வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9
ஓவியம்: தேமொழி
கவிதை: கவிஞர் தனுசு
"திமிர் கொண்ட அழகு"
உன் கண்ணில் தெரிவதென்ன
நெருப்பா?
என்னைச் சுட்டு வீழ்த்தச் செய்யும்
குறும்பா?
உன்
உதட்டில் இருப்பதென்ன
சிரிப்பா?
என்னை அதட்டி அழைக்கும்
அழைப்பா?
உன் பேச்சில் சொல்வதென்ன
இனிப்பா?
என்னை உனதாக்கச் செய்யும்
துடிப்பா?
திமிர் கொண்ட தென்றல் காற்றே….
உன்னைத் தேடி வந்தால்
உன்
புருவத்தில் ஏளனம் ஏற்றி
என்
பருவத்தில் தீ வைப்பதேனடி?
பள்ளி அறை பாடம் நடத்த
வெள்ளி நிலா தூண்டுதடி!
ஊதக்காற்றும் ஒத்துழைத்து
ஒதுங்கச்சொல்லிக் கூவுதடி!
உன் சுட்டு விரல் அசைவு
என்
கட்டுப்பாட்டை நொறுக்கும்!
உன் பட்டுப் பளிங்கு மேனி
என்னை உள் மூச்சில் வதைக்கும்!
பஞ்சமின்றிச் செழித்திருக்கும்
அஞ்சுகமே!
பட்டு நிலா வியப்புறும்
பெட்டகமே!
பொன்வண்டு அறியாது
அதனுடைய அழகை…
உன் கண் கொண்டு
உற்றுப்பாரடி
உன்னுடைய பேரழகை!
வஞ்சனையின்றி வளர்ந்த
உன் வதனம்!
அதை
இந்த மாமனிடம் தாரைவார்க்க
ஏனடி மெத்தனம்!
பொத்தி வைத்து ஆவதென்ன
அந்த
கன்னிமலை அதிசயம்!
இனி
ஒத்தி வைத்தால் தாங்காது என் உடம்பு
இது சத்தியம்!
காமன் கோயில் சாமிக்கு
நான் யாசிப்பது கேட்கலியா
தீர்த்து வைக்க தேவிக்கு
மாமன் மையல் புரியலியா!
-தனுசு-
நன்றி: வல்லமை - மே 13, 2013
#ஓவியம், #வல்லமை, Themozhi
