பிப்ரவரி 7, 2014. . .
இன்றிலிருந்து 12 ஆண்டுகளுக்கு முன்னர்; "சிறகு" இணைய இதழில் (siragu.com) என்னுடைய முதல் படைப்பு வெளியானது. பிப்ரவரி 7, 2014 முதல் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் எனத் தொடர்ந்து சனிக்கிழமைகளில் சிறகு இதழில் என் படைப்பு இடம் பெறுவது வழக்கம். தோராயமாக, 9 ஆண்டுகள் (பிப்ரவரி 7, 2014-மார்ச் 25, 2023) இரண்டு வாரங்களுக்கு ஒரு பதிவு என மார்ச் 25, 2023 இதழ் வெளியீடு நிறுத்தப்படும் வரை சிறகில் தொடர்ந்து ஏதாவது கட்டுரை, கவிதை என்று எழுதிக் கொண்டே இருந்ததில் "241" பதிவுகள் வெளியாகின. அக்காலத்தில் சிறகு இதழ் தவிர நான் வேறு எங்கும் என்னுடைய படைப்புகளை அனுப்பவில்லை என்றே சொல்ல வேண்டும். 'ஜாடிக்கு ஏற்ற மூடி' என்பது போல என்னுடைய எழுத்து ஆர்வமும் சிறகு இதழின் வெளியிடும் கொள்கையும் அந்த அளவு இசைந்து சென்றது.
மற்ற இதழ்கள் போல பெரியார் குறித்த கட்டுரை அனுப்பினால் மறுக்கும் வழக்கம் சிறகு ஆசிரியரிடம் இருக்கவில்லை. என்னுடைய எழுதும் ஆர்வத்தை நன்கு வளர்த்துவிட்டதே சிறகு இதழ் என்றால் அது மிகைப் படுத்துதல் இல்லை. அதற்குச் சிறகு ஆசிரியருக்கு என் நன்றிகள் உரித்தாகிறது. ஆர்வம் உள்ளவர்களை ஆதரிக்கவும் ஆள் வேண்டும் அல்லவா?
வெளியீடுகளை நிறுத்தினாலும் சிறகு தளம் இணையத்தில் இருக்கத்தான் செய்தது. அண்மையில் ஒரு ஃபேஸ்புக் பதிவு மூலம் சிறகு இதழ் இணையத்தில் இல்லை என்று அறிந்தேன். அது உண்மையும் கூட. அதுதான் இணையப் பதிவுகளின் நிலை. நான் பார்க்கும் பொழுதே எத்தனையோ இணையத் தளங்கள் மறைவதும், கட்டுரையில் சுட்டிகள் வேலை செய்யாமல் போவதும், படங்கள் எதுவும் தெரியாமல் போவதும் வழக்கமே.
என்னுடைய படைப்புகளில் ஒரு பொருண்மையில் 25 அல்லது 30 கட்டுரைகள் சேர்ந்தால் நூலாகத் தொகுத்து வெளியிடவும் செய்துள்ளேன். பெரும்பாலும் என் எழுத்துகள் அறிவியல், பெண்ணியம், பெரியாரியம், தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு என்று எனக்கு ஆர்வம் இருக்கும் இந்தப் பொருண்மைகளில் அமைவதே வழக்கம். பல கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றதில்லை.
திட்ட ஆய்வாளராகப் பணியாற்றிய காரணத்தால் எல்லாவற்றையும் ஆவணப்படுத்திக் கொண்டே செல்வது என் இயல்பாக இருக்கிறது. அதனால் சிறகில் வெளியான என் படைப்புகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. முதல் படைப்பு முதற்கொண்டு நான் சிறகு ஆசிரியருக்கு அனுப்பிய படைப்புகளும் ஜிமெயில் கணக்கில் உள்ளது. ஆகவே, அவற்றைத் தொடர்ந்து மீண்டும் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் என் எழுத்தை நானே மீண்டும் படிக்கும் வாய்ப்பாகவும் அமையும்.
நன்றி
அன்புடன்
தேமொழி
பி. கு.: https://web.archive.org/web/20190904103231/http://siragu.com/author/themozhi/
தளத்தில் பழைய சிறகு பதிவுகளைப் படிக்கலாம்
---
சிறகில் தேமொழி பதிவுகள்
1. கேளடி கண்மணி – கவிதை (பிப்ரவரி 7, 2014)
2. இந்த மண்ணு நம்ம பூமி (பிப்ரவரி 22, 2014)
3. புகாமுக வகுப்புகள் (மார்ச் 8, 2014)
4. நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தாலப்பருவம் (மார்ச் 22, 2014)
5. தவிராத சுங்கத் தவிர்த்தோன் (ஏப்ரல் 12, 2014)
6. சோழர் காலத்தின் சித்திரைத் திருவிழாக்கள் (ஏப்ரல் 26, 2014)
7. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் கதிரியக்கத் தாக்கத்திற்குள்ளான பறவை இனங்களின் தகவமைப்பு (மே 17, 2014)
8. பிரமிப்பூட்டும் பெண்மணி – கவிதை (மே 31, 2014)
9. தேன்கூட்டின் கட்டமைப்பு: ஒரு வடிவமைப்பின் சிறப்பு (ஜூன் 14, 2014)
10. ஸ்டெப்ஃபெனி கோலக் – உயிர் காக்கும் செயற்கை இழையை உருவாக்கியவர் (ஜூன் 28, 2014)
11. உறைபனிக்கட்டிகள் உடைவதேன்? (ஜூலை 12, 2014)
12. திரைகடலோடிய தமிழ்ச்செல்வங்கள் (ஜூலை 26, 2014)
13. மகிழ்ச்சி என்றால் என்ன? அதை அடைவதைப் பற்றி அறிவியல் சொல்வதென்ன? (ஆகஸ்ட் 9, 2014)
14. கண்ணதாசனின் சூழ்நிலைப் பாடல்கள் (ஆகஸ்ட் 23, 2014)
15. அறிவியல் ஆய்வறிக்கை: பொருளாதார வளர்ச்சியே உலக மொழிகளை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது (செப்டம்பர் 6, 2014)
16. உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை (செப்டம்பர் 20, 2014)
17. அன்புடை நெஞ்சங்களில் நிகழும் மாறுதல்கள் (அக்டோபர் 4, 2014)
18. பழங்குடி மக்களின் நாளாக மாறிடும் கொலம்பஸ் நாள் (அக்டோபர் 18, 2014)
19. மூளையின் செயல்பாட்டைக் குறைக்கும் நீர்ப்பாசியின் வைரஸ்கள் (நவம்பர் 1, 2014)
20. ஒரு சிலர் மட்டும் அதிகநாட்கள் உயிர் வாழக் காரணம் என்ன ? (நவம்பர் 15, 2014)
21. மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பழங்குடியினர் (நவம்பர் 29, 2014)
22. ஆட்டம் காணும் அமெரிக்க ஆன்மிகம் (டிசம்பர் 20, 2014)
23. இனபேத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் அமெரிக்க கறுப்பின மக்கள் (ஜனவரி 24, 2015)
24. உலகநாதர் இயற்றிய உலகநீதி (பிப்ரவரி 14, 2015)
25. உலகநாதர் இயற்றிய உலகநீதி – பாகம் 2 (பிப்ரவரி 21, 2015)
26. உலகின் எளிமையான அதிபர் ஹோஸே முயீகா பதவியிலிருந்து விடைபெற்றார் (மார்ச் 7, 2015)
27. அடுக்களை அறிவியல்: சோற்றை சமைக்கும் முறையில் செய்யும் மாற்றம், மாவுச்சத்து செரிக்கப்படுவதைக் குறைக்கும் (ஏப்ரல் 4, 2015)
28. கற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும் (ஏப்ரல் 18, 2015)
29. பாவேந்தரும் அரங்கநாதரும் (மே 2, 2015)
30. இன்ஜ் லேமேன்: புவி திடமான உட்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர் (மே 17, 2015)
31. பட்டறிவும் விதிகளும் (மே 30, 2015)
32. இரத்த வகைகளுக்கும் மூளையின் செயல்திறனுக்கும் உள்ள தொடர்பு (ஜூன் 13, 2015)
33. 2014 – உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை (ஜூலை 4, 2015)
34. அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? (ஜூலை 18, 2015)
35. இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? (ஜூலை 25, 2015)
36. தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் (ஆகஸ்ட் 8, 2015)
37. அமெரிக்காவில் யோகா (ஆகஸ்ட் 22, 2015)
38. உலகெங்கிலும் அகதிகளின் அவலநிலை (செப்டம்பர் 5, 2015)
39. தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 1 (செப்டம்பர் 19, 2015)
40. தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 2 (செப்டம்பர் 26, 2015)
41. உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை? (அக்டோபர் 10, 2015)
42. ஆட்டிசம் ஆய்விற்கு உதவும் ஆப்பிள் செயலி (அக்டோபர் 24, 2015)
43. ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் அளவில் வேறுபாடில்லை (நவம்பர் 7, 2015)
44. 438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை (நவம்பர் 21, 2015)
45. 438 நாட்கள் கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 2 (நவம்பர் 28, 2015)
46. 438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3 (டிசம்பர் 7, 2015)
47. பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா (டிசம்பர் 26, 2015)
48. என் அப்பா(சிறுகதை) (ஜனவரி 9, 2016)
49. என் அப்பா(சிறுகதை-இறுதிப்பகுதி) (ஜனவரி 16, 2016)
50. பாயும் காளை (ஜனவரி 23, 2016)
51. வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்? (பிப்ரவரி 6, 2016)
52. மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள் (பிப்ரவரி 20, 2016)
53. கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை (மார்ச் 5, 2016)
54. கபீர்தாசரின் பாடல்கள் வழங்கும் இறைச்சிந்தனைகள் – ஒரு பார்வை: பகுதி-2 (மார்ச் 12, 2016)
55. ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை (மார்ச் 26, 2016)
56. சிறந்த உணவுமுறை எது? (ஏப்ரல் 9, 2016)
57. கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை (ஏப்ரல் 23, 2016)
58. அமெரிக்கர்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு எதிரானவர்களா? (மே 7, 2016)
59. வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும் (மே 17, 2016)
60. ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள் (மே 28, 2016)
61. கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா? (ஜூன் 11, 2016)
62. மரபணு சிகிச்சை மூலம் பார்வைக் குறைபாட்டிற்குத் தீர்வு (ஜூன் 25, 2016)
63. கோம்பிப் பாட்டு – கவிதை (ஜூலை 9, 2016)
64. மரபணு மாற்றம் செய்த உணவுகள் தேவையே – அறிவியல் அறிஞர்கள் (ஜூலை 23, 2016)
65. செந்தார்ப் பைங்கிளி முன் கை ஏந்தி … (ஆகஸ்ட் 6, 2016)
66. அழிந்த அணையும், பெருவெள்ளமும் தொன்மையான நாகரிகமும் (ஆகஸ்ட் 20, 2016)
67. பயனில செய்யாமை (செப்டம்பர் 10, 2016)
68. அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் - I (செப்டம்பர் 17, 2016)
69. அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் - II (செப்டம்பர் 24, 2016)
70. நாட்டுப்புறக் கலைகளில் இறைவணக்கப் பாடல்கள் (அக்டோபர் 15, 2016)
71. மருத்துவத்தில் நோய் கண்டறிய உதவும் கணினியின் செயற்கை நுண்ணறிவு (அக்டோபர் 28, 2016)
72. அமெரிக்க அதிபர் பதவி, பெண்களுக்கு ஒரு தகர்க்கவியலாத கண்ணாடிக்கூரை (நவம்பர் 12, 2016)
73. இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது (டிசம்பர் 3, 2016)
74. இலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும் (டிசம்பர் 10, 2016)
75. துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறை (டிசம்பர் 24, 2016)
76. உடல்நலத்திற்கு நன்மையளிப்பதும் தொடர்வதற்கு எளிதானதுமான உணவுமுறையே சிறந்த உணவுமுறை (ஜனவரி 7, 2017)
77. ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு (ஜனவரி 21, 2017)
78. தமிழகத்தின் சாதி வளர்ச்சியில் சமணம் அளித்த எதிர்பாராத தாக்கம் (பிப்ரவரி 11, 2017)
79. தமிழும் தமிழ் சார்ந்த நிலமும் (பிப்ரவரி 25, 2017)
80. மாகொல் பகைமுகத்த வெள்வேலான் என்பவன் யார்? (மார்ச் 18, 2017)
81. அச்சமற்ற பெண் (ஏப்ரல் 1, 2017)
82. ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா? (ஏப்ரல் 15, 2017)
83. தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா? (ஏப்ரல் 29, 2017)
84. அமெரிக்கச் சிறுவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னர் (மே 13, 2017)
85. திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி கவிஞர் நா. காமராசன் (மே 27, 2017)
86. கணையாழிகளும் அமெரிக்கத் திருமணங்களும் (ஜூன் 10, 2017)
87. தமிழ்த் தாத்தா பெற்ற பதவிகளும் பட்டங்களும் பாராட்டுகளும் (ஜூன் 24, 2017)
88. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தூண்டப்படும் நிலநடுக்கங்களும் (ஜூலை 8, 2017)
89. செவ்வந்தி படம் பிடித்துக் காட்டும் நாகரிகமடைந்த மனிதகுலப் பண்பு நலன்கள் (ஜூலை 22, 2017)
90. தமிழ் மின்னூலகங்களும் தமிழ் மின்னூல்களும் (ஆகஸ்ட் 5, 2017)
91. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் கட்டமைப்பில் உள்ள மாறுதல் (ஆகஸ்ட் 19, 2017)
92. உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம் (ஆகஸ்ட் 26, 2017)
93. மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அருங்காட்சியகம், அட்லாண்டா (செப்டம்பர் 9, 2017)
94. பெரியார்: நான் யாராயிருந்தாலென்ன? (செப்டம்பர் 16, 2017)
95. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-1) (அக்டோபர் 7, 2017)
96. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-2) (அக்டோபர் 14, 2017)
97. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-3) (அக்டோபர் 21, 2017)
98. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-4) (அக்டோபர் 28, 2017)
99. அல்கட்ராஸ் தீவில் (பகுதி-5) (நவம்பர் 4, 2017)
100. இரு பாதைகளும் ஒரு பயணமும் (நவம்பர் 25, 2017)
101. அயல்நாட்டு மாணவர்களை விரும்பும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் (டிசம்பர் 2, 2017)
102. பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – நூல் மதிப்புரை (டிசம்பர் 16, 2017)
103. திருச்சி பெரியார் மாளிகை (ஜனவரி 20, 2018)
104. திருமலைராயனும் காளமேகப்புலவரும் (பிப்ரவரி 17, 2018)
105. ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம் (மார்ச் 3, 2018)
106. பெண்களுக்கான அறிவுரைகள் (மார்ச் 17, 2018)
107. “கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தோன்றும் புதைகுழிகளும் “ (மார்ச் 31, 2018)
108. இசையறிஞர் சுப்பராம தீட்சிதர் (ஏப்ரல் 14, 2018)
109. சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” (ஏப்ரல் 28, 2018)
110. புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும் (மே 12, 2018)
111. அணங்கு (மே 26, 2018)
112. ஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும் (ஜூன் 9, 2018)
113. புரட்சிப் பதிகம் பாடிய நங்கை (ஜூன் 23, 2018)
114. “ஔவைப்பாட்டி” (ஜூலை 7, 2018)
115. திறன்பேசியின் வளர்ச்சி (ஜூலை 21, 2018)
116. ஸ்குடாய்ட்: கணித வடிவியலில் ஒரு புதிய வடிவம் அறிமுகம் (ஆகஸ்ட் 4, 2018)
117. ஓயாது உழைத்த கலைஞர் (ஆகஸ்ட் 11, 2018)
118. உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள் (ஆகஸ்ட் 18, 2018)
119. தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள் (செப்டம்பர் 1, 2018)
120. “நான் யார்?” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம் (செப்டம்பர் 15, 2018)
121. புறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து (செப்டம்பர் 29, 2018)
122. பாப் ஆர்ட் – ஓவியர் ஆன்டி வார்ஹோல் (அக்டோபர் 13, 2018)
123. மங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும் (அக்டோபர் 27, 2018)
124. கோண்டு ஓவியம் (நவம்பர் 10, 2018)
125. “விழித்தெழுக என் தேசம்” – நூல் மதிப்புரை (நவம்பர் 24, 2018)
126. புற்றுநோயைக் கண்டறியும் விலை குறைந்த, எளிய சோதனை முறை கண்டுபிடிப்பு (டிசம்பர் 8, 2018)
127. களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன? (டிசம்பர் 22, 2018)
128. ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ் (ஜனவரி 5, 2019)
129. மறையோன் கூறிய மதுரை வழி – ஒரு மீள்பார்வை (ஜனவரி 19, 2019)
130. ‘தி காந்தி மர்டர்’ (பிப்ரவரி 2, 2019)
131. தமிழ் வளர்ச்சியில் ஐரோப்பியரால் விளைந்த திருப்புமுனை (பிப்ரவரி 15, 2019)
132. ம.பொ.சி. யின் வாசிப்பில் சிலப்பதிகாரம் (மார்ச் 2, 2019)
133. ஹச்சிமோஜி டிஎன்ஏ (மார்ச் 9, 2019)
134. பெண்களுக்கு நாம் காட்டுகின்ற வழி என்ன? (மார்ச் 16, 2019)
135. நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன் (மார்ச் 30, 2019)
136. காவிரிக்கு உரியவர் யார்? (ஏப்ரல் 13, 2019)
137. கலைக்காக ஒரு கதை (ஏப்ரல் 27, 2019)
138. வெஸ்ட்மினிஸ்டர் அபே நினைவுச்சின்னத்தில் திருச்சி மலைக்கோட்டை (மே 11, 2019)
139. ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’ (மே 25, 2019)
140. கலைஞர் நடத்திய அறப்போர் (ஜூன் 1, 2019)
141. எண்குணத்தான் – பொருள் கொள்ளும் முயற்சிகள் (ஜூன் 15, 2019)
142. ஆசாரக்கோவை காட்டும் தீண்டாமை (ஜூன் 29, 2019)
143. சங்கநூல்களிற் கூறப்படும் வேதசமயக் கருத்துகள் (ஜூலை 13, 2019)
144. கருத்து நயத்திற்கு ஓர் காளமேகம் (ஜூலை 27, 2019)
145. இந்திய செய்தி நிறுவனங்களின் சாதீய முகம் (ஆகஸ்ட் 10, 2019)
146. இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னாதவை (ஆகஸ்ட் 24, 2019)
147. இனியது கேட்கின்… இனிது இனிது இனியவை நாற்பது (செப்டம்பர் 7, 2019)
148. பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் … (செப்டம்பர் 14, 2019)
149. பள்ளிகளின் ஊடே ஒரு பயணம் (செப்டம்பர் 28, 2019)
150. தமிழர் மருத்துவமுறை குறித்து அறிய உதவும் தொன்ம நூல்களும் ஓலைச்சுவடிகளும் (அக்டோபர் 12, 2019)
151. சோழர்காலத்தின் மருத்துவம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் (அக்டோபர் 26, 2019)
152. சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது? (நவம்பர் 9, 2019)
153. ஆய்வு வழியில் வள்ளுவர் (நவம்பர் 23, 2019)
154. மனிதநேயம் கூறும் ஓர் அறிவியல் புதினம் (டிசம்பர் 7, 2019)
155. செம்பியன் மாதேவி என்னும் வரலாற்று நாயகி (டிசம்பர் 21, 2019)
156. நாமும் பார்ப்போம் (ஜனவரி 4, 2020)
157. குடி பெயர்க்கப்படுவோருக்கு அளிக்கப்படும் இழப்பீடு குறித்து சோழர்காலக் கல்வெட்டுச் செய்திகள் (ஜனவரி 18, 2020)
158. திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன? (பிப்ரவரி 1, 2020)
159. பெரியபுராணமும் பெரியகோயிலும் (பிப்ரவரி 15, 2020)
160. குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது? (பிப்ரவரி 29, 2020)
161. அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -1 (மார்ச் 14, 2020)
162. அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2 (மார்ச் 21, 2020)
163. சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி (மார்ச் 28, 2020)
164. குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம் (ஏப்ரல் 11, 2020)
165. முல்லைப்பாட்டுக்கு எழுதப்பட்ட உரைகள் (ஏப்ரல் 25, 2020)
166. சரஸ்வதி என்பது சரஸ்வதிதானா? (மே 9, 2020)
167. தொற்றுநோய் பரவலைக் காட்டும் மருத்துவ புவி-வரைபடங்களின் வரலாறு (மே 23, 2020)
168. பொன்மகள் வந்தாள் (ஜூன் 6, 2020)
169. பாலம் ஏன் பாடியது? (ஜூன் 20, 2020)
170. அமெரிக்காவின் வரலாறு புரட்சிகளால் எழுதப்படுகிறது (ஜூலை 4, 2020)
171. மீக்கூறல் (ஜூலை 18, 2020)
172. திரையிசையில் நாட்டுப்புறப் பாடல்கள் (ஆகஸ்ட் 1, 2020)
173. அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் (ஆகஸ்ட் 8, 2020)
174. தரை மேல் பிறப்பு தண்ணீரில் பிழைப்பு (ஆகஸ்ட் 22, 2020)
175. இணையவழி அறிவிப்புகள் உருவாக்குவோருக்கு எளிய குறிப்புதவிகள் (செப்டம்பர் 5, 2020)
176. பெரியார் எப்பொழுது பெரியார் ஆனார்? (செப்டம்பர் 19, 2020)
177. அன்பின் ஐந்திணை (– குறிஞ்சி +முன்னுரை) (அக்டோபர் 10, 2020)
178. அன்பின் ஐந்திணை – நெய்தல் (அக்டோபர் 24, 2020)
179. அன்பின் ஐந்திணை – பாலை (நவம்பர் 7, 2020)
180. இந்தியாவின் மிகப்பெரும் உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் (நவம்பர் 21, 2020)
181. எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார் (டிசம்பர் 5, 2020)
182. பெரியார் பெருமை பெரிதே! (டிசம்பர் 19, 2020)
183. அன்பின் ஐந்திணை – முல்லை (ஜனவரி 2, 2021)
184. அன்பின் ஐந்திணை – மருதம் (ஜனவரி 16, 2021)
185. இலங்கை தெதிகமகோட்டாவேரா – யானை விளக்கு (ஜனவரி 30, 2021)
186. வரலாற்றில் தடம் பதித்த கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி (பிப்ரவரி 13, 2021)
187. துல்லியத்தை நோக்கி முன்னேறும் உலக வரைபடம் (பிப்ரவரி 27, 2021)
188. உலக காடுகள்: காடழிப்பு நடவடிக்கைகளும் அதன் விளைவுகளும் (மார்ச் 13, 2021)
189. முன்னும் பின்னும் ஓர் ஒப்பீடும் மதிப்பீடும் (மார்ச் 27, 2021)
190. பிரிக்காமல் படிக்கப்படும் கடிதங்கள் (ஏப்ரல் 10, 2021)
191. பாவேந்தரின் உலகம் தழுவிய உயரிய பார்வை (ஏப்ரல் 24, 2021)
192. பாவேந்தரின் பிறந்தநாள் (மே 1, 2021)
193. பாவேந்தரும் பாவலரேறும் (மே 15, 2021)
194. கோவிட் காலத்து அமெரிக்கச் செய்தி ஊடகங்களும் அவை அடையும் மாறுதல்களும் (மே 29, 2021)
195. திருவல்லிக்கேணி கோயில் கல்வெட்டுகள் அறியத் தரும் செய்திகள் (ஜூன் 12, 2021)
196. பாரதிதாசனும் முத்தமிழ் நிலையமும் (ஜூன் 26, 2021)
197. இந்தியர்களின் சமய நம்பிக்கைகளும் வாழ்வும் (ஜூலை 10, 2021)
198. திருமந்திரத்தில் இடைச்செருகல் என்ற திருவிளையாடல் (ஜூலை 24, 2021)
199. கிளிக்கண்ணி சுப்பராய சுவாமிகள் (ஆகஸ்ட் 7, 2021)
200. அறிவுக்கு வேலை கொடு (ஆகஸ்ட் 21, 2021)
201. கடந்த கால சென்னையைக் காட்டும் ஒரு கலைடாஸ்கோப் (செப்டம்பர் 4, 2021)
202. ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள்: இனக்குழுவின் பரவலும் மாடு மேய்ப்புத் தொழிலின் வளர்ச்சியும் (செப்டம்பர் 18, 2021)
203. தமிழில் புதிர்கள் (அக்டோபர் 2, 2021)
204. ஆங்கிலம் இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும்: பண்டிதர் அயோத்திதாசர் (அக்டோபர் 16, 2021)
205. சிறுகதை: குறை நிறை மதிப்பிடும் முறை (அக்டோபர் 30, 2021)
206. எட்கர் தர்ஸ்டனின் மானுடவியல் பார்வையில் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் (நவம்பர் 13, 2021)
207. தமிழவன் எழுதிய ‘உங்களுக்குப் பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?’ (டிசம்பர் 11, 2021)
208. ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்” (டிசம்பர் 25, 2021)
209. புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ (ஜனவரி 8, 2022)
210. முன்னோர் வழிபாடு குறித்த சமூகப்பண்பாட்டு ஆய்வு (ஜனவரி 22, 2022)
211. டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ (பிப்ரவரி 5, 2022)
212. நாட்டுப்பண் அறிவுறுத்தும் பண்பாடு (பிப்ரவரி 19, 2022)
213. கலிபோர்னியா மாநிலத்தின் சாதி எதிர்ப்புக் கொள்கை (மார்ச் 5, 2022)
214. நகர விரிவாக்கமும் மார்செட்டி மாறிலி கோட்பாடும் (மார்ச் 19, 2022)
215. மாமல்லபுரத்துச் சமணச் சிற்பம் — 1 (ஏப்ரல் 2, 2022)
216. மாமல்லபுரத்துச் சமணச் சிற்பம் — 2 (ஏப்ரல் 16, 2022)
217. தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் (ஏப்ரல் 30, 2022)
218. மயிலாடும்பாறை மூத்த தமிழ்க்குடியின் வாளின் காலம் (மே 14, 2022)
219. சதக இலக்கியங்கள் (மே 28, 2022)
220. நெல் வேளாண்மையும் கோழி வளர்ப்பின் தொடக்கமும் (ஜூன் 11, 2022)
221. வரலாற்றுச் சிறப்பு மிக்க “அமெரிக்க நெடுஞ்சாலை 66″ (ஜூன் 25, 2022)
222. கடற்காலமானி: நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வு (ஜூலை 9, 2022)
223. ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் – 1 (ஜூலை 23, 2022)
224. ஆவணியே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் – 2 (ஜூலை 30, 2022)
225. இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் (ஆகஸ்ட் 6, 2022)
226. பாவேந்தர் பாரதிதாசனின் காப்பியம் — குறிஞ்சித் திட்டு (ஆகஸ்ட் 20, 2022)
227. வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் (செப்டம்பர் 3, 2022)
228. முச்சொல்முகவரி (செப்டம்பர் 17, 2022)
229. ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் (அக்டோபர் 1, 2022)
230. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (அக்டோபர் 15, 2022)
231. மனுஸ்மிருதி குறித்து விளக்கும் அறப்போர் (நவம்பர் 5, 2022)
232. அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது? - I (நவம்பர் 19, 2022)
233. அகழ்வாராய்ச்சி அடிப்படையில் தமிழகத்தின் வரலாற்றுக் காலம் எப்பொழுது தொடங்குகிறது? - II (நவம்பர் 28, 2022)
234. செநுவுடன் ஓர் கலந்துரையாடல் (டிசம்பர் 10, 2022)
235. பெரியார் என்னும் அறிவியக்கப் பேராற்றல் (டிசம்பர் 24, 2022)
236. மரை என்ற மானினம் (ஜனவரி 7, 2023)
237. ஆதிச்சநல்லூர் பானையோட்டின் நெய்தல் நிலக்காட்சி (ஜனவரி 28, 2023)
238. தமிழ் இலக்கியங்களில் முதலைகள் — ஓர் மீளாய்வு (பிப்ரவரி 11, 2023)
239. தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு (பிப்ரவரி 25, 2023)
240. தோழமையுடன் தோழர் பெரியார் (மார்ச் 11, 2023)
241. முக்கோற்பகவர் யார்? (மார்ச் 25, 2023)
