Showing posts with label சிறகு. Show all posts
Showing posts with label சிறகு. Show all posts

Sunday, February 15, 2026

சிறகு - இணைய இதழ் - பதிவுகள்

 


பிப்ரவரி 7, 2014. . . 

இன்றிலிருந்து 12 ஆண்டுகளுக்கு  முன்னர்; "சிறகு" இணைய இதழில் (siragu.com) என்னுடைய முதல்  படைப்பு  வெளியானது. பிப்ரவரி 7, 2014 முதல் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் எனத் தொடர்ந்து சனிக்கிழமைகளில் சிறகு  இதழில் என் படைப்பு இடம் பெறுவது வழக்கம். தோராயமாக, 9 ஆண்டுகள் (பிப்ரவரி 7, 2014-மார்ச் 25, 2023) இரண்டு வாரங்களுக்கு  ஒரு பதிவு என மார்ச் 25, 2023 இதழ் வெளியீடு  நிறுத்தப்படும் வரை சிறகில் தொடர்ந்து ஏதாவது கட்டுரை, கவிதை என்று எழுதிக் கொண்டே இருந்ததில் "241" பதிவுகள் வெளியாகின.  அக்காலத்தில் சிறகு  இதழ் தவிர நான் வேறு எங்கும் என்னுடைய படைப்புகளை அனுப்பவில்லை என்றே சொல்ல வேண்டும். 'ஜாடிக்கு ஏற்ற மூடி' என்பது போல என்னுடைய எழுத்து ஆர்வமும் சிறகு  இதழின் வெளியிடும் கொள்கையும் அந்த அளவு இசைந்து சென்றது.  

மற்ற இதழ்கள் போல பெரியார் குறித்த கட்டுரை அனுப்பினால்  மறுக்கும் வழக்கம் சிறகு  ஆசிரியரிடம் இருக்கவில்லை. என்னுடைய எழுதும் ஆர்வத்தை நன்கு வளர்த்துவிட்டதே சிறகு  இதழ் என்றால் அது மிகைப் படுத்துதல் இல்லை.  அதற்குச் சிறகு  ஆசிரியருக்கு என் நன்றிகள் உரித்தாகிறது. ஆர்வம் உள்ளவர்களை ஆதரிக்கவும் ஆள் வேண்டும் அல்லவா?

வெளியீடுகளை  நிறுத்தினாலும் சிறகு தளம் இணையத்தில் இருக்கத்தான் செய்தது. அண்மையில் ஒரு ஃபேஸ்புக் பதிவு மூலம் சிறகு  இதழ் இணையத்தில் இல்லை என்று அறிந்தேன்.  அது உண்மையும் கூட.  அதுதான் இணையப் பதிவுகளின் நிலை. நான் பார்க்கும் பொழுதே எத்தனையோ இணையத் தளங்கள் மறைவதும், கட்டுரையில் சுட்டிகள் வேலை செய்யாமல் போவதும், படங்கள் எதுவும் தெரியாமல் போவதும் வழக்கமே. 

என்னுடைய படைப்புகளில் ஒரு பொருண்மையில் 25 அல்லது 30 கட்டுரைகள் சேர்ந்தால் நூலாகத் தொகுத்து வெளியிடவும் செய்துள்ளேன்.  பெரும்பாலும் என்  எழுத்துகள் அறிவியல், பெண்ணியம், பெரியாரியம், தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு என்று  எனக்கு ஆர்வம் இருக்கும்  இந்தப் பொருண்மைகளில் அமைவதே வழக்கம்.  பல கட்டுரைகள்  நூல் வடிவம் பெற்றதில்லை. 

திட்ட ஆய்வாளராகப் பணியாற்றிய காரணத்தால் எல்லாவற்றையும் ஆவணப்படுத்திக் கொண்டே செல்வது என் இயல்பாக இருக்கிறது.  அதனால் சிறகில் வெளியான என் படைப்புகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது.  முதல் படைப்பு முதற்கொண்டு நான் சிறகு ஆசிரியருக்கு அனுப்பிய படைப்புகளும் ஜிமெயில் கணக்கில் உள்ளது.  ஆகவே, அவற்றைத் தொடர்ந்து  மீண்டும் இங்கு  பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். பல ஆண்டுகள்  இடைவெளிக்குப் பின்னர் என் எழுத்தை நானே மீண்டும் படிக்கும் வாய்ப்பாகவும் அமையும். 

நன்றி 

அன்புடன் 

தேமொழி 

பி. கு.:  https://web.archive.org/web/20190904103231/http://siragu.com/author/themozhi/

தளத்தில் பழைய சிறகு பதிவுகளைப் படிக்கலாம் 


---

சிறகில் தேமொழி பதிவுகள் 

1. கேளடி கண்மணி – கவிதை (பிப்ரவரி 7, 2014)

2. இந்த மண்ணு நம்ம பூமி (பிப்ரவரி 22, 2014)

3. புகாமுக வகுப்புகள் (மார்ச் 8, 2014)

4. நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம் (மார்ச் 22, 2014)

5. தவிராத சுங்கத் தவிர்த்தோன் (ஏப்ரல் 12, 2014)

6. சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள் (ஏப்ரல் 26, 2014)

7. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு (மே 17, 2014)

8. பிரமிப்பூட்டும் பெண்மணி – கவிதை (மே 31, 2014)

9. தேன்கூட்டின் கட்டமைப்பு: ஒரு வடிவமைப்பின் சிறப்பு (ஜூன் 14, 2014)

10. ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர் (ஜூன் 28, 2014)

11. உறைபனிக்கட்டிகள் உடைவதேன்? (ஜூலை 12, 2014)

12. திரைகடலோடிய தமிழ்ச்செல்வங்கள் (ஜூலை 26, 2014)

13. மகிழ்ச்சி என்றால் என்ன? அதை அடைவதைப் பற்றி அறிவியல் சொல்வதென்ன? (ஆகஸ்ட் 9, 2014)

14. கண்ணதாசனின் சூழ்நிலைப் பாடல்கள் (ஆகஸ்ட் 23, 2014)

15. அறிவியல் ஆய்வறிக்கை: பொருளாதார வளர்ச்சியே உலக மொழிகளை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது (செப்டம்பர் 6, 2014)

16. உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை (செப்டம்பர் 20, 2014)

17. அன்புடை நெஞ்சங்களில் நிகழும் மாறுதல்கள் (அக்டோபர் 4, 2014)

18. பழங்குடி மக்களின் நாளாக மாறிடும் கொலம்பஸ் நாள் (அக்டோபர் 18, 2014)

19. மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும் நீர்ப்பாசியின் வைரஸ்கள் (நவம்பர் 1, 2014)

20. ஒரு சிலர் மட்டும் அதிகநாட்கள் உயிர் வாழக் காரணம் என்ன ? (நவம்பர் 15, 2014)

21. மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பழங்குடியினர் (நவம்பர் 29, 2014)

22. ஆட்டம் காணும் அமெரிக்க ஆன்மிகம் (டிசம்பர் 20, 2014)

23. இனபேத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் அமெரிக்க கறுப்பின மக்கள் (ஜனவரி 24, 2015)

24. உலகநாதர் இயற்றிய உலகநீதி (பிப்ரவரி 14, 2015)

25. உலகநாதர் இயற்றிய உலகநீதி – பாகம் 2 (பிப்ரவரி 21, 2015)

26. உலகின் எளிமையான அதிபர் ஹோஸே முயீகா பதவியிலிருந்து விடைபெற்றார் (மார்ச் 7, 2015)

27. அடுக்களை அறிவியல்: சோற்றை சமைக்கும் முறையில் செய்யும் மாற்றம், மாவுச்சத்து செரிக்கப்படுவதைக் குறைக்கும் (ஏப்ரல் 4, 2015)

28. கற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும் (ஏப்ரல் 18, 2015)

29. பாவேந்தரும் அரங்கநாதரும் (மே 2, 2015)

30. இன்ஜ் லேமேன்: புவி திடமான உட்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர் (மே 17, 2015)

31. பட்டறிவும் விதிகளும் (மே 30, 2015)

32. இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல்திறனுக்கும் உள்ள தொடர்பு (ஜூன் 13, 2015)

33. 2014 – உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை (ஜூலை 4, 2015)

34. அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? (ஜூலை 18, 2015)

35. இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? (ஜூலை 25, 2015)

36. தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் (ஆகஸ்ட் 8, 2015)

37. அமெரிக்காவில் யோகா (ஆகஸ்ட் 22, 2015)

38. உலகெங்கிலும் அகதிகளின் அவலநிலை (செப்டம்பர் 5, 2015)

39. தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 1 (செப்டம்பர் 19, 2015)

40. தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 2 (செப்டம்பர் 26, 2015)

41. உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? (அக்டோபர் 10, 2015)

42. ஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி (அக்டோபர் 24, 2015)

43. ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் வேறுபாடில்லை (நவம்பர் 7, 2015)

44. 438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை (நவம்பர் 21, 2015)

45. 438 நாட்கள் கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 2 (நவம்பர் 28, 2015)

46. 438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3 (டிசம்பர் 7, 2015)

47. பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா (டிசம்பர் 26, 2015)

48. என் அப்பா(சிறுகதை) (ஜனவரி 9, 2016)

49. என் அப்பா(சிறுகதை-இறுதிப்பகுதி) (ஜனவரி 16, 2016)

50. பாயும் காளை (ஜனவரி 23, 2016)

51. வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்? (பிப்ரவரி 6, 2016)

52. மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள் (பிப்ரவரி 20, 2016)

53. கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை (மார்ச் 5, 2016)

54. கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை: பகுதி-2 (மார்ச் 12, 2016)

55. ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை (மார்ச் 26, 2016)

56. சிறந்த உணவுமுறை எது? (ஏப்ரல் 9, 2016)

57. கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை (ஏப்ரல் 23, 2016)

58. அமெரிக்கர்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு எதிரானவர்களா? (மே 7, 2016)

59. வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும் (மே 17, 2016)

60. ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள் (மே 28, 2016)

61. கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா? (ஜூன் 11, 2016)

62. மரபணு சிகிச்சை மூலம் பார்வைக் குறைபாட்டிற்குத் தீர்வு (ஜூன் 25, 2016)

63. கோம்பிப் பாட்டு – கவிதை (ஜூலை 9, 2016)

64. மரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையே – அறிவியல் அறிஞர்கள் (ஜூலை 23, 2016)

65. செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி … (ஆகஸ்ட் 6, 2016)

66. அழிந்த அணையும், பெருவெள்ளமும் தொன்மையான நாகரிகமும் (ஆகஸ்ட் 20, 2016)

67. பயனில செய்யாமை (செப்டம்பர் 10, 2016)

68. அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் - I (செப்டம்பர் 17, 2016)

69. அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் - II (செப்டம்பர் 24, 2016)

70. நாட்டுப்புறக் கலைகளில் இறைவணக்கப் பாடல்கள் (அக்டோபர் 15, 2016)

71. மருத்துவத்தில் நோய் கண்டறிய உதவும் கணினியின் செயற்கை நுண்ணறிவு (அக்டோபர் 28, 2016)

72. அமெரிக்க அதிபர் பதவி, பெண்களுக்கு ஒரு தகர்க்கவியலாத கண்ணாடிக்கூரை (நவம்பர் 12, 2016)

73. இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது (டிசம்பர் 3, 2016)

74. இலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும் (டிசம்பர் 10, 2016)

75. துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறை (டிசம்பர் 24, 2016)

76. உடல்நலத்திற்கு நன்மையளிப்பதும் தொடர்வதற்கு எளிதானதுமான உணவுமுறையே சிறந்த உணவுமுறை (ஜனவரி 7, 2017)

77. ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு (ஜனவரி 21, 2017)

78. தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம் (பிப்ரவரி 11, 2017)

79. தமிழும் தமிழ் சார்ந்த நிலமும் (பிப்ரவரி 25, 2017)

80. மாகொல் பகைமுகத்த வெள்வேலான் என்பவன் யார்? (மார்ச் 18, 2017)

81. அச்சமற்ற பெண் (ஏப்ரல் 1, 2017)

82. ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா? (ஏப்ரல் 15, 2017)

83. தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா? (ஏப்ரல் 29, 2017)

84. அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னர் (மே 13, 2017)

85. திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் நா. காமராசன் (மே 27, 2017)

86. கணையாழிகளும் அமெரிக்கத் திருமணங்களும் (ஜூன் 10, 2017)

87. தமிழ்த் தாத்தா பெற்ற பதவிகளும் பட்டங்களும் பாராட்டுகளும் (ஜூன் 24, 2017)

88. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தூண்டப்படும் நிலநடுக்கங்களும் (ஜூலை 8, 2017)

89. செவ்வந்தி படம் பிடித்துக் காட்டும் நாகரிகமடைந்த மனிதகுலப் பண்பு நலன்கள் (ஜூலை 22, 2017)

90. தமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும் (ஆகஸ்ட் 5, 2017)

91. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் கட்டமைப்பில் உள்ள மாறுதல் (ஆகஸ்ட் 19, 2017)

92. உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம் (ஆகஸ்ட் 26, 2017)

93. மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அருங்காட்சியகம், அட்லாண்டா (செப்டம்பர் 9, 2017)

94. பெரியார்: நான் யாராயிருந்தாலென்ன? (செப்டம்பர் 16, 2017)

95. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-1) (அக்டோபர் 7, 2017)

96. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-2) (அக்டோபர் 14, 2017)

97. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-3) (அக்டோபர் 21, 2017)

98. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-4) (அக்டோபர் 28, 2017)

99. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-5) (நவம்பர் 4, 2017)

100. இரு பாதைகளும் ஒரு பயணமும் (நவம்பர் 25, 2017)

101. அயல்நாட்டு மாணவர்களை விரும்பும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் (டிசம்பர் 2, 2017)

102. பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – நூல் மதிப்புரை (டிசம்பர் 16, 2017)

103. திருச்சி பெரியார் மாளிகை (ஜனவரி 20, 2018)

104. திருமலைராயனும் காளமேகப்புலவரும் (பிப்ரவரி 17, 2018)

105. ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் (மார்ச் 3, 2018)

106. பெண்களுக்கான அறிவுரைகள் (மார்ச் 17, 2018)

107. “கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தோன்றும் புதைகுழிகளும் “ (மார்ச் 31, 2018)

108. இசையறிஞர் சுப்பராம தீட்சிதர் (ஏப்ரல் 14, 2018)

109. சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” (ஏப்ரல் 28, 2018)

110. புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும் (மே 12, 2018)

111. அணங்கு (மே 26, 2018)

112. ஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும் (ஜூன் 9, 2018)

113. புரட்சிப் பதிகம் பாடிய நங்கை (ஜூன் 23, 2018)

114. “ஔவைப்பாட்டி” (ஜூலை 7, 2018)

115. திறன்பேசியின் வளர்ச்சி (ஜூலை 21, 2018)

116. ஸ்குடாய்ட்: கணித வடிவியலில் ஒரு புதிய வடிவம் அறிமுகம் (ஆகஸ்ட் 4, 2018)

117. ஓயாது உழைத்த கலைஞர் (ஆகஸ்ட் 11, 2018)

118. உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள் (ஆகஸ்ட் 18, 2018)

119. தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள் (செப்டம்பர் 1, 2018)

120. “நான் யார்?” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம் (செப்டம்பர் 15, 2018)

121. புறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து (செப்டம்பர் 29, 2018)

122. பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல் (அக்டோபர் 13, 2018)

123. மங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும் (அக்டோபர் 27, 2018)

124. கோண்டு ஓவியம் (நவம்பர் 10, 2018)

125. “விழித்தெழுக என் தேசம்” – நூல் மதிப்புரை (நவம்பர் 24, 2018)

126. புற்றுநோயைக் கண்டறியும் விலை குறைந்த, எளிய சோதனை முறை கண்டுபிடிப்பு (டிசம்பர் 8, 2018)

127. களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன? (டிசம்பர் 22, 2018)

128. ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ் (ஜனவரி 5, 2019)

129. மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை (ஜனவரி 19, 2019)

130. ‘தி காந்தி மர்டர்’ (பிப்ரவரி 2, 2019)

131. தமிழ் வளர்ச்சியில் ஐரோப்பியரால் விளைந்த திருப்புமுனை (பிப்ரவரி 15, 2019)

132. ம.பொ.சி. யின் வாசிப்பில் சிலப்பதிகாரம் (மார்ச் 2, 2019)

133. ஹச்சிமோஜி டிஎன்ஏ (மார்ச் 9, 2019)

134. பெண்களுக்கு நாம் காட்டுகின்ற வழி என்ன? (மார்ச் 16, 2019)

135. நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன் (மார்ச் 30, 2019)

136. காவிரிக்கு உரியவர் யார்? (ஏப்ரல் 13, 2019)

137. கலைக்காக ஒரு கதை (ஏப்ரல் 27, 2019)

138. வெஸ்ட்மினிஸ்டர் அபே நினைவுச்சின்னத்தில் திருச்சி மலைக்கோட்டை (மே 11, 2019)

139. ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’ (மே 25, 2019)

140. கலைஞர் நடத்திய அறப்போர் (ஜூன் 1, 2019)

141. எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள் (ஜூன் 15, 2019)

142. ஆசாரக்கோவை காட்டும் தீண்டாமை (ஜூன் 29, 2019)

143. சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள் (ஜூலை 13, 2019)

144. கருத்து நயத்திற்கு ஓர் காளமேகம் (ஜூலை 27, 2019)

145. இந்திய செய்தி நிறுவனங்களின் சாதீய முகம் (ஆகஸ்ட் 10, 2019)

146. இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை (ஆகஸ்ட் 24, 2019)

147. இனியது கேட்கின்… இனிது இனிது இனியவை நாற்பது (செப்டம்பர் 7, 2019)

148. பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் … (செப்டம்பர் 14, 2019)

149. பள்ளிகளின் ஊடே ஒரு பயணம் (செப்டம்பர் 28, 2019)

150. தமிழர் மருத்துவமுறை குறித்து அறிய உதவும் தொன்ம நூல்களும் ஓலைச்சுவடிகளும் (அக்டோபர் 12, 2019)

151. சோழர்காலத்தின் மருத்துவம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் (அக்டோபர் 26, 2019)

152. சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது? (நவம்பர் 9, 2019)

153. ஆய்வு வழியில் வள்ளுவர் (நவம்பர் 23, 2019)

154. மனிதநேயம் கூறும் ஓர் அறிவியல் புதினம் (டிசம்பர் 7, 2019)

155. செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி (டிசம்பர் 21, 2019)

156. நாமும் பார்ப்போம் (ஜனவரி 4, 2020)

157. குடி பெயர்க்கப்படுவோருக்கு அளிக்கப்படும் இழப்பீடு குறித்து  சோழர்காலக் கல்வெட்டுச் செய்திகள் (ஜனவரி 18, 2020)

158. திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன? (பிப்ரவரி 1, 2020)

159. பெரியபுராணமும் பெரியகோயிலும் (பிப்ரவரி 15, 2020)

160. குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது? (பிப்ரவரி 29, 2020)

161. அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -1 (மார்ச் 14, 2020)

162. அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2 (மார்ச் 21, 2020)

163. சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி (மார்ச் 28, 2020)

164. குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம் (ஏப்ரல் 11, 2020)

165. முல்லைப்பாட்டுக்கு எழுதப்பட்ட உரைகள் (ஏப்ரல் 25, 2020)

166. சரஸ்வதி என்பது சரஸ்வதிதானா? (மே 9, 2020)

167. தொற்றுநோய் பரவலைக் காட்டும் மருத்துவ புவி-வரைபடங்களின் வரலாறு (மே 23, 2020)

168. பொன்மகள் வந்தாள் (ஜூன் 6, 2020)

169. பாலம் ஏன் பாடியது? (ஜூன் 20, 2020)

170. அமெரிக்காவின் வரலாறு புரட்சிகளால் எழுதப்படுகிறது (ஜூலை 4, 2020)

171. மீக்கூறல் (ஜூலை 18, 2020)

172. திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்கள் (ஆகஸ்ட் 1, 2020)

173. அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் (ஆகஸ்ட் 8, 2020)

174. தரை மேல் பிறப்பு தண்ணீரில் பிழைப்பு (ஆகஸ்ட் 22, 2020)

175. இணையவழி அறிவிப்புகள் உருவாக்குவோருக்கு எளிய குறிப்புதவிகள் (செப்டம்பர் 5, 2020)

176. பெரியார் எப்பொழுது பெரியார் ஆனார்? (செப்டம்பர் 19, 2020)

177. அன்பின் ஐந்திணை (– குறிஞ்சி +முன்னுரை) (அக்டோபர் 10, 2020)

178. அன்பின் ஐந்திணை – நெய்தல் (அக்டோபர் 24, 2020)

179. அன்பின் ஐந்திணை – பாலை (நவம்பர் 7, 2020)

180. இந்தியாவின் மிகப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் (நவம்பர் 21, 2020)

181. எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார் (டிசம்பர் 5, 2020)

182. பெரியார் பெருமை பெரிதே! (டிசம்பர் 19, 2020)

183. அன்பின் ஐந்திணை – முல்லை (ஜனவரி 2, 2021)

184. அன்பின் ஐந்திணை – மருதம் (ஜனவரி 16, 2021)

185. இலங்கை தெதிகமகோட்டாவேரா – யானை விளக்கு (ஜனவரி 30, 2021)

186. வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி (பிப்ரவரி 13, 2021)

187. துல்லியத்தை நோக்கி முன்னேறும் உலக வரைபடம் (பிப்ரவரி 27, 2021)

188. உலக காடுகள்: காடழிப்பு நடவடிக்கைகளும் அதன் விளைவுகளும் (மார்ச் 13, 2021)

189. முன்னும் பின்னும் ஓர் ஒப்பீடும் மதிப்பீடும் (மார்ச் 27, 2021)

190. பிரிக்காமல் படிக்கப்படும் கடிதங்கள் (ஏப்ரல் 10, 2021)

191. பாவேந்தரின் உலகம் தழுவிய உயரிய பார்வை (ஏப்ரல் 24, 2021)

192. பாவேந்தரின் பிறந்தநாள் (மே 1, 2021)

193. பாவேந்தரும் பாவலரேறும் (மே 15, 2021)

194. கோவிட் காலத்து அமெரிக்கச் செய்தி ஊடகங்களும் அவை அடையும் மாறுதல்களும் (மே 29, 2021)

195. திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள் (ஜூன் 12, 2021)

196. பாரதிதாசனும் முத்தமிழ் நிலையமும் (ஜூன் 26, 2021)

197. இந்தியர்களின் சமய நம்பிக்கைகளும் வாழ்வும் (ஜூலை 10, 2021)

198. திருமந்திரத்தில் இடைச்செருகல் என்ற திருவிளையாடல் (ஜூலை 24, 2021)

199. கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள் (ஆகஸ்ட் 7, 2021)

200. அறிவுக்கு வேலை கொடு (ஆகஸ்ட் 21, 2021)

201. கடந்த கால சென்னையைக் காட்டும் ஒரு கலைடாஸ்கோப் (செப்டம்பர் 4, 2021)

202. ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள்: இனக்குழுவின் பரவலும் மாடு மேய்ப்புத் தொழிலின் வளர்ச்சியும் (செப்டம்பர் 18, 2021)

203. தமிழில் புதிர்கள் (அக்டோபர் 2, 2021)

204. ஆங்கிலம் இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும்: பண்டிதர் அயோத்திதாசர் (அக்டோபர் 16, 2021)

205. சிறுகதை: குறை நிறை மதிப்பிடும் முறை (அக்டோபர் 30, 2021)

206. எட்கர் தர்ஸ்டனின் மானுடவியல் பார்வையில் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் (நவம்பர் 13, 2021)

207. தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ (டிசம்பர் 11, 2021)

208. ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்” (டிசம்பர் 25, 2021)

209. புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ (ஜனவரி 8, 2022)

210. முன்னோர் வழிபாடு குறித்த சமூகப்பண்பாட்டு ஆய்வு (ஜனவரி 22, 2022)

211. டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ (பிப்ரவரி 5, 2022)

212. நாட்டுப்பண் அறிவுறுத்தும் பண்பாடு (பிப்ரவரி 19, 2022)

213. கலிபோர்னியா மாநிலத்தின் சாதி எதிர்ப்புக் கொள்கை (மார்ச் 5, 2022)

214. நகர விரிவாக்கமும் மார்செட்டி மாறிலி கோட்பாடும் (மார்ச் 19, 2022)

215. மாமல்லபுரத்துச் சமணச் சிற்பம் ⁠— 1 (ஏப்ரல் 2, 2022)

216. மாமல்லபுரத்துச் சமணச் சிற்பம் ⁠— 2 (ஏப்ரல் 16, 2022)

217. தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 30, 2022)

218. மயிலாடும்பாறை மூத்த தமிழ்க்குடியின் வாளின் காலம் (மே 14, 2022)

219. சதக இலக்கியங்கள் (மே 28, 2022)

220. நெல் வேளாண்மையும் கோழி வளர்ப்பின் தொடக்கமும் (ஜூன் 11, 2022)

221. வரலாற்றுச் சிறப்பு மிக்க “அமெரிக்க நெடுஞ்சாலை 66″ (ஜூன் 25, 2022)

222. கடற்காலமானி: நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வு (ஜூலை 9, 2022)

223. ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் – 1 (ஜூலை 23, 2022)

224. ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் – 2 (ஜூலை 30, 2022)

225. இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் (ஆகஸ்ட் 6, 2022)

226. பாவேந்தர் பாரதிதாசனின் காப்பியம் ⁠— குறிஞ்சித் திட்டு (ஆகஸ்ட் 20, 2022)

227. வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் (செப்டம்பர் 3, 2022)

228. முச்சொல்முகவரி (செப்டம்பர் 17, 2022)

229. ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் (அக்டோபர் 1, 2022)

230. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (அக்டோபர் 15, 2022)

231. மனுஸ்மிருதி குறித்து விளக்கும் அறப்போர் (நவம்பர் 5, 2022)

232. அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது? - I (நவம்பர் 19, 2022)

233. அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது? - II (நவம்பர் 28, 2022)

234. செநுவுடன் ஓர் கலந்துரையாடல் (டிசம்பர் 10, 2022)

235. பெரியார் என்னும் அறிவியக்கப் பேராற்றல் (டிசம்பர் 24, 2022)

236. மரை என்ற மானினம் (ஜனவரி 7, 2023)

237. ஆதிச்சநல்லூர் பானையோட்டின் நெய்தல் நிலக்காட்சி (ஜனவரி 28, 2023)

238. தமிழ் இலக்கியங்களில் முதலைகள் — ஓர் மீளாய்வு (பிப்ரவரி 11, 2023)

239. தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு (பிப்ரவரி 25, 2023)

240. தோழமையுடன் தோழர் பெரியார் (மார்ச் 11, 2023)

241. முக்கோற்பகவர் யார்? (மார்ச் 25, 2023)

----

Thursday, June 26, 2025

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

வாழ்வியல் நெறிகளின் களஞ்சியமான திருக்குறள் தமிழ் இலக்கியங்களுள் மிகவும் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட இலக்கியம். ஈரடிகளும் ஏழு சொற்களும் கொண்ட 1,330 குறள் வெண்பா செய்யுள்களில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்புகளில் தமிழரின் மெய்யியலை வள்ளுவர் வழங்கியிருக்கிறார். உலகில் பலருக்கும், எக்காலத்திலும் பயன் தரும் நெறிகளாக இருப்பதாலும், பாடல்களின் கவிநயத்தாலும் பலராலும் விரும்பப்பட்டுப் பல மொழிகளிலும் திருக்குறள் கருத்துகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட எந்த ஒரு சமயக் கோட்பாடுகளையும் முதன்மைப்படுத்தாத வள்ளுவத்திற்கு மற்ற சமய நூல்கள் போன்ற ஆதரவு பெற்ற பரப்புரை வாய்ப்புகள் இருந்ததில்லை. கடந்த காலத் தமிழக அரசர்களும் கூட திருக்குறளை முதன்மைப்படுத்தி தங்களுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டதில்லை.
 
கற்றோர் தமிழராக இருந்தாலும், அல்லது அவர் அயலாராக இருந்தாலும் குறளின் அறிமுகம் கிட்டிய பிறகு, குறளின் சிறப்பினால் கவரப்பட்டு குறளை பலகாலம் கடத்தியும் பிறமொழிகளில் பரப்பியும் வந்துள்ளனர். திருக்குறளின் பரந்துபட்ட வளர்ச்சிக்கு ஐரோப்பியர்களின் இந்திய வருகையே காரணமாக இருந்தது என்றால் அது மிகைப்படுத்துதல் இல்லை. சமயம் பரப்ப வந்த ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பரப்புரையாளர்களும், ஆட்சிப் பொறுப்பேற்ற மற்ற பிற ஐரோப்பியர்களும் சமயம் கடந்த நோக்குடன் திருக்குறளை அணுகிய பொழுது திருக்குறளால் கவரப்பட்டு அதைப் பலர் அறியச் செய்யும் முயற்சியில் இறங்கினர். அவர்கள் காலத்தில் அறிமுகமாகியிருந்த அச்சு இயந்திரங்களும், அச்சு நூல் வடிவில் குறளை வெளியிட வேண்டும் என்ற ஆர்வமும் 19 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு திருக்குறளைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தது.
 
மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்துதல்:
முதன்முதலில் 1812-ம் ஆண்டு அச்சுக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து அச்சில் உள்ள நூலாகத் திகழ்கிறது திருக்குறள். அத்துடன், உலகின் அதிகமாக,  2025ஆம் ஆண்டின் கணக்கின்படி 62 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. பெரும்பாலும் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்துகையில் இந்திய மொழிகளில் திருக்குறள், ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள், ஆசிய மொழிகளில் திருக்குறள் என்று வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது.
 
கமில் சுவெலபில் தாம் மேற்கொண்ட ஆய்வுப்படி, 1975-ம் ஆண்டின் முடிவில் திருக்குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாகத் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார்.  2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 58 பழங்குடியின மொழிகள் உட்பட 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்தது. ஆங்கில  மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை தோராயமாக 100க்கும் மேல் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 

இந்த 2025 ஆம் ஆண்டின் கணக்குப்படி
உலக அளவில் 345 முறை 61 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது; நிறைவுசெய்யப்பட்ட மொத்த மொழிபெயர்ப்புகள் எண்ணிக்கை 61 (இந்திய மொழிகள்: 29, வெளிநாட்டு மொழிகள்:35)
(ஆய்வு நோக்கில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உலகப் பரவலாக்கலும்.  ச.பார்த்தசாரதி, பேரவையின் 38 வது தமிழ்விழா மலர், ஜூலை 2025; பக்கம் : 104-105.   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை-கேரொலைனா தமிழ்ச்சங்கம்.)
 
இந்திய மொழிகளில்:
அவாதி, அஸ்ஸாமி, இந்தி,  உருது, ஒரியா,
கரோ, கன்னடம், காஷ்மீரி, குஜராத்தி, கொங்கணி,
கொடவா, கொரகா, சந்தாலி, சமஸ்கிருதம், சௌராஷ்ட்ரா,
டோக்ரி, துளு, தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி,
படுகா, பிராஹுவி, போடா, போஜ்பூரி, மணிப்பூரி,
மராத்தி,  மலையாளம், மைத்திலி, வக்ரிபோலி, வங்காளம்
ஆகிய 30 மொழிகளிலும்;
 
ஐரோப்பிய மொழிகளில்:
ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், இலத்தீன், போலிஷ், செக், டேனிஷ், டச்சு, ஃபின்னிஷ், இத்தாலியன், நார்வேஜியன், ஸ்வீடிஷ், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், ஹங்கேரியன், கிரேக்கம் ஆகிய மொழிகளிலும்;
 
ஆசிய மொழிகளில்:
அரபு, மலாய், சீனம், ஃபிஜியன், ஜப்பானியம், கொரியன், சிங்களம், பர்மியம் , தாய், கரோ, இந்தோனேசியம், கம்போடியம் ஆகிய  மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.
 
பிறமொழியில் குறளின் மொழிபெயர்ப்பு என்றால் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மலையாள மொழியில் திருக்குறள் முதலில் 1595 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மலையாள மொழியில் குறளின் 16 ஆம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பு நூல் ஓலைச்சுவடியாகக் கிடைத்திருக்கிறது. இருப்பினும், இந்தியமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு 19 ஆம் நூற்றாண்டில்தான் அதிக எண்ணிக்கையில் வெளியாகத் துவங்கின. இந்திய மொழிகளிலேயே மலையாளத்தில்தான் அதிக எண்ணிக்கையில் திருக்குறள் 16 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 

 
திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட முதல் ஐரோப்பிய மொழி இலத்தீன் மொழியாகும். திருக்குறளை 1730 ஆம் ஆண்டு இலத்தீனில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் என்று தமிழர்களால் அறியப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi, 1680 — 1747) என்ற இத்தாலிய நாட்டுக் கத்தோலிக்க கிறித்தவ சமயப் பரப்புரையாளர். இவர் குறளின் காமத்துப்பால் பகுதி சமய பரப்புரையாளர் படிக்க ஏற்றதல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்ததால், குறளின் அறம், பொருள் பிரிவுகளை மட்டும் மொழி பெயர்த்துவிட்டு, காமத்துப்பாலைத் தவிர்த்து விட்டார்.
 
ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்தில்தான் திருக்குறள் அதிக முறையாக 100க்கும் மேற்பட்ட முறை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நதானியேல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (Nathaniel Edward Kindersley) என்பவரால் 1794 இல் ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் ஒரு சில குறள்களை மொழிபெயர்த்துத் தான் எழுதிய ‘ஸ்பெசிமென்ஸ் ஆஃப் இந்து லிட்ரேச்சர்’ (Specimens of Hindoo Literature) என்ற நூலில், ‘எக்ஸ்ட்ராக்ட்ஸ் ஃப்ரம் தி திருவள்ளுவர் குறள்’ (Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom) என்ற தலைப்பு கொண்ட அத்தியாயத்தில் கொடுத்திருந்தார்.
 
பின்னர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis), 1812 ஆம் ஆண்டு தான் எழுதிய ‘திருக்குறள் ஆன் விர்ச்யூ வித் கமெண்ட்டரி’ (Thirukural on Virtue (in verse) with Commentary) 120 குறள்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து, 1840ஆம் ஆண்டில் வில்லியம் ஹென்றி ட்ரூ (William Henry Drew) முதல் 630 குறட்பாக்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். பின்னர், 1885 ஆம் ஆண்டில் ஜான் லாசரஸ் (John Lazarus) விடுபட்ட பகுதியை மொழிபெயர்த்ததுடன், வில்லியம் ஹென்றி ட்ரூ மொழிபெயர்த்தவற்றையும் மேம்படுத்தி திருக்குறள் மொழிபெயர்ப்பை முழுமையாக்கினார். சார்லஸ் கோவர்(Charles E. Gover) 1872 ஆம் ஆண்டில் ஒரு சில குறள்களையும், எட்வர்ட் ஜூவிட் ராபின்சன் (Edward Jewitt Robinson) 1873ஆம் ஆண்டிலும் காமத்துப்பால் தவிர்த்துப் பிற பகுதிகளையும் எனக் குறளின் முழுமையுறாத ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டனர்.
 
இவ்வாறு முழுமையற்ற வகையில் பகுதி மொழிபெயர்ப்புகளாக வெளிவந்து கொண்டிருந்த திருக்குறள் மொழிபெயர்ப்புகளுக்குப் பிறகு, முதல் முறையாகத் தனி ஒரு மொழிபெயர்ப்பாளரால் முழுமையாக ஜி.யு. போப் அவர்களால் 1886ஆம் ஆண்டில் திருக்குறள் ‘எ கலெக்க்ஷன் ஆஃப் தி இங்லீஷ் டிரான்ஸ்லேஷன் ஆஃப் திருக்குறள்’ (A Collection of the English Translation of Thirukural) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.யு. போப் செய்த மொழிபெயர்ப்பு உலக அளவில் திருக்குறளைக் கொண்டு சேர்த்தது. அவருக்குப் பிறகு பிறகு 30 ஆண்டுகள் கழித்து வ. வே. சு. ஐயர் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த பாரதியார், ஆ. சக்கிரவர்த்தி, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி எனப் பலர் திருக்குறளை அதன் பிறகு முழுமையாகவோ அல்லது பகுதி மொழிபெயர்ப்புகளாகவோ வெளியிட்டனர்.
 
இவ்வாறுமுழுமையாகவோ, பகுதி மொழிபெயர்ப்பாகவோ  திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இன்றைய நாள் வரை  நூற்றுக்கும் மேற்பட்ட முறையில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அண்மையில் 2021ஆம் ஆண்டு அமெரிக்கத் தமிழ் ஆர்வலர் தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மா திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவற்றில் சற்றொப்ப 37+ மொழிபெயர்ப்புகள் முழுமையானவை எனக் கருதப்படுகிறது. இதுவரை அறிவித்த திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தவிர்த்து மீதம் உள்ள 52 மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நிலையைத் திருக்குறள் அடையும் என்பது வலைத்தமிழ் தரும் மதிப்பீடு (திருக்குறள் மொழிபெயர்ப்புகள் முடிந்த பட்டியல் - 2025).
 
மொழிபெயர்ப்புகள் குறித்த மதிப்பீடுகள்:
திருக்குறளுக்கு உரை எழுதுவோரின் பண்பாட்டுப் பின்னணி அவரது உரைகளில் எதிரொலிப்பது போல, மொழிபெயர்ப்பாளர்களின் பண்பாட்டுப் பின்னணியும் மொழிபெயர்ப்புகளில் எதிரொலிப்பது உண்டு. மொழிபெயர்ப்புகள் செய்யுள் வடிவிலோ, அல்லது உரைநடையாகவோ அல்லது இரண்டும் கலந்த வகையிலோ அமைவதும் உண்டு. ஆரம்பக் காலத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் பிறிதொரு மொழியிலோ, அல்லது அயல் மொழிக்காரர்கள் தமிழ் கற்றறிந்து தங்கள் மொழியில் மொழி பெயர்ப்பதாகவோ அமைந்து வந்தது. ஜி.யு. போப் ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பிறகு, ஆங்கிலத்திலிருந்து பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்பது அதிகரித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில்தான் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும்.
 
திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே உள்ளன என்று 2015ஆம் ஆண்டு டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“ என்ற பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் கூறுகின்றன. ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களைச் சுட்டிக் காட்டியதுடன், இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் மூல நூலுடன் நெருக்கமாக அமைந்துள்ளதே தவிர, அதில் கவிதை நயம் போன்றவை வெளிப்படவில்லை என்றும், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே கருத முடியும் ஆய்வாளர்கள் கருதியுள்ளார்கள். இக்கட்டுரைகள் நூல் வடிவிலும் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
 
 “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” என்று இடைக்காடரும்
 
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” என்று ஒளவையாரும்
 
திருக்குறளின் பொருள் பொதிந்த நுண்மையைப் பாராட்டியுள்ளனர். இச்சிறப்பிற்கு ஏழு சீர்களுக்குள் கூறவந்த அனைத்தையும் அடக்கிவிடும் ஆற்றல் கொண்ட குறள் வெண்பா அமைப்பே காரணம். எனினும் இச்சிறப்பே பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் பொழுது மொழி நடையின் அழகு குறையாமல் பாடல் வடிவில் குறளைக் கொண்டு செல்ல சிக்கலாகவும் அமைந்துவிடுவதாகவும் கருதப்படுகிறது.
 
‘குறள் ஒரு சீர்மை உடையது. தெளிவாக உணர்ந்து அறியத்தக்கது. ஒருமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரு நாகரிகத்தைச் சித்தரித்துக் காட்டும் ஓர் ஒருங்கு இணைந்த ஓவியம்’ என்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு.போப் குறிப்பிடுகிறார். மொழிபெயர்ப்பு முயற்சிகளில் திருக்குறள் தனது கவிதைச் சிறப்பையும் கவர்ச்சியையும் இழந்துவிடுவதாக மொழிபெயர்ப்பாளர்களும் தமிழில் திருக்குறள் அறிந்தவர்களும் உணர்கிறார்கள். குறளின் செய்யுள் அழகையும் பாடலின் கருத்துச் சிறப்பையும் மொழிபெயர்ப்பதைச் சவால் கொண்டதாகவே சுவெலபில் அவர்களும் குறிப்பிடுகிறார். அத்துடன், குறளை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், “நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ் மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது” திருக்குறள் கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும் குறளின் தமிழ் மூலத்தைப் படிப்பதன் வாயிலாக மட்டுமே வள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய முடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார். இருப்பினும் அண்மைய வெளியீடான தாமஸ் ஹிட்டோஷி புருக்ஸ்மா திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நடையில் அமைந்திருப்பதாகப்  பாராட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
References:
https://en.wikipedia.org/wiki/Kural
https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations
https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations_into_English
https://en.wikipedia.org/wiki/List_of_translators_into_English
https://en.wikipedia.org/wiki/List_of_Tirukkural_translations_by_language
https://www.valaitamil.com/thirukural-translation-completed-2025_21687.html
 
இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரை (2025 ஜூன்)

நன்றி : சிறகு - http://siragu.com/திருக்குறள்-மொழிபெயர்ப்/
அக்டோபர்  15, 2022


#சிறகு, #திருக்குறள்,  #Themozhi     

Saturday, February 11, 2023

தமிழ் இலக்கியங்களில் முதலைகள்

முன்னுரை:

இன்றிலிருந்து சற்றேறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாடு எனக் கணிக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் - ஆதிச்சநல்லூர்  பகுதி பழந்தமிழர் நாகரிகத்திற்குச் சான்றாக அகழாய்வில் கிடைத்துள்ள  பெருங்கற்காலத்துத் தொல்லியல் தடயங்களுள் ஒன்று புடைப்பு உருவங்கள் உள்ள பானையோடு.  அதில்,  ஒரு பெண்ணுருவமும், கொக்கு அமர்ந்துள்ள தாழை மரம் ஒன்று அவளுக்கு வலப்புறத்திலும், ஆண் மரைமான் ஒன்று அவளுக்கு இடப்புறத்திலும், அவளது காலருகில்  முதலை ஒன்றும் இருக்கும் காட்சி ஒட்டுருவமாக (applique) பானையோட்டில் காணப்படுகின்றது[1]. 

இது போன்ற ஒரு காட்சி,  இயற்கையையும் அது சார்ந்த செய்திகளையும்  மிக நுணுக்கமாகப் பதிவு செய்யும் பழந்தொகை நூல்களில்,  குறிப்பாக நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் இடம் பெறும் 'நெய்தல்' நிலக் காட்சியாகும்.  கருமையான கால்களைக் கொண்ட வெண்கொக்கு தாழை மரத்தில் அமர்ந்திருப்பதையும், கழிகளில் இருக்கும் முதலைகள் குறித்தும் பாடல் வரிகளில் இடம் பெறுவது வழக்கமே. 

          "கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை

          வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை"

                     - குறுந்தொகை, நெய்தல், பாடல்: 324

வளைந்த கால்களையுடைய, கொல்லுதலில் வல்ல ஆண் முதலை வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறை என்பது பாடல் விவரிக்கும் நெய்தல் நிலத்தின் கடற்கரை சோலை ஒன்றின் காட்சி.

முதலைகளை இடங்கர், கராம், முதலை என்று பல பெயர்களில் இலக்கியப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் தொன்று தொட்டுக் காணப்படும் முதலை வகைகள் மூன்றாகும். அவை 1. முதலை, 2. கராம் அல்லது கராஅம், 3. இடங்கர் ஆகியன.  இச்சொற்கள் முதலையைக் குறிக்கும் பல சொற்கள் (ஒருபொருட் பன்மொழி) என்ற புரிதலில்  இருக்கும் பொழுது, அச்சொற்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ஒரு சொற்றொடரில் வருகையில் அவை வெவ்வேறு தனிச் சிறப்பு கொண்டவையாக இருக்கக்கூடும்  என்பதை நாம் உணரலாம்.

          "கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்"

                    (குறிஞ்சிப்பாட்டு-257)

என்று வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும் என்று குறிஞ்சிப்பாட்டு தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறது. ஆகவே அனைத்தும் முதலை அல்ல. இன்று பொதுவாக முதலை என அறியப்பட்டாலும் இவை வெவ்வேறு முதலை இனத்தைக் குறிக்கும் கலைச்சொற்கள்.  எடுத்துக்காட்டாக, 'கராம்' என்றால் இது எங்கெங்கு காணப்படும் முதலைகள், அவற்றின் பண்புகள் என்ன, தோற்றம் எவ்வாறு இருக்கும் என்ற குறிப்புகளை கராம் என்ற சொல்லே தெளிவாக அறியத் தரும். 

இவற்றுக்கான வேறுபாட்டைத் தெளிவு படுத்த விரும்பி பாவாணர் அவர்களும் தமது சொல்லாராய்ச்சிக் கட்டுரை ஒன்றில்; 

முதலை  gavial/gharial,

கராஅம்  alligator,

இடங்கர்    crocodile என்று விளக்கியுள்ளார் [2].

முதல் பார்வையிலேயே இவ்விளக்கம்  முற்றிலும் பிழையானது என்பது தெரிந்துவிடுகிறது.

அலிகேட்டர் (alligator) முதலை இனங்கள் இந்தியாவில் கிடையாது.  இவ்வகை முதலை இனங்கள் பெரும்பான்மையும் அமெரிக்கப் பகுதியில் காணப்படுபவை. இடங்கர் என்பதும் குரோக்கோடைல் (crocodile) என அறியப்படுபவை அல்ல.  ஆண் முதலையை கராம் என்று அழைத்ததாகவும் ஒரு தவறான குறிப்பும் இருக்கிறது.  ஆகவே, இந்தியாவில் காணப்படும் முதலை வகைகளைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கும் அடையாளப்படுத்துவதற்குமான தேவை இருப்பது தெரிகிறது. 


இந்தியாவின் முதலை இனங்கள்:

1. கடற்கரையோரமும், கழிமுகப் பகுதிகளிலும் உப்புநீர் பகுதிகளில் வாழ்வனவற்றை "முதலை" (Crocodylus porosus) என்றும்,

      [முதலை  Estuarine or Saltwater Crocodile (Crocodylus porosus)- marine species]

2. ஆறு, குளம் போன்ற நன்னீர் பகுதிகளில் வாழ்வன "கராம்" (Crocodylus palustris) இன முதலைகள் என்றும்,

      [கராம் முதலை — Marsh or  Mugger Crocodile (Crocodylus palustris)- freshwater species]

3. நன்னீர் பகுதிகளில் வாழும் நீண்ட கூம்பு போன்ற முகம் கொண்ட முதலை இனம் "இடங்கர்" (Gavialis gangeticus) ஆகும்.

      [இடங்கர் — Gharial (Gavialis gangeticus)- freshwater species]

 இந்தியாவில் இந்த மூன்று இன முதலைகள் மட்டுமே வாழ்கின்றன [3, 4].   இவ்வாறு வாழுமிடம் அடிப்படையில் முதலை இனத்தைக் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இலக்கிய ஆய்வின் மூலமும் அறியலாம்.

இலக்கியம்  தரும் முதலை குறித்த தரவுகளை மீள் பார்வை செய்ததில், முதலை என்பதைப் பொதுவான சொல்லாக ஏற்கும் முறை காலம் செல்லச் செல்லப் பிற்காலத்தில் அதிகரித்துள்ளது தெரிகிறது. 

கடற்கரையோரமும், கழிமுகப் பகுதிகளிலும் உப்புநீர் பகுதிகளில் வாழ்வனவற்றை முதலை என்றும்,

ஆறு குளம் போன்ற நன்னீர் பகுதிகளில் வாழ்வன கராம் அல்லது மகரம் இன முதலைகள் என்றும்,

நன்னீர் பகுதிகளில் வாழும் நீண்ட கூம்பு போன்ற  முகம் கொண்ட முதலை இனம் இடங்கர் என்றும் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இலக்கியம் மூலம் அறியலாம். 

1. முதலை  Estuarine or Saltwater Crocodile (Crocodylus porosus):

கடற்கரையை ஒட்டிய உப்புநீர்க் கழிகளில், கழிமுகப் பகுதிகளில் வாழ்பவைதான் முதலை என்று அழைக்கப் படுபவை.  இவை உப்பு நீரில் மட்டும் வாழும் தகவமைப்பு கொண்டவை. இந்தியாவின் கிழக்குக் கரையோரங்களில் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் அதிக அளவில் இந்த இன முதலைகள் வாழ்கின்றன, இவை அழியக் கூடும் என்ற எச்சரிக்கை இல்லாத நிலையிலும் உள்ளவை. ஊர்வனவற்றிலேயே உலக அளவில் மிகப் பெரிய விலங்காக இருப்பது  உப்புநீரில் வாழும் முதலைதான், இதன் எடையும் அதிகம், உடலின் நீளமும் 7 மீட்டர் வரையிலும் கூட  இருக்கும்.

இம்முதலைகள் கடல் நீரில் வாழும் சில உயிரினங்கள் போல உடலில் அதிக அளவில் சேரும் உப்பை வெளியேற்றும் சுரப்பிகள் கொண்டவை. இச்சுரப்பிகள்  பெரும்பாலும் வாய்ப்ப குதியில் நாக்கின் அடியே இருப்பது வழக்கம். சில வகை முதலைகளுக்குக் கண்கள் பகுதியிலிருந்து சுரப்பி சுரக்கும் உப்பு நிறைந்த நீர் வெளியாகும். 

பொய் அழுகையை  'முதலைக் கண்ணீர்' (மெய்யான கண்ணீர் அல்ல) என்று குறிப்பிடக் காரணமும் இதுவே. ஆனால், முதலையைப் பொருத்தவரை அதிக அளவு உப்பைச் சுரப்பிகளின் மூலம் வெளியேற்றி, உடலின் உப்பு அளவை சீரான நிலையில் வைத்திருக்க உதவும் ஒரு தகவமைப்பு இது [5].

2. கராம் முதலை — Marsh or  Mugger Crocodile (Crocodylus palustris):

இந்தியாவின்  முதலை என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டால் அது சதுப்புநிலத்தில் (Wetlands/Marsh) வாழும் இந்த முதலைதான். இது இந்தியாவில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் காணப்படும் இனமும் கூட.  இது  நன்னீரில் வாழும் முதலை இனம். இந்தியாவில் சதுப்புநிலங்களும் அதிகம். இயற்கைக்கு அரணாக இருப்பதால் 'நகரங்களின் நுரையீரல்கள்' என்று சதுப்புநிலங்கள்  அழைக்கப்படுகின்றன.    கடல் மட்டத்தைவிடக் குறைவான ஆழம் கொண்ட நீர்நிலையாகக் காணப்படும் சதுப்புநிலங்களின் எண்ணிக்கை   இந்தியாவில்  27,403 [6]. 

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில்தான் சதுப்புநிலக் காடுகள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் சதுப்புநிலப் பகுதிகள் தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா பகுதி, இராமநாதபுரம்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர்,  நாகப்பட்டினம், ஈரோடு, செங்கல்பட்டு, கடலூர், சென்னை போன்ற  மாவட்டங்களில் உள்ளன. தமிழகத்திற்கு அடுத்து, உத்தரப் பிரதேசம்,  ஒடிசா,  ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிலும் சதுப்புநிலங்கள் அதிகம். தொடர்ந்து நடந்த சதுப்புநில வாழிடங்கள் அழிப்பினால் இந்த முதலை இனம் எண்ணிக்கையில் குறைவுற்று  அழிவை நோக்கிச் செல்லும் இனம் (Vulnerable Species) என்று இன்றைய கவனிப்பில் உள்ளது.

இந்த முதலை இனத்தை மகரம் என்று அழைப்பதால் இந்த முதலைக்கு  Mugger Crocodile என்ற பெயர் ஏற்பட்டது.  ஆனால் காலப்போக்கில் மகரம் என்றால் தொன்மக் கதையில் வரும் விலங்கினம் என்ற நிலை உருவானது மட்டுமின்றி,  மகரம் என்பது மகர மீன் வகையைக் குறிப்பதாகவும் மாறிவிட்டது. இவை நன்னீரில் வாழும் என்பதால் கராம் இன முதலை பொய்கை, அகழி, ஏரி, குளம், ஆறு, மடு, குண்டு, வாவி, கடற்கரைப் பகுதி சதுப்புநிலங்கள், கழிகள்  எனப் பல இடங்களில் வாழ்ந்ததாக இலக்கியப் பதிவுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இவை பெரியதும் இன்றி சிறியதும் அன்றி இடைப்பட்ட அளவில் 4 அல்லது 5 மீட்டர் நீளம் கொண்டதாக  இருக்கும். முதலை இனங்களிலேயே மிகவும் அகண்ட வாயமைப்பு உடையதாக இந்த முதலை அறியப் படுகிறது. இவற்றில் ஆண் பெண் என்று பாலினம் பிரித்து அறிவது கடினம். இவற்றின் மேல் தோல்  சதுப்புநிலச் சேற்றுடன் ஒத்துப் போக்கும் வகையில் அடர்த்தியான சாம்பல் கருப்பு நிறத்திலும் மரப்பட்டைகள் செடிகொடிகளுடன் மறைத்துவாழும் வகையில் தகவமைப்பைக்  கொண்டிருக்கும்.

3. இடங்கர் — Gharial (Gavialis gangeticus):

இந்திய முதலைகளில் மிக நீண்ட கூம்பு போன்ற முகம் கொண்ட முதலை இனம் இது. ஒருகாலத்தில் இந்திய நிலப்பரப்பில் பரவலாக வாழ்ந்தாலும் காலப்போக்கில் கங்கைச் சமவெளிப் பகுதியுடன் இடங்கர் இனத்தின் வாழ்விடம் குறுகிவிட்டதாகத் தெரிகிறது. இன்றைய நாட்களில் ஒரிசா மாநிலத்திற்குத் தெற்கே, கோதாவரி ஆற்றுக்குத் தெற்கே  இந்த இனத்தைப் பார்க்க இயலாது என்பது தெரிகிறது. இதில் ஆண் பெண் பாலின வேறுபாட்டைத் தெளிவாகக் காண இயலும், வளர்ந்த ஆண் முதலையின் முகத்தின் நுனிப்பக்கம் குடுவை போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.  இவ்வாறான அடியில் பருத்தும்,  இடுங்கிய  அல்லது குறுகிய நீண்ட கழுத்து கொண்ட குடுவை போன்ற முக அமைப்பின் தோற்றத்தினால் இதற்கு 'காரியல்' (Gharial -  ghara, an Indian word for pot because of a bulbous knob, ஜாடி வகை) என்ற பெயர் வந்தது.  தமிழிலும் 'இடங்கர்' என்பதற்கு 'நீர்மிடா' என்ற பொருள் உண்டு. ஆக, இம்முதலைகளின் முகம் மற்றும் வாய் அமைப்பின்  தோற்றம் காரணமாக இவை  தமிழிலோ அல்லது வடமொழியிலோ அதற்கான பெயரைப் பெற்றுள்ளன என்பது தெரிகிறது.   இடங்கர்  இன முதலைகள் நன்னீரில்  வாழ்வன.  மீன்களை அதிகம் உண்ணும், வட இந்தியக் கங்கைச் சமவெளி முதலை  இனம் இது, இதன் நீளம் 6 மீட்டர் வரை இருக்கும்.  இந்த இனம் அழிவை நோக்கி விரையும் இனம் என்பதால் பாதுகாக்கப் படவேண்டிய இனம் என்ற எச்சரிக்கை நிலையின் கீழ் உள்ளது.

[IUCN Red List of threatened species status: Crocodylus palustris (mugger) vulnerable, Crocodylus porosus (saltwater crocodile) least concern and Gavialis gangeticus (Gharial) Critically Endangered as per IUCN Red List of threatened species.]

எனவே,  இந்தியாவில் காணப்படும் முதலை வகைகள் 'முதலை'  எனப் பொதுவாகக்  குறிப்பிடப்பட்டாலும், அவை கராம் (Crocodylus palustris), முதலை (Crocodylus porosus), இடங்கர் (Gavialis gangeticus) இனங்கள் என்பதையும், அத்துடன் தோற்றத்தாலும், வாழும் இடத்தாலும் வேறுபட்ட முதலை இனங்கள்  என்பதையும் அறியலாம்.  கராம் இன முதலைகளை இடங்கர் வாழும் இடங்களிலும் முதலை வாழும் பகுதிகளிலும் காண இயலும். இன்றைய நாட்களில் இந்த மூன்று இன முதலைகளும் வாழ்வது ஒரிசா மாநிலத்தில் மட்டுமே. 

நிகண்டுகள் இலக்கியம் தரும் செய்திகள்:

முதலை,  கராம்,  இடங்கர் குறித்து இலக்கியம் வழியாக மேலும் தெளிவாக அறிய இயலும்.  இயற்கையையும் அது சார்ந்த செய்திகளையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்யும் பழந்தொகை நூல்களில் முதலைகளை இடங்கர், கராம், முதலை என்று பல பெயர்களில் இலக்கியப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. அவ்வாறே, நிகண்டுகளும் அகராதிகளும் முதலை குறித்த விளக்கங்களையும் அவற்றின் பல்வேறு பெயர்களையும் அறியத் தருகின்றன.

நிகண்டுகளிலும் அகராதிகளிலும் முதலை:

கராம் இன முதலைகள் வடமொழியில் மகரம் (मकर — makara) என்று அழைக்கப்படுவதை சமற்கிருத அகராதி காட்டுகிறது [7]. தமிழ் இலக்கியங்களில் மகரம் என்பது சுறா (Shark) மீனைக் குறிக்கும் என்பதைத் தமிழ் நிகண்டுகள் மூலம் அறிய முடிகிறது.

ஆக, மகரம் என்பது வடமொழி வழக்காற்றில் முதலையையும், தமிழர் வழக்காற்றில் மகரம் என்பது கடலில் வாழும் சுறா மீனைக் குறிப்பதும் தெளிவாகிறது.

கராம் இன முதலையை ஆங்கிலத்தில் பொது வழக்கில் குறிப்பிடுகையில் ‘Mugger Crocodile’ என்று குறிப்பிடுகிறார்கள். முக்கர் என்பது மகரம் என்பதிலிருந்து பெறப்பட்ட பெயர் என்றும் கூறப்படுகிறது (The Mugger Crocodile got its name from Indian mythology, where crocodile-like animal called ‘Magara‘. So the names Mugger and Magar are interchangeably used). [8]

‘தமிழ் இலக்கிய அகராதி’ என்ற அகராதி நூலும் மகரம் என்ற சொல்லுக்கு முதலை என்ற பொருளைக் காட்டுகிறது.[9] இவ்வாறு குழப்பம் தரும் வகையில் மகரம் என்ற சொல் முதலையையும் சுறாவையும் குறிப்பிடும் சொல்லாக ஒருசேரக் காட்டப்படுவதால் தமிழ் நிகண்டுகளிலும், தமிழ் இலக்கியங்களில் பலவற்றிலும் முதலை குறித்த ஆழ்ந்த தேடல் ஒன்று தேவையாகிறது.

சேந்தன் திவாகரம், பிங்கலம், சூடாமணி நிகண்டுகளில் முதலை:

முதலையின்‌ பெயர்‌ — சேந்தன் திவாகரம் நிகண்டு;

கிஞ்சுமாரமும்‌, இடங்கரும்‌, கராமும்‌, வன்‌ மீனும்‌, முதலை (ஆகும்‌) – 196

ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌, அவற்று ஆண்‌ (எனக்‌ கருதல்‌ வேண்டும்‌)-197

 

முதலையின்‌ பெயர்‌ — பிங்கல நிகண்டு;

சிஞ்சுமாரம்‌, இடங்கர்‌, வன்‌ மீன்‌, கராவே, கராமும்‌, முதலை – 318

கரா, அதன்‌ ஆண்‌ (எனக்‌ கருதல்‌ வேண்டும்‌) – 319

 

முதலையின்‌ பெயர்‌ — சூடாமணி நிகண்டு;

முதலை, செங்கிடையும்‌, முருந்தும்‌, இடங்கரும்‌. – 942

அதாவது, கிஞ்சுமாரம்/சிஞ்சுமாரம்‌, இடங்கர்‌, கராம்‌, வன்‌ மீன்‌, செங்கிடை, முருந்து, முதலை ஆகிய பெயர்கள் முதலையைக் குறிக்கும் என்றும், ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌ அல்லது கரா என்றும் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன[10].

நிகண்டுகள் கூறும் கரா = ஆண் முதலை என்ற பொருளை, “கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” என்ற குறிஞ்சிப்பாட்டு வரியுடன் ஒப்பிட்டால், ஆண்‌ முதலையின்‌ பெயர்‌ கராம்‌ அல்லது கரா எனப் பொருள் கொள்வது சரியல்ல என்பதும், இந்தியாவில் தொன்று தொட்டு இன்று முதல் காணப்படும் மூன்று முதலை வகைகளையே குறிஞ்சிப்பாட்டு வரி தெளிவாகக் காட்டுகிறது என்றும் அறியலாம்.

மகரம்‌, சுறா மீன்‌ (ஆக வைப்பர்‌) என சேந்தன் திவாகரம் நிகண்டு-198 [10]

என்று குறிப்பிடுகிறது. இந்த ‘மகரம்’ என்ற சொல்லுக்கு மகர மீன்‌, பெரு மீன்‌, யானை விழுங்கும்‌ மீன்‌, திமிங்கிலம் என்ற விளக்கங்களும் நிகண்டில் காணப்படுகிறது. எனவே, மகரம் என்பது மிகப் பெரிய சுறாமீன், யானையை விழுங்கக் கூடிய தன்மையில் அளவில் பெரியது என்பதுடன் திமிங்கிலம் என்பதாகவும் காட்டப்படுகிறது. மகரம் கடலில் வாழ்வதாக மட்டுமே நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக, ‘முதலையை நிகண்டுகள் மகரம் என்று குறிப்பிடவில்லை’ என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

மலரின்‌ தாதுவான மகரந்தத்தைக் குறிக்கவும், மகரக் குறுக்கம் போன்ற இலக்கண விளக்கங்களிலும் மகரம் என்ற சொல் வேறு பொருள் கொண்டு பயின்று வருகிறது என்பதைக் கடந்துவிடலாம். காமனின் மகரக் கொடியில் மகரம் இருப்பதுடன் பலவகை அணிகலன்களும், இசைக்கருவிகளும் தோரணவாயில்களும் மகர என்ற சொல்லுடன் இணைத்துக் காட்டப்பட்டிருப்பதை மகரக்குழை, மகர வலயம், மகர குண்டலம், மகர வாசிகை, மகர யாழ், மகர வீணை, மகரக் கொடி, மகர தோரண வாயில், மகர ராசி என்ற பொருள் தரும் சொற்கள் மூலம் அறிய முடிகிறது.

 

தமிழ் இலக்கண இலக்கியங்களில் முதலை:

“கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்” என்ற குறிஞ்சிப்பாட்டு வரியை முதலை குறித்த ஆய்வுக்கு அடிப்படையாக இக்கட்டுரை எடுத்துக் கொள்கிறது.

முனைவர் ப. பாண்டியராஜா அவர்கள் உருவாக்கிய இலக்கியத் தொடரடைவுகள் இணையதளம் (tamilconcordance.in) இந்த ஆய்வுக்கு மிகவும் இன்றியமையாத உதவியாக அமைந்தது [11] (பார்க்க – படம்).

தமிழிலக்கியங்கள் மகரம் முதலையைக் குறிக்கவில்லை என்பது ஆய்விற்குப் பின்னர் தெளிவானதால், குழப்பம் தவிர்க்கும் நோக்கில் படத்தில் கொடுக்கப்பட்ட அட்டவணையில் மகரம் குறித்துச் சேகரித்த இலக்கியத் தரவுகள் காட்டப்படவில்லை. அவ்வாறே முதலை என்பது இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளதாகக் குறிக்கப்பட்டாலும், அது பரம்பொருளை/முதல்வனைக் குறிப்பதாக வேறு பொருளில் இடம் பெற்றிருந்தால் எண்ணின் அருகில் கேள்விக்குறி இடப்பட்டுள்ளது.

1. தொல்காப்பியம், 2. இறையனார் அகப்பொருள், 3. புறப்பொருள் வெண்பாமாலை, 4. நன்னூல், 5. நேமிநாதம், 6. சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு + எட்டுத்தொகை 18 நூல்கள்), 7. பதினெண்கீழ்க்கணக்கு(18 நூல்கள்), 8. சிலப்பதிகாரம், 9. மணிமேகலை, 10. சீவக சிந்தாமணி, 11. வளையாபதி, 12. குண்டலகேசி, 13. முத்தொள்ளாயிரம், 14. ஐஞ்சிறுகாப்பியங்கள், 15. கம்பராமாயணம், 16. நளவெண்பா, 17. பெருங்கதை, 18. கலிங்கத்துப்பரணி, 19. வில்லி பாரதம், 20. மூவர் தேவாரம் (திருமுறை 1 – 7), 21. திருவாசகம்(திருமுறை 8(1), 22. திருக்கோவையார்(திருமுறை 8(2), 23. திருமந்திரம் (திருமுறை 10), 24. பெரியபுராணம் (திருமுறை 12), 25. நாலாயிரத் திவ்விய பிரபந்தம், 26. திருப்புகழ், 27. தேம்பாவணி, 28. சீறாப்புராணம், 29. திருவருட்பா, 30. தாயுமானவர் பாடல்கள், 31. இரட்சணிய யாத்திரிகம் — என 65 நூல்களின் தொடரடைவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இந்த நூல்களில் 1. முதலை, 2. கராம்/கராஅம், 3. இடங்கர், 4. மகரம்  ஆகிய சொற்கள் இடம் பெரும் வரிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் கண்டறியப்பட்டவை பின்வருவன:

1. முதலை:

முதலை உப்புநீர் கொண்ட கடற்கரை கழிகளில் இருப்பதாகக் காட்டப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சில பாடல்கள்:

கொடும் ‘கழி’ பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் நாம ‘முதலை’ – நற்றிணை 287/6 (கழி)

இரும் ‘கழி’ ‘முதலை’ மேஎந்தோல் அன்ன – அகநானூறு 3/1 (கழி)

கொடும் தாள் ‘முதலை’ கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் ‘கானல்’ அம் பெரும் துறை – குறுந்தொகை 324/1 (கடற்கரை கானல்)

முதலை நன்னீர் வாழ்வனவாகவும் காட்டப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சில பாடல்கள்:

கோள் வல் ‘முதலை’ய குண்டு கண் ‘அகழி’ – பதிற்றுப்பத்து 53/8

கடு முரண் ‘முதலை’ய நெடு நீர் ‘இலஞ்சி’ – புறநானூறு 37/10

‘ஆறே’ அருமர பினவே; யாறே சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை ‘முதலை’ – அகநானூறு 72/7-9

 

2. கராம்:

தமிழின் முதல் நூலாக அறியப்படும் தொல்காப்பியத்தில் கராம் குறிப்பிடப்படுகிறது.

‘கராஅம்’ கலித்த கண் அகன் ‘பொய்கை’ – பட்டினப்பாலை 242 (பொய்கை)

‘கான்யாற்று’ ‘கராஅம்’ துஞ்சும் – அகநானூறு 18/3 (காட்டாறு)

‘கராஅம்’ கலித்த குண்டு கண் ‘அகழி’ – புறநானூறு 37/7 (அகழி)

‘கய’த்திடை கயமும் வெம் ‘கராமும்’ – வில்லிபாரதம்:1 36/3 (கயம்)

கராம் பொய்கை, காட்டாறு, அகழி, குளம் போன்ற பகுதிகளில் இருப்பதாக மேலே காட்டப்பட்ட பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

 

3. இடங்கர்:

இடங்கர் குறித்த தமிழிலக்கியக் குறிப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன.

உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலைபடுகடாம் 211

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறிஞ்சிப்பாட்டு 257

என்று சங்க இலக்கியங்களில் 2 முறை மட்டும் காணக்கிடைக்கிறது. இடங்கர் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தியவர் பிற்காலத்தில், 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர். கம்பராமாயணத்தில் 12 முறை இடங்கர் குறிப்பிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக: பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று – யுத்1:8 16/3

கம்பராமாயணப் பாடல்களில் இடங்கர் வாழுமிடங்களாகப் பொய்கை (யுத்1:8 16/3), கயம் (யுத்1-மிகை:3 18/1), அகழி (யுத்2:15 4/3), ஆகிய இடங்கள் காட்டப்படுகிறது.

அதற்குப் பிற்காலத்தில் எழுதப்பட்ட வில்லிபாரதம் (1 முறை), திருப்புகழ்(1 முறை), தேம்பாவணி(1 முறை), திருவருட்பா (2 முறை) போன்ற இலக்கியங்களில் இடங்கர் இடம் பெறுகின்றது. ஆனால் இடங்கர்=கராம்= முதலை என்ற பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. இடங்கர் குறித்த இக்குறிப்புகள் கம்பராமாயணம் கொடுத்த தாக்கம் என்று கொள்ள வேண்டியிருக்கிறது.

இடங்கரும் கராமும் முதலையும் வாழுமிடங்கள்:

நற்றிணை பாடல்களில்;

கராம் காட்டாற்றில் இருப்பதாக – நற்றிணைப் பாடல் 292 குறிஞ்சித்திணைப் பாடலும்

முதலை கழியில் இருப்பதாக – நற்றிணைப் பாடல் 287 நெய்தற்திணைப் பாடலும் காட்டுகின்றது

இவை தெளிவான வாழிட வேறுபாடுகளைக் காட்டும் பாடல்களாக உள்ளன.

மாறாக, ஒரே பாடலில் அகழியில் கராமும் முதலையும் இருப்பதாகப் புறநானூறு பாடல் (பாடல் 37) கூறுகிறது. இப்பாடலில் ஒரே அகழியில் உள்ள முதலையைக் குறிக்க கராம் முதலை ஆகிய இரு சொற்களும் அடுத்தடுத்து வருகிறது. இந்த அகழி வஞ்சி மாநகரின் சேரன் கோட்டையினைச் சுற்றியுள்ள அகழி. அதைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போரிட்டு வென்றதைப் பாராட்டி மாறோக்கத்து நப்பசலையார் சில பாடல்களைப் பாடியுள்ளார்.

‘கராஅம்’ செருக்கித்திரியும் ஆழமான இடத்தையுடைய அகழியினையும், கரிய இடமாகிய ஆழத்தில், ஒன்று சேர்ந்து ஓடி யாமத்தை அறிவிப்பவரின் விளக்கின் நிழலினைக் கவ்விப்பிடிக்க முயலும் கடும் பகைமையுணர்வு கொண்ட ‘முதலை’களையுடைய ஆழமான நீரையுடைய நீர்நிலைகளையும் செம்பினால் ஆக்கப்பட்டது போன்ற மதிலையும் உடைய தலைமைப் பண்புள்ள பழமையான வஞ்சி மாநகரை வென்றவன் என்ற பொருள் தரும் கீழ்க்காணும் பாடலை மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்.

சினம் கெழு தானை செம்பியன் மருக

‘கராஅம்’ கலித்த குண்டு கண் அகழி

இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி

யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்

கடு முரண் ‘முதலை’ய நெடு நீர் இலஞ்சி

செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்

புறநானூறு பாடல்: 37/10 – மாறோக்கத்து நப்பசலையார்

இதிலிருந்து சங்க இலக்கியங்களிலேயே நன்னீர் வாழும் கராம் முதலை ஆகியவற்றை ஒரே பொருளில் பயன் கொண்டது தெரிகிறது. இதனால்தான் நிகண்டுகளும் கராம் என்பதை ஆண் முதலை எனக் குறிப்பிடுகின்றன எனக் கருத வேண்டியுள்ளது. ஆனால் முதலை இனத்தில் தோற்றத்தைக் கொண்டு ஆண் பெண் பிரித்தறிவது கடினம் என்று இன்றைய அறிவியல் தரவுகள் காட்டுகின்றன. இடங்கர் இன முதலை வகையில் மட்டுமே தோற்றத்தில் வெளிப்படையான வேறுபாடு காண இயலும்.

இது போன்றே மணிமேகலை பாடல் ஒன்றும் அகழியில் கராமும் இடங்கரும் ஒருசேர இருந்ததாகக் காட்டுகிறது.

கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் – மணிமேகலை:28/18

காஞ்சியின் அகழியில் புகும் பல்வேறு வகையான மணம் பரப்பும் நன்னீர் வகைகள் கலத்தலின் அந்நறுமணம் அங்குள்ள கராம், இடங்கர், மீன்கள் ஆகியவற்றையும் மணம் பெறச் செய்கின்றன என்று சாத்தனார் கூறுகிறார்.

முதலைகள் குறித்து செறிவுமிகுந்த தகவல் தரும் பழந்தொகை நூல்கள்:

ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும் (ஐங்குறுநூறு – 5/4);

தான் ஈன்ற குட்டியையே தானே தின்னும் முதலை (ஐங்குறுநூறு – 24/2; ஐங்குறுநூறு – 41/1,2);

முழங்கால் அளவேயான சிறிது நீரில் யானையைக் கொன்று வீழ்த்த இழுக்கும் ஆற்றலையுடைய முதலை (புறநானூறு 104, வரி 3-4);

இரையைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி மெதுவாக ஊர்ந்து நகரும் வளைந்த காலையுடைய முதலை (மலைபடுகடாம் – 90,91)

போன்று முதலையின் பண்புகளை ஆவணப்படுத்தியுள்ளதுடன்,

நன்னீரில் வாழும் கராம் இன முதலை பொய்கை, அகழி, ஏரி, குளம், ஆறு, மடு, குண்டு, வாவி, சுனை, கடற்கரைப் பகுதி சதுப்புநிலங்கள், கழிகள் எனப் பல இடங்களில் வாழ்ந்ததாக இலக்கியப் பதிவுகளும் கொண்டு சங்க இலக்கிய நூல்கள் விலங்கின் வாழிடம், தோற்றம், பண்பு போன்றவற்றைக் குறித்த குறித்த செறிவான தகவலைக் கொடுக்கின்றன.

புராணக் கதைகள் கூறும் பிற்கால இலக்கியங்கள்:

பிற்கால இலக்கியங்களில், குறிப்பாக வைதீக மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு உள்ள பெரும்பாலான நூல்களில் முதலையின் பண்பு தோற்றம் போன்ற தகவல்களை ஆவணப்படுத்தும் வழக்கம் ஒழிந்துவிடுகிறது. மாறாக, முதலை குறித்த இரண்டே புராணக் கதைகள் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் பொழுதுதான் முதலை பற்றிய குறிப்புகள் பிற்கால இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவை முதலை குறித்த பயனுள்ள செய்திகளைக் கொண்டிருக்கவில்லை.

(i) சுந்தரர் முதலை வாயில் இருந்து சிறுவனை மீட்டதைக் குறிக்கும் கதை:

திருப்புக்கொளியூர் என்று முற்காலத்தில் போற்றப்பட்ட ‘அவிநாசி’ பகுதிக்கு வரும் சுந்தரர் ஒரு இல்லத்தில் சிறுவனுக்கு உபநயனம் (பூணூல் அணிவித்தல்) நடக்கும் பொழுது அருகில் மற்றொரு வீட்டில் அழுகை ஒலி கேட்டு காரணம் வினவுகிறார். பூணூல் அணிவிக்கப்படும் சிறுவனும் அவனது தோழனுமான அண்டை வீட்டுச் சிறுவனும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் குளத்தில் விளையாடுகையில் தோழனை அங்குள்ள முதலை விழுங்கிவிடுகிறது. இன்று இவனுக்கு உபநயனம் நடப்பதைப் பார்க்கும் மகனைப் பறிகொடுத்த பெற்றோர், நம் மகனும் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவனுக்கும் உபநயனம் நடந்திருக்குமே என்று ஏங்கி அழுவதைச் சுந்தரர் தெரிந்து கொள்கிறார். சிறுவன் மறைந்த குளத்திற்குச் சென்று சிறுவனை மீட்க விரும்பி சிவனிடம் வேண்டி “புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே” என்று பாடுகிறார் [12] . இவ்வாறாகச் சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, இரண்டு வருடங்களுக்கு முன் முதலை விழுங்கிய குழந்தையைத் திரும்பப் பெற்றார் என்ற கதை பக்தி இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் வள்ளலார் காலம் வரை குறிப்பிடப்படுகிறது.

புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே

கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே

- தேவாரம் -சுந்:936/3, 4 [8-ஆம் நூற்றாண்டு]

பெரு வாய் ‘முதலை’ கரையின் கண் கொடு வந்து உமிழ்ந்த பிள்ளைதனை

- பெரியபுராணம் – 13.வெள்ளானைச் சருக்கம்:1 12/1 [12-ஆம் நூற்றாண்டு]

வெம் ‘கரா’ வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருவருட்பா -திருமுறை2:89 2/2,3 [19-ஆம் நூற்றாண்டு]

(ii) முதலை வாய்ப் பட்ட களிறு கஜேந்திரன்:

காட்டிலுள்ள யானைக் கூட்டத்திற்குத் தலைவனாக விளங்கிய ‘கஜேந்திரன்’ என்ற யானை நாள்தோறும் குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து திருமாலுக்குச் சாற்றி வழிபட்டு வருகிறது. ஒருநாள் குளத்திலிருந்த முதலை யானையின் காலைக் கவ்வி குளத்திற்குள் இழுக்கிறது. போராட்டத்தில் இறுதியாகத் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பிய கஜேந்திரன், “ஆதிமூலமே!” என்று அலறி திருமாலை அழைக்க, கருட வாகனத்தில் திருமால் விரைந்து வந்து, தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையைத் துண்டித்து யானையைக் காப்பாற்றுகிறார் [13]. இக்கதை பக்தி இலக்கியங்களில் திருமாலின் புகழ் பாட மீண்டும் மீண்டும் பல நூல்களில் இடம்பெறுகின்றது.

‘முதலை’ வாய் பட்ட களிறு – நாலாயிரத் திவ்விய பிரபந்தம்:126/1[7- 9ஆம் நூற்றாண்டு]

கான் அமர் வேழம் கைஎடுத்து அலற ‘கரா’ அதன் காலினை கதுவ

- நாலாயிரத் திவ்விய பிரபந்தம்:1076/2 [7- 9ஆம் நூற்றாண்டு]

வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு ‘இடங்கர்’ பாழ் படவே எறிந்த

- திருப்புகழ் :82/13 [15-ஆம் நூற்றாண்டு]

(குறிப்பு: மேலே காட்டப்பட்ட பாடல்களில் ஒரே தொன்மக் கதைக்கு, முதலை கராஅம், இடங்கர் ஆகிய சொற்கள் மாற்றி மாற்றி எடுத்தாளப்பட்டுள்ளதைக் காண்க)

4. மகரம்:

மகரம் என்ற குறிப்பு தமிழிலக்கியங்களில் பலமுறை தோன்றுகிறது. இருப்பினும், இவை முதலையைக் குறிப்பன அல்ல. நிகண்டுகளில் கண்டது போல தமிழிலக்கியத்தில் காணப்படும் ‘மகரம்’ என்ற சொல் சுறாமீனுடன் தொடர்பு கொண்டவை மட்டுமே. இது மாறுபடும் ஒரே ஒரு இடம் தேவாரத்தில் இடம் பெறுகிறது. சுந்தரர் தேவாரப் பாடல் வரி ஒன்றில் மகரமும் சுறாவும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன.

“மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.” (தேவாரம் 7.71 திருமறைக்காடு)

கடல் அலைகள் மகர மீனையும், சுறா மீனையும் கொணர்ந்து எறிகின்ற திருமறைக்காட்டின் கடற்கரை என்று மறைக்காடு பற்றிய சுந்தரரின் 7 ஆம் திருமுறை 71 ஆம் பதிகம் குறிப்பிடுகிறது.

உரை எழுதியவர்கள் பெரும்பாலும் மகர மீனையும், சுறா மீனையும் கடல் அலைகள் கரையில் எறிகின்றன என்று குறிப்பிடுகிறார்கள். நிகண்டுகளின் அடிப்படையில் பொருள் கொண்டால் அந்த மகர மீன் என்பது பெருமீன் திமிங்கிலமாகவும் இருக்கக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. இராம.கி அவர்கள் தரும் விளக்கத்தில் மகரம் = முதலை எனப் பொருள் கொள்கிறார் [14].

மகரம் என்பது இலக்கியங்களில் கடலுடன் தொடர்பு கொண்ட உயிரினமாகவே வருகிறது.

எடுத்துக்காட்டு: பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – கம்பராமாயணம், சுந்:10 8/1

நெரிஞ்சுற, கடலின் வீழ்ந்தார், நெடுஞ் சுறா மகரம் நுங்க – கம்பராமாயணம்: சுந்-மிகை:1 3/4

என்ற பாடலில் சுறா = மகரம் மீன் என்ற பொருள் படவும் கூறப்படுகிறது.

ஆகவே, ஆற்றில், குளத்தில், பொய்கையில், ஏரியில் வாழும் முதலைகளை மகரம் என்ற சொல் குறிப்பதாக இக்காலத்தில் கூறப்படும் விளக்கங்கள் பொருத்தமற்றவை என்பதை அறியலாம்.

முடிவுரை:

முதலையும் இடங்கரும் கராமும் (குறிஞ்சிப்பாட்டு-257) என்ற குறிஞ்சிப்பாட்டு தனித்தனியே முதலை இனங்களைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டினாலும் பிற்காலத்தில் முதலை, இடங்கர், கராம் ஆகியன முதலையைக் குறிக்கும் ஒரே சொல் என்ற ஒரு பொருட் பன்மொழி (பல சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பிடும்) வழக்கு ஏற்பட்டுவிட்டது. சங்க இலக்கியங்கள் முதலைகளைக் குறித்துச் செறிவான செய்திகளைப் பதிவு செய்துள்ளன. பிற்கால இலக்கியங்களில் காணப்படும் முதலை குறித்த தகவல்கள் கஜேந்திரமோட்சம், முதலை வாயிலிருந்த சிறுவனை மீட்ட கதை ஆக்கியவற்றுடன் மட்டுமே தொடர்புடையனவாகக் காணமுடிகிறது. மகரம் என்று முதலையைக் குறிப்பிடுவது வடமொழி வழக்காறு. தமிழ் இலக்கியங்கள் காட்டும் மகரம் சுறாமீனை மட்டுமே குறிக்கிறது எனவும் என்று இலக்கிய மீள்பார்வை மூலம் அறிய முடிகிறது.


சான்றாதாரங்கள்:

[1] ஆதிச்சநல்லூர், தமிழிணையம் - தகவலாற்றுப்படை

https://www.tagavalaatruppadai.in/excavations-details?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt6

[2] பாவாணர்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்: பக்கம் 38.

[3] Types of Crocodiles & Differences Between Crocodiles and Alligators and Gharials –  Bio Explorer.

https://www.bioexplorer.net/animals/reptiles/crocodiles/

[4] The Crocodiles of India

https://www.natureinfocus.in/animals/the-crocodiles-of-india

[5] Crocodile tears: secretion of orbital fluid in a large, saltwater crocodile Crocodylus porosus Schneider, 1801, Herpetology Notes, volume 11: 373-374 (2018) (published online on 02 May 2018)

https://www.biotaxa.org/hn/article/view/34573/32999

[6] சதுப்பு நிலங்களைக் காப்போம்! பாறப்புறத் இராதாகிருஷ்ணன், தினமணி, செப்டெம்பர் 2022.

https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2022/sep/02/lets-save-the-wetlands-3908920.html

[7] Spokensanskrit - An English - Sanskrit dictionary

https://www.learnsanskrit.cc/translate?search=makara&dir=au

[8] Types of Crocodiles & Differences Between Crocodiles and Alligators and Gharials –  Bio Explorer.

https://www.bioexplorer.net/animals/reptiles/crocodiles/

[9] தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், மார்ச்சு 1957, பக்கம்: 314

https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl3kZMy.TVA_BOK_0003568/page/314/mode/2up

[10] சேந்தன் திவாகரம் பிங்கலம் சூடாமணி, சாந்தி சாதனா பதிப்பு, 2004.

[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kZUy.TVA_BOK_0002448]

[11] தமிழ் இலக்கியத் தொடரடைவு

http://tamilconcordance.in/

[12] முதலை வாயினின்று மீண்ட மதலை

http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=3205&id1=52&id2=0&issue=20160416

[13] கஜேந்திரனுக்கு மோட்சம்

http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5111&id1=50&id2=18&issue=20190416

[14] மறைக்காடு - 8

https://valavu.blogspot.com/2018/10/8.html

[15] இந்தியாவின் முதலை இனங்கள், தேமொழி. தமிழணங்கு (பிப்ரவரி 2023) 

https://archive.org/details/2023_20230130/page/19/mode/2up


 நன்றி:

1.  சிறகு

தமிழ் இலக்கியங்களில் முதலைகள் — ஓர் மீளாய்வு

http://siragu.com/தமிழ்-இலக்கியங்களில்-முத/


2.  தமிழணங்கு (பிப்ரவரி 2023) மலர்:1, இதழ்:8

இந்தியாவின்‌ முதலை இனங்கள்

https://archive.org/details/2023_20230130/page/19/mode/2up


பிப்ரவரி  11, 2023


#தமிழணங்கு, #சிறகு, #அறிவியல்-இலக்கியம், #சிறுநல்வாழ்க்கை, #அறிவியல்நோக்கு, #Themozhi