அன்னை சக்தி
பல்லவி
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ்பாடி
இவ்வுலகம் வாழுமே -- அன்னை சக்தி
ஒவ்வொரு இரவும் உந்தன் புகழ் பாடியே
அனுபல்லவி
மனமது உருகிநான்
தினமுனைப் போற்றுவேன்
கரமது குவிந்திடவே
சிரமது பணிந்திடவே -- தாயே (ஒவ்வொரு)
சரணம்
செல்வமுடன் கல்வி வீரமும் வழங்கியே
செழித்திந்த உலகினை மகிழ்ந்திடச் செய்வாய்
சேவை புரிந்தே பல்லுயிர் போற்றிடும்
சேயிழையார் தினமுனை வாழ்த்திட -- தாயே (ஒவ்வொரு)
வல்லமைக் குழுமத்தில், சக்தி ரதம் என்ற நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் எழுதிய பாடல்
அக்டோபர் 5, 2013
#கவிதை, #Themozhi
கவிதை