வாழும் எஸ்ட்டெர் தம்பதிகளிடையே இணைப்புப் பாலமாக இருந்து இருவருக்கும் உதவுபவன். தனிமையில் உடல்நலமற்று வாழும் முதியவர் மிஸ்டர் எஸ்ட்டெருக்கு உணவு கொண்டு வருவது, அவர் மனபாரத்தைக் குறைக்கப் பேச்சுத் துணையாக இருப்பது போன்றவை வலஸ்க்காவின் தினசரி நடவடிக்கைகள்.

பலர் வலஸ்க்காவை முட்டாள் என்று நினைக்க விரும்பினாலும், அவன் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வலஸ்க்காவைத் தனது உற்ற தோழனாக நினைக்கும் மிஸ்டர் எஸ்ட்டெர் மட்டும், அப்பாவியாக இருக்கும் அவன் ‘அரிய அழியக்கூடிய நிலையில் உள்ள வண்ணத்துப் பூச்சி ஒன்று தீப்பிடித்த காட்டில் பறக்கும் போது காணாது போவது’ (‘Like a rare endangered butterfly lost in flight in a burning forest …’) போன்ற பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பவன் என்று எண்ணுபவர்.

மிஸ்டர் கையோர்கி எஸ்ட்டெர் (Mr. György Eszter) – காரியவாதியான மனைவி மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெருடன் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர். இசைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவருக்கு வீட்டில் எடுபிடியாக உதவி செய்யும் மிஸ்ஸஸ் ஹாரர், வலஸ்க்கா ஆகியோர் துணையுடன் காலத்தைக் கழிப்பவர். கலவரத்தில் வலஸ்க்கா காணாமல் போன பிறகு அவனுக்காக மிகவும் கவலைப்பட்டு அலைகிறார்.

மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர் (Mrs. Tünde Eszter) – தன்னம்பிக்கையையும் துணிச்சலும் கொண்ட பெண்மணி இவள். பிறர் அழிவில் தன்னை உயர்த்திக் கொள்பவள், கதையின் போக்கின்படி மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் எந்த வகையிலும் மிஸ்டர் எஸ்ட்டெர்ரைத் துன்புறுத்தியதாகக் காட்டப்படவில்லை. மாறாக, கிறுக்குப் பிடித்தவர் போலச் சமயத்தில் கணவர் நடந்து கொண்டாலும், தானுண்டு தனது இசையுண்டு என்று துறவி போல வாழும் கணவரை; சமூகத்தில் மதிப்புடன் வாழும் (someone who was an idol of the educated public, … man generally regarded as an eccentric hermit living in absolute isolation) ஒரு பெரிய மனிதரான மிஸ்டர் எஸ்ட்டெரை விவாகரத்து செய்யவில்லை மிஸ்ஸஸ் எஸ்ட்டெர். தன்னை, தனது உறவை அவமதித்த கணவரை மிகவும் வெறுத்தாலும், அவருடன் இருக்கும் உறவை வெட்டாமல் இருப்பது தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது இவளது எண்ணம்.

நகரத்தின் காவல்துறைத் தலைவருடன் காதல் உறவு கொண்டு அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவரது உதவியுடன் நகரசபையின் “தூய்மை மற்றும் துப்புரவு திட்டத்தின்”(A TIDY YARD, AN ORDERLY HOUSE) ஒன்றின் பிரதிநிதியாகவும், நகர கவுன்சிலின் மகளிர் குழுவின் தலைவியாகவும் பதவி பெறுகிறாள். இதனால் டவுன்ஹாலில் நுழைந்து, சமயம் வரும்பொழுது நகரசபையின் முக்கியப்பதவி ஒன்றை அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவும், பதவியை அடையவும் திட்டம் போட்டுக் காய்களை நகர்த்தி, வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பேராசை கொண்ட அரசியல்வாதி இந்த மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

கதையில் வரும் அனைத்து மாந்தர்களையுமே தன்னல நோக்குடன் தனது காரியத்தைச் சாதிக்கப் பயன்படுத்திக் கொள்ளும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் ஒவ்வொருவரையும் எதனால் வீழ்த்த முடியுமோ, அல்லது விலைக்கு வாங்க முடியுமோ அதைக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்பவள். வலஸ்க்காவின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். சர்க்கஸ் நிகழ்ச்சியால் நகருக்குள் கலவரம் ஏற்படும் பொழுது நகர மேயர் முதல் கொண்டு கலவரம் அடைந்த நிலையில் இருக்கும் பொழுது, அந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதிலேயே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் குறியாக இருக்கிறாள். மோசமான சூழ்நிலையையும், தடைகளையும் நம்பிக்கையுடன் தனது உயர்வுக்குத் தனது திட்டத்திற்குப் பயன்படுத்துவதில் குறியாக இருப்பதும், தக்கச் சமயத்தில் ராணுவத்தினருக்கு நகரின் நிலையை விளக்கும் பொறுப்பை வலிந்து ஏற்று நகரத்தின் கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர எதிர்த்து நிற்க உதவும் பாங்கும் (leader of the resistance) இவளது வியக்க வைக்கும் நடவடிக்கைகள். அதனால் நகர சபையினர், இவளைப் போலத் தலைவர் ஒருவர் நகருக்குத் தேவை என எண்ணி நகர கவுன்சிலின் செயலாளர் பதவியை வழங்கி, ‘மேடம் செகரட்டரி’ என்று மரியாதையுடன் அழைக்கும் நிலையை அடைகிறாள்.

தன்னலவாதியாக இருந்தாலும் தனக்கு வலது கை போல உதவும் மிஸ்டர் ஹாரருக்கு நகரசபையில் ஒரு பணிக்கு ஏற்பாடு செய்ய முயல்வதும், தவறாகக் கலவரக்காரர்களிடம் சிக்கிக் கொள்ளும் தனது மற்றொரு உதவியாளனான வலஸ்க்கா குற்றங்கள் செய்யத் திறனற்றவன் என இராணுவ அதிகாரிக்கு எடுத்துக் கூறி அவன் கொல்லப்படாமல் தடுத்து, அவனை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்வதும், திறமையுடன் தன்னை வெளியேற்றிய கணவரின் வீட்டிலேயே மீண்டும் சமயம் பார்த்து நுழைந்து விடும் திறமை எனக் கனக்கச்சிதமாகச் செயலாற்றும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் பாத்திரப்படைப்பு வலஸ்க்காவை விடக் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் (Mr. and Mrs. Harrer) – இத்தம்பதிகளின் வீட்டின் பின்னறை ஒன்றில்தான் வலஸ்க்கா வசிக்கிறான். மிஸ்டர் ஹாரர் ஊரின் மரியாதைக்குரியவர்களில் ஒருவர், கற்தச்சர், மிகப்பெரும் குடிகாரர். மிஸ்ஸஸ் பிலஃப், வலஸ்க்கா ஜூனியர், மிஸ்டர், மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்; மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் ஆகிய இந்த முக்கியமான ஆறு பாத்திரங்களின் மூலமே கதையைச் சொல்லிச் செல்கிறார் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை.

கதையின் சுருக்கம்:
கதை தொடங்கும் முதல்நாள் மாலையில் மிஸ்ஸஸ் பிலஃப் நடமாட இயலாத தனது சகோதரிகளைச் சந்தித்துவிட்டு இரயிலில் வீடு திரும்புகிறார். தாமதமாக வந்து சேரும் இரயிலினால் வீடு செல்லும் கடைசிப் பேருந்தையும் தவறவிட நேருகிறது. என்றும் இல்லாதவகையில் நகர் இருளில் வேறு மூழ்குகிறது. அச்சத்துடன் அவசர அவசரமாக அவர் வீடுதிரும்பும் வழியில் மறுநாள் நகரில் நடைபெறப்போகும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்காகப் பெரிய ட்ரக் ஒன்று வருவதையும், ஊருக்குப் புதியவர்களான முரடர் கூட்டம் சாலைகளில் குழுமுவதையும், அவர்களில் ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடுவதையும் காணுகிறார். அவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவரைச் சந்திக்க வரும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது உதவியாளனான மிஸ்ஸஸ் பிலஃப்பின் மகன் வலஸ்க்காவை தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் தனது கணவரிடம் உதவி கோரி அனுப்பப் போவதாகச் சொல்லி மிஸ்ஸஸ் பிலஃப்பின் கருத்தை அறிய விரும்புகிறாள். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் மீது நன்மதிப்பு கொண்டிராத மிஸ்ஸஸ் பிலஃப் அவளிடம் பட்டும்படாமல் பேசி அவளை வெளியேற்றிவிடுகிறார்.

மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் தனது வீட்டிற்குத் திரும்பி அவளது காதலரான நகரக் காவல்துறை அதிகாரிக்காகக் காத்திருக்கிறார். பெரும் குடிகாரரான காவல்துறைத் தலைவர் வந்து அவளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். சர்க்கஸ் நிறுவனம் எங்குச் சென்றாலும் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தொல்லை தரும் முரடர் கூட்டம் இந்த ஊருக்கும் வந்துவிட்டதால், அடுத்தநாள் நிகழவிருக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலவரம் நிகழலாம் என எதிர்பார்க்கும் சர்க்கஸ் நிறுவனம் காவல்துறையின் பாதுகாப்பைக் கோருவதாகக் கூறிச் செல்கிறார். கலவரம் நடந்தால் அதனைத் தனக்குச் சாதகமாக்கும் வகையில் திட்டமிடுகிறது மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் மனம். அடுத்தநாள் பிரிந்துவாழும் தனது கணவரின் வீட்டில் குடியேற எண்ணி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறாள்.

இதற்கிடையில் வலஸ்க்கா மதுபான விடுதியில் நண்பர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு விடியப்போகும் நேரத்தில் வீடு திரும்புகிறான். வழியில் சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் பாடம் செய்த திமிங்கிலத்தை ஆர்வத்துடன் பார்க்கிறான். தனக்காக மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனது வீட்டில் வழக்கமாகச் சந்திக்க வரும் நேரம் கடந்துவிட்டது நினைவு வந்து அவசரமாகத் தனது வீட்டிற்குச் செல்கிறான். அவனுக்காக அங்குக் காத்திருந்து, தனது கணவரின் துவைத்த துணிகளை அவரிடம் ஒப்படைக்கக் கொடுக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது கணவரைத் தனது திட்டத்திற்கு உதவும் வகையில் அவரது நண்பர்களிடம் பேசச் சொல்லி உதவி கோரும் கடிதத்தையும் கொடுக்கிறாள். கடிதத்தை மிஸ்டர் எஸ்ட்டெரிடம் சேர்ப்பிக்கிறான் வலஸ்க்கா.

வலஸ்க்கா உண்மையை அறிந்திருப்பான் என யூகிக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனைத் திசை திருப்பக் காவல்துறை அதிகாரியின் பிள்ளைகளைக் கவனித்துவிட்டு அவனது வழக்கமான வேலைகளுக்குத் திரும்பச் சொல்கிறாள். இடையில் நகரே குலுங்கும் வண்ணம் பெரிய ஓசைகள் எழுகின்றன. மிஸ்டர் எஸ்ட்டெர் பற்றிய கவலையுடன் வெளியேறுகிறான் வலஸ்க்கா. மிஸ்டர் எஸ்ட்டெர் தனது நண்பர்களுடன் கொண்ட உரையாடல்களால் எச்சரிக்கை அடைந்து, பாதுகாப்பிற்காக ஜன்னல்களை மரப்பலகைகள் வைத்து மறைத்துவிட்டு வலஸ்க்காவிற்காகக் காத்திருக்கும் வேலையில் அசதியால் உறங்கிவிடுகிறார். அவரை சந்திக்க வரும் வலஸ்க்கா முரடர்கள் கையில் மாட்டிக் கொள்கிறான். அவனையும் இழுத்துக் கொண்டு செல்லும் முரடர் கூட்டம் ஊரில் உள்ள திரையரங்கம், அஞ்சல் அலுவலகம், தொலைபேசி அலுவலகம், மருத்துவமனை என ஒன்றுவிடாமல் அடித்து நொறுக்குகிறது. வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை இரும்புத் தடிகொண்டு நொறுக்குகிறது, கார்களைக் கவிழ்க்கிறது, அகப்படும் மக்களைக் கொலை செய்கிறது. முப்பது பேர் கொண்ட முரட்டுக் கூட்டத்தை, நகரின் காவல்துறை சரியான தலைமை இல்லாத காரணத்தால் தடுக்கமுடியாமல் போகிறது. முரடர் கூட்டம் கலைந்து செல்லும்பொழுது அசதியில் இருக்கும் வலஸ்க்காவை தனியே விட்டுவிட்டுப் போய் விடுகிறது. இராணுவம் உதவிக்கு வரவழைக்கப்படுகிறது. அவர்களிடம் கலவரக்காரர்களின் குறிப்புக்கள் கொடுக்கப்படும் பொழுது வலஸ்க்கா பற்றிய குறிப்பும் அதில் மாட்டிக் கொள்கிறது.

மிஸ்டர் ஹாரர் வீடு திரும்பி, முரடர்களின் வன்முறையால் தாக்கப்பட்டுச் சேதமடைந்திருந்த தனது வீட்டில் அச்சத்துடன் இருக்கும் மனைவியிடம் வலஸ்க்கா பற்றிக் கூறி மிஸ்டர் எஸ்ட்டெருக்கு தகவல் கொடுக்க அனுப்பிவிட்டு, மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் கொடுத்த ஆலோசனைப்படி வலஸ்க்காவைச் சந்தித்து ஊரைவிட்டு ஓடி மறைந்து வாழ எச்சரிக்கச் செல்கிறார். இரயிலடியில் அவனைச் சந்தித்து எச்சரிக்கிறார். மிஸ்ஸஸ் ஹாரர் மூலம் வலஸ்க்கா பற்றிய தகவல் அறிந்து மிஸ்டர் எஸ்ட்டெர் வலஸ்க்காவைக் காப்பாற்ற, இராணுவத்திடம் முறையிட நகரசபைக்கு ஓடுகிறார். வழியில் முதல் நாளிரவு கலவரத்தில் உயிரிழந்தவர்களில் வலஸ்க்காவின் தாயும் ஒருவர் எனத் தெரிகிறது.

இராணுவம் வந்தபொழுது அச்சத்தில் இருந்த மேயரும், போதையில் இருந்த காவல்துறை அதிகாரியும் செயலிழந்த நிலையில் இருக்க மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், சூழ்நிலையைத் தனது கையில் எடுத்துக் கொண்டு இராணுவத்திற்கு உதவும் வகையில் தகவல்கள் கொடுத்து உதவுகிறாள். அதனால் இராணுவ அதிகாரியின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுகிறாள். இராணுவ விசாரணை நடக்கும்பொழுது வலஸ்க்கா குற்றம் செய்யும் திறனற்றவன் என்று எடுத்துக் கூறி அவனை மனநல விடுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து காப்பாற்றுகிறாள். அவளது திறமையான வழிப்படுத்துதலைக் கண்டு நகரசபையின் செயலாளர் பதவி அவளைத் தேடி வருகிறது. தனது கணவரின் வீட்டிற்கு மீண்டும் குடிபெயர்கிறாள் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

வலஸ்க்காவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்த மிஸ்டர் எஸ்ட்டெர், வீட்டிற்குள் நுழைந்துவிட்ட மனைவியைப் பொருட்படுத்தாமல் தனது இசை ஆராய்ச்சி பக்கம் கவனத்தைத் திருப்புகிறார். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் நகர மக்களால் மதிக்கும் நிலையை அடைகிறாள். தனக்கு உதவி செய்த மிஸ்டர் ஹாரருக்கு நல்ல பதவியை அளிக்க ஏற்பாடும் செய்கிறாள். மேலும், வலஸ்க்காவின் தாயாரின் மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்று மிஸ்ஸஸ் பிலஃப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறாள்

லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் வர்ணனைகள் சூழ்நிலையைக் கண்ணெதிரே கொணரவும், ஒரு கதாபாத்திரத்தின் குணநலன்களை விவரிக்கவும் திறமையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இருப்பினும் கதையின் சில இடங்களில் தேவையற்ற வகையில் அமைந்த வர்ணனைகள் வாசிப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முழுக்கதையையுமே படித்து முடித்த பின்னர் காட்சிகளை ஆராயும்பொழுது, கதையின் முதல் காட்சியில் வரும் மிஸ்ஸஸ் பிலஃப்பின் இரயில் பயணமும், அதில் அவர் எதிர் கொள்ளும் மாந்தர்களுமே கதைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்பது தெரிகிறது. அதைப்போன்றே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் உறங்கும் பொழுது தேவையற்ற வகையில் விவரிப்பு விரிந்து சென்று அறையில் அலையும் எலிகளைப் பற்றியெல்லாம் குறிப்பிடுவதும் கதையோட்டத்திற்குக் கொஞ்சமும் உதவும் வகையில் இல்லை. மற்றொரு காட்சியில் மிஸ்ஸஸ் ஹாரர், மிஸ்டர் எஸ்ட்டெர் வீட்டிற்குக் கலவரம் நடக்கும் நள்ளிரவில் ஓடிவந்து வலஸ்க்கா கலவரம் செய்யும் முரடர்கள் கையில் சிக்கிவிட்டான் என்று கூறுவதை விட்டுவிட்டு ஆதியில் தொடங்கி அந்தம் வரை நீள நீளமாக விவரிப்பது கேட்பவர் யாராக இருந்தாலும் பொறுமையை இழக்கச் செய்யும் செயலே.

மிஸ்ஸஸ் ஹாரர் வழியாகக் கலவரத்தை விவரிக்க ஆசிரியர் மேற்கொண்ட உத்தியாக அது இருந்தாலும் தொடர்ந்து, முரடர்களின் கைப்பாவையாக மாட்டிய வலஸ்க்கா மூலமாகவே கலவரக்காரர்கள் செய்யும் அட்டூழியத்தை விளக்கும் காட்சியும் தொடர்வதால் மிஸ்ஸஸ் ஹாரர் வாய்மொழியாக வரும் பகுதியைத் தவிர்ப்பதனால் கதையோட்டத்தில் இழப்பு ஏதும் ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது. மற்றொரு இடத்தில் கலவரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜன்னல்களில் மரச்சட்டங்களை மிஸ்டர் எஸ்ட்டெர் ஆணி வைத்து அடிப்பதைச் சித்தரிக்கும் காட்சியும் தேவையற்ற அளவுக்கு மீறிய விவரிப்பு என்ற வகையில் அடங்கும். இது போன்று மேலும் சில இடங்கள், கதையோட்டத்திற்கும் உதவாமல், கதாபாத்திரத்தின் குணநலனையும் விவரிக்க உதவாமல் மேம்போக்காகக் கதையின் போக்கைத் தொய்வடையச் செய்யும் வகையில் அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

ஹங்கேரிய மொழியில் அமைந்த மூலநூல் மிகவும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் மிகவும் பாராட்டத் தக்க வகையில் மொழியாக்கம் செய்துள்ளார் என்றாலும் ஆழமான, மிகத் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கும் இந்தப் புதினத்தைத் தீவிரமான இலக்கிய இரசிகர்கள் மட்டுமே விரும்புவார்கள் என்று கூறும் வகையில்தான் இந்த நூல் அமைந்துள்ளது.



நன்றி: “இலக்கிய  வேல்”  இலக்கிய மாத இதழ் 
ஜூலை & ஆகஸ்ட் – 2015 

மறுபகிர்வுக்கு நன்றி:  வல்லமை 
ஆகஸ்ட் 26, 2015


#இலக்கியவேல், #வல்லமை,  #நூல் மதிப்புரை, #Themozhi 






Friday, August 21, 2015

நச்சு மரமொன்று

 
நச்சு மரமொன்று

கவிதை மூலம் – வில்லியம் ப்ளேக்
மொழிபெயர்ப்பு – தேமொழி


சினம் கொண்டேன் ஆருயிர் நண்பனிடம்
சீறினேன், கொட்டினேன் மனக்குமுறலை
குறைந்ததே சினம், மறைந்ததே மாயமென!!!
சினம் கொண்டேன் பிறவிப் பகைவனிடம்
சீறவழியில்லை, குமைந்தேன் மனதிற்குள்
குறையாத மனச்சுமையோ வளர்ந்தது வஞ்சமென !!!

அச்சமெனும் நீரூற்றியே வளர்த்தேனதை நாளும்
கண்ணீர்விட்டே வளர்த்தேன் இரவுபகலாய் நானும்
குரூரப் புன்னகை எனும் கதிரொளிபெற்று
குன்றாத வஞ்சகமே சூழ்ச்சியெனத் துளிர்த்தது

அருமையாக வளர்ந்தது இரவுபகலாக
அருஞ்சுவைக் கொண்டு கனிந்தது கனியாக
பட்டது அது பகைவனின் கவனத்திலும்
நட்டது நானென்று நன்கறிவான் அவனும்

கள்ளமனதுடன் நுழைந்தான் தோட்டத்தில்
காரிருளில் சிக்கிவிட்டான் என்பொறியில்
புலர்ந்தபொழுதில் கண்டேனவனை, நச்சுக்கனி
வீழ்த்திய மரமாய் வீழ்ந்திருந்தான் மரத்தின்கீழே



◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


A Poison Tree
–William Blake

I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe:
I told it not, my wrath did grow.

And I watered it in fears,
Night and morning with my tears;
And I sunned it with smiles,
And with soft deceitful wiles.

And it grew both day and night,
Till it bore an apple bright.
And my foe beheld it shine.
And he knew that it was mine,

And into my garden stole
When the night had veiled the pole;
In the morning glad I see
My foe outstretched beneath the tree.


நன்றி:  வல்லமை
ஆகஸ்ட் 21, 2015
 

#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, #Themozhi 




Monday, August 17, 2015

முதியவரின் நம்பிக்கை


முதியவரின் நம்பிக்கை


கவிதை மூலம் – ஆலன் அக்டோவியன் ஹ்யூம்
மொழிபெயர்ப்பு – தேமொழி


இந்திய மக்களே உங்கள் சோர்வின் காரணமென்னவோ ?
இறைவனின் உதவியைத்தான் எதிர்பார்த்துள்ளீர்களோ ?
வரிந்து கட்டி, எழுச்சியுடன் போராடுங்கள்
தன்முயற்சி செய்வதாலேயே நாடுகள் தோன்றுகின்றன

தீர்மானிக்கப்படுகிறது உங்களின், உங்கள் நாட்டின் எதிர்காலம்
ஆனாலும் அதைத் தீர்மானிப்பவர் நீங்களல்லவே
ஊமைகளாகிவிட்டீர்களா? உரிமைக்குக் குரல் கொடுங்கள்
தன்முயற்சியால்தான் நாடுகள் தோன்றுகின்றன

கல்வியும் செல்வமும்தான் இருந்தென்ன செய்தீர்கள்
வெற்றுப் பட்டங்கள் அளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டீர்கள்
தன்னாட்சி செய்வதன் மதிப்பிற்கு ஈடாகுமா அவையாவும்
தன்முயற்சி செய்வதாலேயே நாடுகள் தோன்றுகின்றன

இருளாகப் பரவும் இரகசியப் புலம்பல்கள்
பசுந்தரையின்கீழ் நெளியும் புழுக்களன்றோ
இத்தகைய புலம்பல்கள் அநீதியை அகற்றாது
தன்முயற்சி செய்வதாலேயே நாடுகள் தோன்றுகின்றன

நீங்கள் அடிமைகளா? சுதந்திரம் உள்ளவர்களா?
அல்லது மறைவிலே அஞ்சி வாழும் கோழைகளா?
முடிவு இருப்பது உங்கள் கைகளில்
தன்முயற்சியால்தான் நாடுகள் தோன்றுகின்றன

இந்திய மக்களே எழுச்சியுடன் போராடுங்கள்
தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்
விடிந்துவிட்டது! கிழக்கு வெளுத்துவிட்டது
தன்முயற்சியால்தான் நாடுகள் தோன்றுகின்றன


◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆



Old Man’s Hope
— by Allan Octavian Hume

Sons of Ind, why sit ye idle,
Wait ye for some Deva’s aid?
Buckle to, be up and doing!
Nations by themselves are made!
Yours the land, lives, all, at stake, tho’
Not by you the cards are played;
Are ye dumb? Speak up and claim them!
By themselves are nations made!
What avail your wealth, your learning,
Empty titles, sordid trade?
True self-rule were worth them all!
Nations by themselves are made!
Whispered murmurs darkly creeping,
Hidden worms beneath the glade,
Not by such shall wrong be righted!
Nations by themselves are made!
Are ye Serfs or are ye Freemen,
Ye that grovel in the shade?
In your own hands rest the issues!
By themselves are nations made!
Sons of Ind, be up and doing,
Let your course by none be stayed;
Lo! the Dawn is in the East;
By themselves are nations made!


நன்றி: வல்லமை:  
ஆகஸ்ட்  17, 2015


#கவிதை, #வல்லமை, #மொழிபெயர்ப்பு, Themozhi 



Thursday, July 16, 2015

102 ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்!

102 ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்!


உயர்கல்வியின் சிகரமாக விளங்கும் முனைவர் படிப்பை முடித்து, முனைவர் பட்டம் என்ற வெற்றிக் கொடியை நாட்ட விரும்புவது பெரும்பாலோருக்கு நிறைவேறாக் கனவாகவே முடிந்துவிடும். அதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை, திறமையில்லை போன்ற காரணங்களைச் சொல்வதற்குக் கூட சிலசமயம் வழியிருக்காது. பெரும்பாலும் படித்து முடித்து சொந்தக்காலில் நிற்கவேண்டிய நேரம், தன்னுடைய கடமைகளும் தன்னை அழைக்கிறது என்ற வயதில் பலர் சிக்கிக் கொள்ளும் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் அது. சரி இப்பொழுது கொஞ்சம் விலகிச் சென்று மீண்டும் திரும்ப வந்து முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் கல்விக்குத் தற்காலிக இடைவெளி விடுபவர் மீண்டும் முடிக்கமுடியாமல் கூட போய்விடுவதும் பலர் வாழ்வில் எதிர்கொள்ளும் உண்மை. அதற்குள் வாழ்க்கையில் பெரிய திருப்பங்கள் தோன்ற நிரந்தரமாகவே தங்கள் முனைவர் பட்டக் கனவைக் கைவிடும் நிலை ஏற்பட்டு விடுவதும் உண்டு.

இங்கு அடுத்து வைக்கப்படும் கருத்துகள் இந்தியக் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு கூறுவது. பெரும்பாலும் அறிவியல், கணிதம், பொறியியல் போன்ற துறைகளில் படிப்பவர்கள், குறிப்பாக ஆண்கள், அதுவும் அவர்கள் வீட்டிற்கு அவர்கள் கடைசி மகனாய் இருந்தால் அவர்களுக்கு முனைவர் படிப்பை முடிப்பதற்குத் தடைகள் மிக மிகக் குறைவு. வீட்டின் மூத்தபிள்ளையாக இருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையில் ஆர்வமுள்ள ஒருவர் இருப்பார் என்றால், வேலைக்குச் சென்று கொண்டே மாற்றுவழியில், பகுதி நேரமாக முனைவர் ஆய்வு செய்து முடிக்க வேண்டிய நிலைமை இருக்கும். இதில் வயதும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆண்கள் முப்பது வயது வரை குடும்ப வாழ்க்கையைத் துவக்குவதற்கு முன்னால் எந்த இடையூறும் இல்லாமல் முனைவர் படிப்பு மேற்கொள்வதில் தடைகள் ஏற்படுவதில்லை.

ஆனால் பெண்களாக இருந்தால், அவளுக்கு இருபத்தைந்து வயது நெருங்கத் துவங்கும் பொழுதே பெற்றோர்களுக்கு மகளின் வயது கவலை தரத் தொடங்கிவிடும். அந்தப் பெண்ணே திருமணம் பற்றிக் கவலைப்படாமல், படிப்பிலேயே கவனமாக இருந்தாலும்கூட பெற்றோர்களிடம் இருந்து திருமணம் பற்றிய கேள்விகளும் முயற்சிகளும் துவங்கிவிடும். அதுவும் அந்தப்பெண் மூத்த பெண்ணாக இருந்தால், அடுத்து இருக்கும் பிள்ளைகளுக்கும் படிப்பை முடித்து, திருமணத்தை முடித்து தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பைப் பற்றிய கவலை பெற்றோருக்கு இருக்கும். ஆனால் அதுவே கடைசி மகளாக இருந்தால் தாங்கள் பாடும் பாட்டை மாற்றிப் பாடுவார்கள். நாங்கள் கண்ணை மூடுவதற்குள் உனக்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று மகளின் படிப்பை ஒரு வழி செய்துவிடுவார்கள். இது போன்ற நெருக்கடிகளுக்குக் காரணம் முனைவர் பட்டப்படிப்பும் ஒரு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் முடியாமல் ஆராய்ச்சி நிலை பலமுறை வரையறுக்கப்பட்ட கால எல்லையையும் தாண்டி நீடித்து விடுவதுதான்.

முனைவர் பட்டத்தை முடிப்பதற்கு இது போன்ற வழக்கமான தடைகளைப் பார்த்துப் பழகிய நமக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ‘இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட்’ (Ingeborg Syllm-Rapoport) என்பவர் எதிர்கொண்ட தடை மேலும் வியப்பைத் தரும். சென்ற மாதம் (ஜூன் 9, 2015) தனது 102 வயதில் (ஆம், சரியாகத்தான் படிக்கிறீர்கள், சந்தேகம் வேண்டாம்) தனது முனைவர் படிப்பை முடித்து பட்டம் வாங்கியிருக்கிறார். உலகிலேயே மிகவும் வயதாகி முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பட்டத்தையும் இதனால் இவர் பெறுகிறார். இவரது இந்தச் சாதனையை முறியடிப்பதற்கு வரலாற்றில் மேலும் பல ஆண்டுகள் கூட ஆகலாம். இனி இவர் ஏன் இந்த வயதில் முனைவர் பட்டம் பெறுகிறார், இவர் எதிர்கொண்ட வழக்கத்திற்கு மாறான தடை என்ன என்று பார்ப்போம்.

அவர் எதிர்கொண்ட தடை இனப்பேதம். இந்த நூற்றாண்டில் நம்மால் இது நம்பக்கூட முடியாத ஒன்றுதான். ஆனால் சென்ற நூற்றாண்டில் ஒருவரது இனம் என்ற பின்புலம் கல்வி கற்பதில் இடையிட்ட போராட்டங்கள் நிறைந்த காலம்.


இன்ஜ்போர்க் 1912 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் காமரூன் (Cameroon) பகுதியில் பிறந்தவர். ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் (Hamburg University) 1937 ஆம் ஆண்டில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார். தொடர்ந்து அதில் முனைவர் பட்டப்படிப்பும் மேற்கொண்டார். அவரது 25 ஆவது வயதில், 1938–ம் ஆண்டில் அத்துறையில் ஆய்வுகள் செய்து, அக்காலத்தில் குழந்தைகளை அதிகம் பாதித்த தொண்டை அழற்சி தொற்றுநோய் பற்றி முனைவர் பட்ட ஆய்வறிக்கையை (PhD thesis on infectious disease – diphtheria) சமர்ப்பித்தார். அந்த நாட்களில் உலகப் போர் சூடுபிடித்திருந்தது. ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடுங்கோலாட்சி நிகழ்ந்த காலமது. இனப்பேதம் தலைவிரித்தாடிய அக்கால கட்டத்தில், ஹிட்லரின் கட்டளைக்கிணங்க யூதக்குலத்தை அடியோடு அழித்தொழிக்கும் நிலையை ஜெர்மன் நாடு நடைமுறைப்படுத்தியது. நியாயம் கேட்பார் இல்லை. யூதர்கள் பணம், பதவி, உடமை, சொத்து, சுகம் என அனைத்தும் இழந்து உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிடிபட்டவர்களைச் சிறையில் அடைத்து நச்சு வாயு அறையில் அடைத்து உயிரை எடுத்தார்கள்.

இந்தக் கொடிய காலகட்டத்தில் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இன்ஜ்போர்க் ஒரு கலப்பினப் பெண்ணாக இருந்தார், ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவராக வளர்க்கப்பட்டவர் இவர். ஆனால், இவரது தாய் யூத இனத்தைச் சேர்ந்தவர், அவர் ஒரு பியோனா இசைக்கலைஞர். இன்ஜ்போர்க் அவர்களது ஆய்வறிக்கையின் மேல் அவரது ஆய்வின் அடிப்படையில் முடிவெடுக்கப்படாமல், இவர் யூதப் பின்புலம் கொண்டவர் அதனால் பட்டம்பெறத் தகுதியற்றவர் என்று மஞ்சள் வண்ணத்தில் கோடிட்டு இவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப் பட்டது (அந்நாட்களில் யூதர்கள் தங்கள் ஆடைகளின் மீது அடையாளம் தெரிவதற்காக மஞ்சள் வண்ண நட்சத்திரங்களை அணிய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்). இவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, மேற்கொண்டு வாய்வழித் தேர்வில் இவர் பங்கு பெற அனுமதி மறுக்கப்பட்டார்.

ஒருவரது மூதாதையரின் இனம் அடிப்படையில் அவரது தகுதியை நிர்ணயிக்கும் நாட்டின் சட்டங்கள் குறுக்கிடாவிட்டால் மட்டுமே இவர் தேர்வில் அமர அனுமதிக்கலாம் என்ற குறிப்பு ஒன்றும் எழுதப்பட்டு இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையில் இணைக்கப்பட்டுவிட்டது. செய்வதறியாது திகைத்த இன்ஜ்போர்க் பிற யூதர்கள் போல நாட்டை விட்டு வெளியேறினார். தனது மருத்துவப் பணியின் எதிர்காலமே நொறுங்கிப் போனதாகப் பின்னர் இதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ளார். அது ஜெர்மனிக்கும், அறிவியல் உலகத்திற்கும் அவமானம் தரும் ஒரு நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்க மண் இந்த அகதிக்குப் புகலிடம் கொடுத்தது. கையில் பணமின்றி வேலைக்கு அலைந்தார். நியூயார்க், பால்ட்டிமோர் போன்ற நகர்களில் சிறு சிறு வேலைகளை ஏற்று வாழ்க்கையுடன் போராடினார். அமெரிக்காவின் மருத்துவக் கல்லூரிகளில் 48 கல்லூரிகளுக்கு மருத்துவப் பயிற்சியைத் தொடர விண்ணப்பித்ததில் பென்சில்வேனியா பல்கலைக்கழக மருத்துவமனையில் மட்டுமே பயிற்சியாளராகச் சேரும் வாய்ப்பு கிடைத்து, பயிற்சியைத் தொடர்ந்து மருத்துவப் பட்டம் பெற்று, 1944 ஆம் ஆண்டில் சின்சினாட்டி மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவரானார்.

அந்நாட்களில், இவரைப்போலவே ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து அகதியாகத் தப்பி வந்த, வியன்னா, ஆஸ்திரியாவைச் சேர்ந்த ‘சாமுவேல் மிட்ஜா ரபோபோர்ட்’ (Samuel Mitja Rapoport) என்ற யூதரைச் சந்தித்தார். மருத்துவரும் உயிர்வேதியியல் துறையைச் சார்ந்தவருமான சாமுவேல் ரபோபோர்ட்டை விரும்பி மணந்து கொண்டார். இவர்களது அன்பான சிறிய குடும்பம் 1950 களில் மீண்டும் புதுவகை இடரைச் சந்தித்தது. கம்யூனிச, இடதுசாரி சிந்தனையைக் கொண்டவர்கள் ரபோபோர்ட் கணவன் மனைவி இருவருமே. ஐம்பதுகளில் அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்பு அலை மிகவும் தீவிரமடைந்திருந்தது. இவர்களும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் குடும்பத்துடன் அந்நாள் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு மீண்டும் 1952 ஆம் ஆண்டில் குழந்தைகளுடன் குடிபெயர்ந்தனர். முதலில் கருத்தரங்கு ஒன்றுக்காகச் சென்ற கணவர் அங்கேயே தங்கி வேலைத்தேட, நான்காவது குழந்தையுடன் கர்ப்பிணியாக இருந்த இன்ஜ்போர்க் குழந்தைகளுடன் சென்று அவருடன் சேர்ந்து கொண்டார்.

இன்ஜ்போர்க் கிழக்கு பெர்லினில் ஒரு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராகவும், குறிப்பாகப் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு நிபுணராக (neonatologist ) பணி புரிந்தார். இவர் பணிசெய்த காலத்தில் ‘குழந்தைகள் மரண விகிதம்’ (Infant mortality rate) வெகுவாகக் குறைக்கப்பட்டது. பிறகு, குழந்தைநல மருத்துவப் பேராசிரியராகவும் 1964 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்தார், குழந்தைகள் பராமரிப்புத் துறையின் முதல் தலைவராகவும் பெர்லினின் புகழ் பெற்ற சாரைட் மருத்துவமனையில் (Charité Hospital in East Berlin) பதவி வகித்தார். பின்னர் 1973 – ஆம் ஆண்டு இன்ஜ்போர்க் ஓய்வு பெற்றாலும் தனது 80 வயதுகளிலும் அறிவியல் ஆராய்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். குழந்தை இறப்பு விகிதத்தைப் பெருமளவில் குறைத்ததற்காக, கிழக்கு ஜெர்மனியின் தேசிய விருது வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்.

இவரது இத்தனை சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளுவது, எந்த முனைவர் பட்டம் இவருக்கு அநீதியான முறையில் மறுக்கப்பட்டதோ அதை மீண்டும் உழைத்து நியாயமான முறையில், அதுவும் தனது 102 ஆவது வயதில் இவர் பெற்றதே. சற்றொப்ப 80 ஆண்டுகள் கடந்த பின்னர், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் முயற்சியின் அடிப்படையில் பெற்ற முனைவர் பட்டம், ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற விரும்புபவர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியான வழிகாட்டல் என்றால் அது வெறும் வெற்றுப் புகழுரை அல்ல.

இவருக்குக் கல்வியில் கிடைத்த மறுப்பு கசப்புணர்வு தராதவகையில் பணியில் பல வெற்றிகள் பெற்றாலும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இவரது மகன் ‘டாம் ரபோபோர்ட்’ (Tom Rapoport) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவப் பேராசிரியர். இவர் தனது தாயின் கதையை, அவர் முனைவர் பட்டம் பெறுவதில் எதிர்கொண்ட ஏமாற்றத்தை ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவரது நண்பர் ஒருவரிடம் பகிர்ந்திருந்தார். அவர் இன்ஜ்போர்க் படித்த ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைத் தலைவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது, இன்ஜ்போர்க்கின் கதையைக் குறிப்பிட்டார். துறைத்தலைவர் அநீதியைச் சரி செய்யவேண்டிய தேவை இருக்கிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்தாலோசித்தார்.

இன்ஜ்போர்க்கின் ஆய்வறிக்கையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அவரும் அமெரிக்காவில் படிப்பைத் தொடர்ந்து மருத்துவராகவும் ஆகிவிட்டார், ஆண்டுகள் பலவும் கழிந்துவிட்டன சட்டச் சிக்கல்கள் உள்ளன என்று மறுப்புக்கான காரணங்களை அடுக்கியது பல்கலைக்கழக நிர்வாகம். நிர்வாகம் ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் இன்ஜ்போர்க் விவகாரத்தில் ஆர்வமோ அக்கறையோ காட்டவில்லை. அவருக்கு ஒரு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து கதையை முடித்துவிட நினைத்தது. இதனை இன்ஜ்போர்க்கும், துறைத்தலைவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இரக்கத்தின் பேரில் தருவது போன்ற பட்டதை ஏற்க மனமில்லை இருவருக்கும். தகுதியுள்ள ஒருவர் மறுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு அவரது தகுதி அடிப்படையில் பட்டம் வழங்குவதையே இருவரும் எதிர்பார்த்தனர். இதனால் ஏற்படும் சட்டச்சிக்கல்களை, விதி புறக்கணிப்புகளைப் பல்கலைக்கழகம் எதிர் கொள்ளாதவாறு இன்ஜ்போர்க் மீண்டும் ஓர் ஆய்வறிக்கை தயார் செய்து, அதில் வாய்வழித் தேர்வை விதிகளின் முறைப்படி எதிர்கொண்டு வெற்றிபெற்றால் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப் பட்டது.

இன்ஜ்போர்க்கிற்கு பார்வை குறைந்ததால் படிப்பதோ, கணினி வழி ஆய்வு செய்வது இயலாது போனது. தற்கால மருத்துவ முன்னேற்றங்கள், கடந்த 80 ஆண்டுகளில் குழந்தைகளைப் பாதிக்கும் தொற்றுநோய் மருத்துவச் சிகிச்சைமுறை ஆகியவற்றை ஆராய இவருடைய நண்பர்களும் உறவினர்களும் உதவ முன் வந்தார்கள். இணையத்தில் தகவல் சேகரித்து, அவரது ஆய்விற்குத் தேவையான தகவல்களை இவரிடம் கொண்டு வந்து தொலைபேசி வழியே சேர்த்தார்கள். இவர் அவற்றின் அடிப்படையில் மீண்டும் ஓர் அறிக்கை எழுதிச் சமர்ப்பித்தார். அவர் படித்த காலத்தைவிட இப்பொழுது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் இவருக்கு வியப்பளித்தது. பல்கலைக்கழகம் இவரது வேண்டுகோளுக்குப் பொறுமையாக ஒத்துழைத்ததற்கும் இன்ஜ்போர்க் பல்கலைக்கழகத்தைப் பாராட்டினார்.


பல்கலைக்கழகத்திலிருந்து இரு மருத்துவத் துறை ஆசிரியர்களும், துறைத் தலைவரும் வாய்வழித் தேர்விற்காக இவரது வீட்டிற்கே வந்தனர். இவரது வரவேற்பறையிலேயே இவருக்கு 45 மணித்துளிகள் கேள்விகள் மேல் கேள்விகள் வீசப்பட்டுத் தேர்வு நடந்தது. பரிசோதிக்க வந்தவர்கள் இவர் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தைக் கண்டு பேச்சிழந்து போனதாகப் பாராட்டினார்கள். தேர்வு இவருக்குக் கொஞ்சம் மன உளைச்சலை உண்டாக்கியதாகக் கூறிய இன்ஜ்போர்க், இந்த முதுமையில் அவர் மேற்கொண்ட இந்த முயற்சி தனக்குப் பட்டம் வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல, அவர் காலத்தில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் நியாயம் கிடைத்ததாக ஏற்பட்ட உணர்விற்காக என்றும், இது கொள்கைக்குக் கிடைத்த வெற்றிக்கான அறிகுறி என்றும் பட்டமளிப்பு விழா உரையில் குறிப்பிட்டார். தனக்கு வாழ்க்கையில் வாய்ப்புகள் மட்டும் அமையவில்லை, தன்னிடமும் விடாமுயற்சி இருந்தது என்றும் இன்ஜ்போர்க் குறிப்பிட்டார்.

கொள்கை வென்றது, நீதி வெற்றிபெற்றது, விடாமுயற்சி வெற்றி தரும், கல்விக்கு வயது ஒரு தடையல்ல என எத்தனையோ செய்திகளைத் தான் 102 வயதில் முனைவர் பட்டம் பெற்றதன் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ள இன்ஜ்போர்க் ஸில்ம்-ரபோபோர்ட் பாராட்டப்படவேண்டியவர்.


News Sources:
The Wall Street Journal‎:
Ingeborg Rapoport to Become Oldest Recipient of Doctorate After Nazi Injustice is Righted
http://www.wsj.com/articles/from-nazi-germany-a-tale-of-redemption-1431576062
The Daily Mirror:
The shocking reason a 102-year-old woman waited 77 years to get her PhD published
http://www.mirror.co.uk/news/world-news/shocking-reason-102-year-old-woman-waited-5802450
The Sydney Morning Herald:
Ingeborg Syllm-Rapoport, 102, completes degree denied her by Nazis 77 years ago
http://www.smh.com.au/world/ingeborg-syllmrapoport-102-completes-degree-denied-her-by-nazis-77-years-ago-20150610-ghke0k.html


நன்றி: வல்லமை 
ஜூலை  16, 2015

#பெண்ணியம், #வல்லமை, Themozhi 



Monday, March 3, 2014

கைவிளக்கை உருவாக்கிய காரிகை

கைவிளக்கை உருவாக்கிய காரிகை


கனடா நாட்டின் ‘பிரிட்டிஷ் கொலம்பியா’ பகுதியில் உள்ள ‘விக்டோரியா’ என்ற இடத்தில் வசிப்பவர் 16 வயதான ‘ஆன் மாக்கசின்ஸ்கி’ (Ann Makosinski from Victoria, British Columbia, Canada) என்ற பள்ளிச் சிறுமி.

இந்தப் பதின்மவயது பள்ளி மாணவி செய்த சாதனை, மின்கலம் ஏதுமின்றி ஒளிதரும் கைவிளக்கு (LED torch light/flashlight without batteries) ஒன்றினை உருவாக்கியது. இவரது கண்டுபிடிப்பான கைவிளக்கு ஒளிர்வதற்கு மின்சக்தி அளிக்க மின்கலம் தேவையில்லை என்பதுடன், இரவு பகல் எந்நேரமும் எங்கும் ஒளிரக்கூடியது.

இவரது தாய் பூர்வீகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், தந்தை கனடா நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை பள்ளி விடுமுறைக்குத் தனது தாயின் நாடான பிலிப்பைன்சுக்குச் சென்றார் மாணவி ஆன். அங்கு அவருக்கு விளையாடப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். நாடு திரும்பிய பிறகு ஒரு முறை அவரைத் தொடர்பு கொண்ட அவரது பிலிப்பைன்ஸ் தோழி தான் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாகவும், மின்சாரம் இல்லாததால் விளக்கின்றிப் படிக்க முடியாது போனதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

சிறுவயதில் இருந்தே அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஆன். அத்துடன் எதையாவது உருவாக்குவதிலும் வல்லமை கொண்டும் விளங்கினார். தனது தோழி போன்று மின்சார வசதியற்ற இடங்களில் வாழும் பள்ளி மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே உடனே செயலில் இறங்கினார்.

பொதுவாகவே மின்கலம் இன்றி மின்சாரத்தைச் சேகரிக்க சோலார் செல் என்றழைக்கப்படும் சூரிய மின்கலங்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறின்றிப் பயன்படுத்துபவரின் உடல்வெப்பம் தரும் மின்சாரம் (thermoelectric) கொண்டு விளக்கை ஒளிரச் செய்வது அவருக்குச் சிறந்த வழியாகத் தோன்றியது.

இவரது முயற்சியைக் கேள்விப்பட்ட இவரது பள்ளியின் அறிவியல் ஆசிரியை, கூகிள் இளைஞர்களை ஊக்குவிக்க நடத்து அறிவியல் போட்டியில் இவரது கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்து பங்கு பெறும்படி ஆலோசனை வழங்கினார். ஆனும் அதன்படியே செய்தார். இவர் பங்கேற்ற 15 – 16 வயதினர்க்கான பிரிவில் இவரது கண்டுபிடிப்பு தேர்ந்தெடுக்கப்பட்டத்தால் 2013 ஆண்டிற்கான பரிசும் பெற்றார்.

இவர் உருவாக்கிய கைவிளக்கின் பாகங்களாக இருப்பவை நான்கே நான்கு மின்னணு பாகங்களும், அத்துடன் ஓர் அலுமினியக் குழலும், அதனை உள்ளடக்கி வைத்த பி.வி.சி. பிளாஸ்டிக் குழல் ஆகியவை மட்டுமே. மிகக் குறைந்த விலையில் தயாரிக்கக் கூடியதும், எளிமையான  கட்டமைப்பும், அத்துடன் இந்தக் கைவிளக்கு பரவலான வகையில் அளிக்கக் கூடிய பயன்தரும் தன்மையே இவரது கண்டுபிடிப்புக்குப்  பரிசினைத் தேடித் தந்துள்ளது.

இவரது விளக்கினை கையில் பிடித்துக் கொண்டால் நம் உடலில் உள்ள வெப்பம், விளக்கில் பொருத்தப்பட்டுள்ள ‘பெல்டியர் ஓடுகள்’ (Peltier tiles) கொண்டு சேகரிக்கப்படும். கையில் வெளிப்படும் வெப்பத்திற்கும் சுற்றுப்புறக் காற்றில் உள்ள வெப்பத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டினால் பெல்டியர் ஓடுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு அவை விளக்கை ஒளிரப் பயன்படுத்தப்படுகிறது.


இவ்வாறு வெப்ப மின்சக்தி உருவாக்கும் அறிவியல் கோட்பாடு ‘பெல்டியர் விளைவு’ (Peltier effect) என்று அழைக்கப்படும். சுருக்கமாக, இரு வேறுபட்ட மின்கடத்திகளின்  இடையில் வெப்பம் பாய்ந்து அதன் மூலம் மின்சாரம் தோன்றுவது ‘பெல்டியர் விளைவு’ ஆகும். சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த வெப்ப மின்சக்தியை  உருவாக்கும் பெல்டியர் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது. இரு பெல்டியர் ஓடுகள் இடையில் உள்ள வெப்பநிலை வேறுபாடுகள் மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. பெல்டியர் ஓடுகள் என்பவை மேலும் கீழுமாக இரு வனையோடுகள் (ceramic tiles) கொண்டது. இவற்றினிடையே குறை மின்கடத்திகள் (semiconductors) பொருத்தப்பட்டிருக்கும். இரு வேறுபட்ட மின்கடத்திகளில் ஒன்று வெப்பத்தை உள்ளே உறிஞ்சும் பொழுதும், மற்றொன்று வெப்பத்தை வெளிவிடும்பொழுதும், அந்த வெப்பம் குறைகடத்திகள் வழியாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லும் பொழுது வெப்ப மின்சக்தி உருவாகிறது.


பெல்டியர் விளைவு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதே  சிறந்த வழிமுறை எனக் கருதி, அதனைப் பயன்படுத்தி கைவிளக்கு ஒன்றினை உருவாக்க விரும்பினார் ஆன். இதற்காக, மனித உடல் வெளிவிடும் வெப்பத்தின் அளவு எவ்வளவு, இந்த வெப்பம் நாம் பொதுவாக வசிக்கும் சூழலில் ஒரு கைவிளக்கு ஒன்றினை ஒளிரச் செய்ய எந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டு, அந்த அளவு மின்சாரத்தை உருவாக்க வேண்டுமானால் அதற்கு எத்தனை பெல்டியர் ஓடுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டார். விளக்கினை உருவாக்க நான்கு பெல்டியர் ஓடுகள் தேவை என அறிந்து, ஓர் அலுமினியம் குழாயில் ஒரு பக்கத்தில் இந்த பெல்டியர் ஓடுகளை அமைத்து விளக்குடன் இணைத்தார். பெல்டியர் ஓடுகள் அமைந்த குழாயின் பகுதியை கையில் பிடிக்கும்பொழுது, கையில் உள்ள வெப்பம் பெல்டியர் ஓடுகள் வழி ஊடுருவி, குறைந்த வெப்பம் உள்ள அலுமினியக் குழாயினுள் உள்ள காற்றினை நோக்கிக் குறை மின்கடத்திகள் மூலம் கடத்தப்படும் பொழுது மின்சக்தி உருவாகி கைவிளக்கை எரிய வைக்கிறது. இந்த வகை வெப்ப மின்சக்தி உருவாக இரு முனைகளுக்கும் இடையில், அதாவது கைக்கும் சூழ்நிலையில் உள்ள காற்றுக்கும் இடையில் குறைந்த அளவு ஐந்து பாகை வெப்ப வேறுபாடே போதுமானதாகும்.

பலருக்குப் பயனளிக்கும் நல்லதோர் கண்டுபிடிப்பினை உருவாக்க வயது ஒரு தடையல்ல, ஆர்வமும் முயற்சியும் போதுமென்று நிரூபித்துள்ளார் இப்பள்ளி மாணவி. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்குப்  பாராட்டுகள்.


தகவல் மற்றும் படங்கள் சேகரித்த தளங்கள்: This Could Be Big: Teen Invents Flashlight That Could Change The World – http://news.yahoo.com/blogs/this-could-be-big-abc-news/teen-invents-flashlight-could-change-world-182121097.html?vp=1 Meet This Year’s Google Science Fair Finalists – http://www.businessinsider.com/2013-google-science-fair-finalists-2013-6?op=1#ixzz2uNuGEZgU Student’s flashlight works by body heat, not batteries – http://phys.org/news/2013-07-student-flashlight-body-batteries.html Peltier effect: http://en.wikipedia.org/wiki/Thermoelectric_effect Peltier tiles: http://www.tellurex.com/technology/peltier-faq.php


நன்றி: வல்லமை 


#அறிவியல், #பெண்கள், #வல்லமை, #Themozhi 



மார்ச் 3, 2014

Monday, January 13, 2014

பொங்கல் பள்ளு

பொங்கல் பள்ளு




ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்தப் பொங்கல் நாள் வந்ததென்றே
ஆடுவோமே பள்ளு பாடுவோமே

செந்தமிழ்ப் புலவன் பாரதி போலொரு பள்ளு
செங்கதிர் போற்றிப் பாடிடுவோம் ஒரு பள்ளு
செம்மணி நெல்லறுத்துப் பாடுவோமே

உழவுக்கு வந்தனை செய்தொரு பள்ளு
தொழிலுக்கும் வந்தனை செய்தொரு பள்ளு
கரும்பொத்த இனிமைக்கூட்டிப் பாடுவோமே

நன்றி போற்றிக் காளைக்கொரு பள்ளு
நலம் வாழ்த்தி மாரிக்கொரு பள்ளு
மஞ்சள் கிழங்களித்துப் பாடுவோமே

சர்க்கரைப் பொங்கல் பொங்கியொரு பள்ளு
சதிராடும் குழந்தைகளுடன் ஒரு பள்ளு
மலர்தூவி தமிழர் நலம் போற்றிப் பாடுவோமே

பொங்குக மங்கலமென்றொரு பள்ளு
புத்தாடை அணிந்தொரு பள்ளு
பொங்கலோ பொங்கலென்று பாடுவோமே


நன்றி: வல்லமை - சிறப்பிதழ்
ஜனவரி 13, 2014


#கவிதை, #வல்லமை, #Themozhi