வலியற்ற வாழ்வில்லை
தன்னைத் தானே செதுக்கினால்
முன்னேற்றத்திற்குத் தடையுமில்லை
வலி தரும் உளி என்று ஒதுக்கினால்
உயர்வான உருவம் தோன்றுவதில்லை
தன் குறை அறிந்து நீக்கினால்
அது போன்ற ஒரு துணிவுமில்லை
துணிவோம் என்ற முயற்சியால்
ஒழியாத துக்கமுமில்லை
வலியற்ற வாழ்வு எவருக்கும் இல்லை
வலிக்கு அஞ்சினால் வாழ்வும் இல்லை
தன் முயற்சியால் குறைதனை நீக்கிடுவோம்
தளராது நம் வாழ்வை எதிர் கொள்வோம்
#கவிதை, #Themozhi
