நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை;
நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை:
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை;
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை:
பண்ணரம்பின் இசை முழுதும் யாழுக்கில்லை:
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்;
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்!
— மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் —