அன்பு அம்மாவிற்கு
பசியுடன் பள்ளியில்
இருந்து வந்த பொழுது
பரிவுடன் சமைத்த
உணவைக் கொடுத்தாய்
பாடநூலுக்கு உடனே
அட்டை வேண்டிய பொழுது
பாசத்துடன் பழுப்பு
அட்டைதனைப் போட்டாய்
பெயர் நீ எழுதினால்
ராசியென்ற பொழுது
பெருமையுடன் சிட்டை
ஒட்டி எழுதினாய்
பெற்றவன் பெயரின்
முதலெழுத்தும் பின்னால்
பெற்ற அன்பு
அன்பு அன்னை நீ
மனம் வருந்தாமல்
தன் கடமையிது என்பது
போல் நினைக்கிறாய்
என் வாழ்வில் உனக்கு
உரிமை இல்லாததுபோல்
உன்னால் எப்படியிது
முடிந்தது சொல்வாய்
நன்றி: வகுப்பறை
ஜனவரி 08, 2012
#கவிதை, #வகுப்பறை, #Themozhi
