Sunday, January 25, 2026

இலக்குவனார் தமிழ்மணி விருது

 இலக்குவனார் தமிழ்மணி விருது





தமிழ்க்காப்புக் கழகம், தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளர் முனைவர் தேமொழி அவர்களுக்கு ஜனவரி 25, 2026 அன்று சென்னை எழும்பூரில் நடந்த பாராட்டு விழாவில் "இலக்குவனார் தமிழ்மணி விருது" வழங்கிப் பெருமகிழ்வு கொண்டார்கள்.

முனைவர் தேமொழி அவர்கள் தமிழ்நூல்கள் தொடர்பில் 23 நூல்கள் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு தமிழ் இதழ்களில் ஆசிரியர் குழுவில் பொறுப்பேற்று இதழ்கள் வழியாகவும் சில அமைப்புகளில் பொறுப்பு வகித்து அவற்றின் வழியாகவும் தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் இணையச்சுடர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தமிழ்ப் பணிகளைப் பாராட்டும் விதமாக  முனைவர் தேமொழி அவர்களுக்கு இலக்குவனார் தமிழ்மணி விருது வழங்கப்பட்டது. 



#விருது, #Themozhi