Friday, October 4, 2024

அமைதிச் சக்கரம் சுழலும் என்றும் . . .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் தர்மச் சக்கரம் சுழற்றினார்
சித்தார்த்த புத்தர் - போதித்தார்
உலக மக்களுக்கு அமைதி
 
இருபதாம் நூற்றாண்டில்
இராட்டைச் சக்கரம் சுழற்றினார்
அண்ணல் காந்தி - வழங்கினார்
இந்திய மக்களுக்கு விடுதலை
 
அன்பும் அருளும் அறநெறியும்
கொண்டது உயர்ந்த வாழ்க்கைமுறை
வன்முறைத் தவிர்தலும் இரக்கமும் தொண்டும்
நேர்மையும் அமைதியான வாழ்க்கைமுறை
 
வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது
என்றும் ...
வரலாற்றுச் சக்கரம் சுழல்கிறது
என்றும் ...
புத்தனின் சக்கரம் சுழன்றது
அறத்திற்காக...
காந்தியின் சக்கரம் சுழன்றது
அமைதிக்காக ...
 
அறச்சக்கரம் என்றும் சுழலும்
அமைதிக்காக என்றும் உலகில்
வாழ்க அண்ணல்

 

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு  எழுதியது - அக்டோபர் 2024  
நன்றி: 
சக்தி  - அக்டோபர் 2024
அமைதிச் சக்கரம் சுழலும் என்றும் . . .
https://archive.org/details/sakthi-oct-2024/page/33/mode/2up

 

#சக்தி, #கவிதை, #Themozhi