Monday, December 23, 2024

மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்: நூலறிமுகம்

செயற்கை தீவுகளை உருவாக்கிய கற்கால மனிதர்கள்

 

தீக்கதிர் (23-12-2024) - நூலாற்றுப்படை - பக்கம்:  5

செயற்கை தீவுகளை உருவாக்கிய கற்கால மனிதர்கள்

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை விரிவாக ஆராயும் 10 அத்தியாயங்கள் கொண்ட நூல். மரபணு ஆராய்ச்சியில் தாய்வழி முக்கியத்துவம், மனித இனப்பரவல், தோல் நிற மாற்றங்கள், அமெரிக்க புலம்பெயர்வு, ஆஸ்திரேலியப்  பழங்குடியினர்-தமிழர் தொடர்பு போன்ற முக்கிய தலைப்புகளை அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது.

4000 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலத்தில் மனிதகுலம் செயற்கை தீவுகளை உருவாக்கியது, 1870களில் மனித ஆயுட்காலம் 30 ஆண்டுகளாக இருந்து இன்று 75 ஆண்டுகளாக உயர்ந்தது போன்ற சுவாரசியமான தகவல்களை வழங்குகிறது.

அமெரிக்க வாழ் தமிழர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளரான ஆசிரியர், பெண்களின் வரலாற்று முக்கியத்துவத்தையும், அவர்களின் மரபணு வழி ஆராய்ச்சியின் பங்களிப்பையும் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்

நூலாசிரியர்:  ஜோதி.எஸ்.தேமொழி  

விலை: ரூ.150/-  

வெளியீடு: சந்திரோதயம் பதிப்பகம்  

தொடர்பு எண்:  7010997639





மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்:  நூலறிமுகம்

நூலாற்றுப்படை எம்.ஜே. பிரபாகர்


#அறிவியல்நூல், #நூலறிமுகம், #MJ. பிரபாகர், #Themozhi