Wednesday, December 23, 2015

எல்லாமே பணம்

எல்லாமே பணம்


எல்லாமே பணம் எல்லாமே பணம்
எங்கும் எதற்கும் தேவை பணம்
எவரும்தான் ஒப்புக்கொள்கிறார்
தயக்கமின்றிதான் சொல்லிவிடுவார்
பணம் பணம் அது இல்லையெனில்
மனிதர் மதிக்கப்படும் நிலையோ
பிணம் பிணம் உயிரற்ற பிணம்

எல்லாமே பணம் எல்லாமே பணம்
கடவுளும் பணமும் சமம்தான்
மனிதனுக்கு என்போர்
நன்கறிந்த உண்மையிது
காசேதான் கடவுளப்பா
அந்தக் கடவுளுக்கும்
இது தெரியுமப்பா

எல்லாமே பணம் எல்லாமே பணம்
பிச்சாண்டியை மதிப்பவருண்டோ
பெருமைமிகு பெரியகோவிலில்
சொக்கர்  மீனாள் கருணை வேண்டி
சிறப்புத் தரிசனம் செய்யச் சென்றால்
சொக்கருக்கும் வேண்டு மந்தப் பணம்
காசு பணம் துட்டு மணி மணி


டிசம்பர் 23, 2015 

#கவிதை, #Themozhi